Thursday, 1 August 2024

திருமறை குரான் குரான் அமைப்பு சூராக்கள் அல் முஜாதலா(58) அல்லாஹ் 02082024 வெள்ளி





 திருமறை குரான்

குரான் அமைப்பு
சூராக்கள்
அல் முஜாதலா(58)
அல்லாஹ்
02082024 வெள்ளி
இன்றைய பதிவுக்குப்போகுமுன் சென்ற வார
சுராஹ் அர்ரஹ்மான் (55)பற்றி ஒரு திருத்தம் , விளக்கம் 1
“குர்ஆனில் உள்ள 114 சூராக்களில் இறைவனின் திருப் பெயர் ஒன்றை தலைப்பாகக் கொண்ட ஒரே சூராஹ் இதுதான்”
என்று சொன்னது தவறு
அந்நூர்(24) அல் பத்(26) போன்ற சூராக்களும் இருக்கின்றன
தெளிவு படுத்திய சகோ சகாவுக்கு நன்றி
இன்று சூராஹ் 58 அல் முஜாதலா(வாதிடும் பெண்) பற்றிப்பார்ப்போம்
இந்த சூரா பற்றி விளக்கமாக முன்பே எழுதிஇருக்கிறேன்
இப்போது சுருக்கமாக
லிஹார் எனப்படும் ஒரு கொடுமையான மணவிலக்கு முறையை தடை செய்வது பற்றி வரும் சுராஹ்
நபி ஸல் அவர்களிடம் அவர் துணைவர் லிகார் முறையில் தன்னை மணவிலக்கு செய்து விட்டது பற்றி ஒரு பெண் முறையிட்டு நீதி கேட்கிறார்
இது சமுதாய வழக்கம் இதில் தான் தலைஇட முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இறை வசனம் இறங்குகிறது
58:1. (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
58:2. “உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்
அறியப்படாத ஒரு பெண்ணுக்காக இறைவன் உடனடியாக ஒரு தீர்வு சொல்லிவிட அதனால்- கௌளா பின்ட் தபாலா Khaula bint Tha'laba என்ற அந்தப்பெண் ஒரே நொடியில் சமுதாயத்தில் பேரும் புகழும் பெறுகிறார்
இன்றைய வினா
இந்த 58 ஆவது சுராஹ்வின் அமைப்பில் , வசனங்கள் அமைப்பில் ,இன்னும் குறிப்பாகச் சொன்னால் வசனங்களின் சொல் அமைப்பில் ஒரு சிறப்பு இருக்கிறது
அது என்ன ?
விடை
இந்த சூராவின் அனைத்து (22) ஆயத்துகளிலும் அல்லாஹ் என்ற சொல்
இடம் பெற்றிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
Khatheeb Mamuna Lebbai
ஹசன் அலி
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
இறைவன்இறைவன் நாளைதமிழில் சிந்திப்போம்
26முஹர்ரம் (1) 1446
02 08 2024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment