Saturday, 28 April 2018

மண்ணில் மனம்






திருப்பத்தூர் சீதளி வடகரை தெரு

வண்ணச்சிதறல் 17

மண்ணில் மனம்


இரண்டாண்டு இடைவெளிக்குப்பின் திருப்பத்தூர் பயணம் .சரிவு மாமா பேத்தி  திருமணம்
சென்ற வாரம்தான் ஒரு நீண்ட பயணம் இந்த வாரமும் பயணிக்க வேண்டுமா அதுவும் இந்தக் கோடை  வெயிலில் என்ற எதிர்மறை எண்ணத்தை விரட்டியடித்தது சொந்த ஊருக்குப் போகிறோம் என்ற உற்சாகம்
திருவில் நான் பிறக்கவுமில்லை நீண்ட நாள் வசிக்கவும் இல்லை . சொந்த வீடு இல்லை . மிகச்சில உறவினர் மட்டுமே அங்கு இருக்கிறார்கள்
இதெல்லாம் தாண்டி என்னமோ அந்த ஊரின் மேல் ஒரு பற்று பாசம் மகன் பைசல் பிறந்த ஊர்,.பள்ளி நிறைவு  வகுப்பு படித்த ஊர் .அவருக்கும் மிகவும் பிடிக்கும்
வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பிய தொடரியில் திருச்சி பயணம் .சன்னலோர இருக்கை கிடைத்து விட்டது ,பிறகென்ன கூட்டமும் ஒரு கலகலப்புத்தானே
தொடரியில் கண்ட ஒரு நிகழ்வு
இட்லி வடை விற்றார் ஒரு பெண் . ஒரு இட்லி மூன்றே ரூபாய் வடை ஐந்து ரூபாய். பேருந்து நிற்கும் பெரிய உணவகங்களில் இருபது ரூபாய்க்கு வைக்கும் வடையை விட இது பெரிதாகவே இருந்தது
பயணித்த பெண் ஒருவர் மூன்று வடை கேட்டு இருபது ரூபாய் கொடுத்தார்..
வடை விற்றவரிடம்   .சில்லறை இல்லை , அவர் இறங்கும் இடம் நெருங்கி விட்டது எனவே நான்கு வடைகளைக் கொடுத்தார்
பயணி குரல் எழுப்பினரே பார்க்க (கேட்க) வேண்டும்.. விற்காத வடையைத் தள்ளி விட இப்படி ஒரு தந்திரமா ,? ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு மறு வேலையைப்பார்  என்று அவர் குரல் கொடுத்தது இந்த ஐந்து ரூபாயில்தான் அவர் வாழ்க்கை, சொத்து சுகம் எல்லாம் அடங்கியிருக்கிறதோ என எண்ண வைத்தது
பல பெரிய உணவு விடுதிகளில் நான் பார்த்திருக்கிறேன்,  வெறும் இட்லி கேட்பவர்களுக்கு எதோ இலவச இணைப்பு போல வடையையும் தட்டில்  வைத்துக்கொண்டு வருவார்கள் இட்லியை விட வடை விலை கூடுதலாக இருக்கும்
 கூச்சமா இல்லை இழுக்கும் வடை மணமா தெரியவில்லை பெரும்பாலானவர்கள் வடை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்
அது போக பத்து ரூபாய்குக் குறையாமல் டிப்ஸ் வேறு
நாலு வடையைக் கொடுத்துத்தானே இருபது ரூபாய் கேட்டார். அதற்குஇவ்வளவு கடுமை தேவையா!
புதுக்கோட்டையை நெருங்கிய உடனே சொந்த ஊர் வந்தது போல்  மூச்சில் ஒரு சக்தி பிறநது களைப்பெல்லாம் காணாமல் போய்விடுகிறது
திரு வந்து விடுதியில் கைகால் முகம் கழுவிவிட்டு திருமணக்கூடம் சென்றோம்
சென்ற வாரம் சந்திக்காத , சந்தித்த பல உறவுகளின் சந்திப்பு இங்கே
குறிப்பாக மைத்துனர் சிராஜுதீன்
திருமண விருந்தில் கூடவே இருந்து அவர்தான்( அவர் மட்டும்தான் ) உபசரித்து கவனித்து சாப்பிடச் சொன்னார்  

துணைவியின் உடன்பிறப்புகள் ஒரு இடத்தில் கூடினால் சொத்துப்பங்கீடு பற்றி பேசவேண்டும் என்பது ஒரு மரபு .. அது இங்கேயும் நடந்தது
ஜூன் மாதம் நடக்கும் மண விழாவில் இது பற்றி அடுத்துப்பேச தீர்மானிக்கபட்டது (ஆண்டு குறிப்பிடப்படவில்லை )
திருமணத்தில் விருந்து உண்டபின் விடுதியில் போய் ஓய்வு எடுத்தோம் மாலைமைத்துனர் சிராஜுதீன் அறைக்கு வர வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.பிறகு இரவு உணவுக்கு கிளம்பினோம்
திருவில் புகழ்பெற்ற அசைவ உணவகத்தில் புரோட்டா குருமா மிகவும் சுவையாக இருந்தது கடந்த காலமாகிவிட்டது. முன்பு இருமுறை போய் சுவையில் ஏமாந்தோம்
அண்மையில் துவங்கபட்ட மற்றொரு உணவகம் போனோம் சிறிய உணவகம்தான் இருந்தாலும் .ஓரளவு பழைய சுவையை உணர முடிந்தது
காலை பத்து மணிக்கு திருச்சியில் தொடரியைப் பிடிக்கவேண்டும் எனவே ஆறு மணிக்கெல்லாம் விடுதியிலிருந்து புறப்பட்டோம்
திருப்பத்தூரில் இருந்தது மொத்தத்தில் அரை நாள்தான் .அதிலும் பாதி தூக்கத்தில் கழிந்தது .பெரிதாக சுற்றம் நட்புகளை சந்திக்கவும் இல்லை .இன்னும் சொல்லப்போனால் அங்கு இருந்த நேரத்தை விட பயண நேரம் அதிகம் . .இருந்தாலும் பிறந்த மண்ணின்   இனிமையும்  மனதுக்கும் உடலுக்கும்  தரும் உற்சாகமும் மறக்க முடியாததுதான்
எனவே தொடரியில் கண்ட பல சுவையான நிகழ்வுகளை வேறு பகுதிக்கு ஒதுக்கி வைத்து விட்டு மண்ணில் மனம் ஒன்றிய சுவையோடு இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
மூளைக்கு வேலை
1459+1= 1500
எப்படி ?
இதுதான் சென்ற வாரப்புதிர்
நேரக்கணக்கு இது 14மணி  59நிமிடம்(2  59) +1  நிமிடம் = 15 மணி  (3 மணி)
 சரியான விடை  எழுதிய ஒரே ஒருவரான (அதுவும் உடனே)
பேரன் பர்வேசுக்கு
பெருமிதம் நிரம்பிய பாராட்டுக்கள்
இனி
இந்த வாரப்புதிர்
 வரும் ஆனால் வந்து சேராது
அது என்ன ?
இ(க)டைச்செருகல்
திருப்பத்தூரில் நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) யாரும் இல்லை ,இருக்கவும் முடியாது என்கிறார்கள் .இவ்வளவுக்கும் நகரத்தார் நிறைய இருக்கும் ஊர்கள் பலவும் திருப்பத்தூரின் அண்மையில் இருக்கின்றன

இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்


வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

Islam and Yoga 39




Islamic Prayer

Prayer Call –Adhan

From mosques all over the world, prayer call is recited 5 times a day. For the sake of unity the call is recited only in Arab Language
It is said that each and every second day and night the call is being recited in the world
Prayer Call in Arabic with meaning

https://www.youtube.com/watch?v=fe8qRj12OhY

In the Holy Mosque in Mecca and Madina Prayer call is recited for special late night prayer called Thahajjath  daily

The  distinction of reciting Prayer Call from the Holy Kabha  for the first time was conferred on Hazarath Bilal  a negro  overriding all higher caste leaders . By this Islam established social justice by abolishing caste difference 

Rest in next week next part
Share if you like


Tuesday, 24 April 2018

இசுலாமும் யோகக்கலையும் 39



இசுலாமிய இறைவணக்கம்


பாங்கு எனப்படும் தொழுகைக்கான அழைப்பு (அதான்)

ஐவேளைத் தொழுகைக்கும் அழைப்பு பள்ளிவாசலில் ஒலிக்கும் .உலகெங்கும் அரபு மொழியில் மட்டுமே பாங்கு ஒலிக்கிறது .இருபத்தி நாலு மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் உலகின் எதாவது ஒரு பகுதியில் பாங்கு ஒலித்துக்கொண்டே இருக்குமாம்

பாங்கின் வரிகள்

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்) நான்கு முறை

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என சாட்சி கூறுகிறேன்) இரண்டு முறை

     அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என் சாட்சி கூறுகிறேன்) இரண்டு முறை

ஹை யா லஸ்ஸ்லாஹ் –(தொழுகையின் பக்கம் விரையுங்கள்) இரண்டு முறை

     ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்) இரண்டு முறை

     அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்) இரண்டுமுறை

     லா இலாஹல்லல்லாஹ்—(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை)


அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்காவிலும் மதீனாவிலும் பின்னிரவு நேரத் (தஹஜ்ஜத்) தொழுகைக்கும் பாங்கு சொல்வார்கள்
புனித ஆலயமான காபாவில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் அசரத் பிலால் என்ற ஆப்ரிக்க இனத்தவர். உயர்குலதினர் யாருக்கும் கிடைக்காத இந்தப்பெருமையை ஒரு கருப்பினத்தவருக்குக் கொடுத்து சமூக நீதியை நிலை நாட்டியது இசுலாம்


மற்றவை அடுத்த வாரம்
பிடித்தால் பகிரவும்  .    .   ,

Friday, 20 April 2018

Islam and Yoga 38




Islamic Prayer and Yogasanas  10

Positions of Islamic Prayer corresponding to Yogasanas
First two pictures show starting position of Prayer. These correspond to Tadasana the starting standing position in yogasana
Third Picture shows Ruku Position. It resembles spinal stretch
4th and fifth show Sajda position resembling ardha sirasasana  and balasana  

Rest in next part
Share if you like




   1 2 3            4                      5
6         7 8
                  9                                            10                                            11                                            12



Monday, 16 April 2018

இசுலாமும் யோகக்கலையும் 38

  

இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 10

 .    .   ,
ஆசனங்களுக்கு ஒப்பான தொழுகை நிலைகள்முதல் இரண்டு படங்களும் தொழுகையின் ஆரம்ப நிலையாகும்.இவை ஆசனத்தின் நிற்கும் நிலையான தடாசனாவை ஒத்திருக்கின்றன    
                                                                                                 
மூன்றாம் படம் ருக்கு நிலை முதுகுத்தண்டை இழுக்கும் ஆசனங்களை போலிருக்கிறது நான்கு ஐந்து ஆறாம் படங்கள் சஜ்தா நிலை அர்த்த சிரசானம் பாலாசனம் போல் அமைந்துள்ளது  aஐந்தாம்        படம் இருப்பு நிலை- வச்சிராசனம் போல் தோன்றுகிறது        தொடர்ச்சி அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்                                                                                                                                                                                               

Saturday, 14 April 2018



வண்ணச்சிதறல் 15

இலக்கியம் மாறுதோ

! https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTb62Xuhck-HPR-B3CTX3KAjW34dvz2CK51c7I0iz24Z9tYJtF0


ஏதோ கம்பன் , வள்ளுவன், இளங்கோ பற்றியெல்லாம் எழுதப்போகிறேன் என்று கற்பனை செய்து படிக்கத் தயங்க வேண்டாம் .
இது முழுக்க முழுக்க திரைஇசைப்பாடல்கள் பற்றிய பதிவு.
எனக்குத் தெரிந்ததைப் பற்றித்தானே நான் எழுத முடியும் !
இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. காலையில் கூவும் பறவைகள் ஒலி ஒரு உற்சாகத்தை யாருக்கும் தரும்.
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல என்ற பாட்டின் துவக்க இசையக்கேட்டாலே மனம் அந்தப்பாட்டில் ஒன்றி விடும்
சரி இலக்கியத்துக்கும் திரை இசைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? அதுதான் சொன்னேனே எனக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வவளவுதான்.
கண்ணில் மணிபோல மணியின் நிழல் போல என்ற வரிகளில் உள்ள உவமையில் எனக்கு இலக்கியம் இலக்கணம் எல்லாம் தெரிகிறது
அதே போல் சிறகில் எனை மூடி அருமை மகள் போல என்பதும்
அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஓன்று நிலவும் மலரும் பாடுது
ஒரு வரியை வினாவாக  நாயகன் பாட அதற்கு விடை சொல்லும் நாயகி அடுத்து நாயகன் கேட்ட வினாவைத் திரும்பப்பாடுவார். அதற்கு நாயகன் வேறு விடை சொல்லுவார்
நாயகன்- முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா?
நாயகி: இன்று பார்த்துப்பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா?
நாயகன் கணை தொடுத்து தொடுத்து விரட்டும் கண்ணால்
பார்க்கலாகுமா ? 
இதற்கு என்ன இலக்கணக்குறிப்பு என்பது எனக்கு தெரியாது  அனால் நல்ல இலக்கிய நயத்தை உணர முடிகிறது
“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகளின் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள தொடர்ந்து வந்தால் -------“
என்று அந்தாதிப் பாடலையும் திரையில் கேட்டோம் .
இன்னொரு அந்தாதிப்பாடல்
“ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடியின்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரகண்ணில் ஊறவைத்த ------ “
“உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்கின்றாயே “
என்ற வரிகளில் (சற்று பழமையான பாடல்)
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
என்ற திருக்குறளின் தாக்கம் தெரிகிறது
தமிழ் சொல் விளையாட்டை
“அத்திக்காய் காய் காய் “என்ற பாட்டிலும்
“ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக” என்ற பாட்டிலு,ம் கண்டு களித்தோம்
சாப்பாட்டுப்பிரியர்களுக்கு “கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் “
இல்லறத்தின் மாண்பு
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”
“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் “
“தாயின் வாழ்வு மறைந்த்போனால் தந்தைகென்று யாருமில்லை “
இல்லறத்தில் சற்று விரிசல் வரும்போது
“நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது?”
பள்ளி ,கல்லூரி வாழ்வு நிறைவடைந்து பிரியும்போது
“பசுமை நிறைந்த நினைவுகளே “


பிரிவுத்துயரை வெளிப்படுத்தும்
“எட்டடுக்கு மாளிகையில்ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச்சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி –
கையளவு உள்ளம் வைத்து கடல்போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி “
“பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி “
“இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஓன்று மறந்து வாழ ஓன்று”
என்ற அழாகான வரிகள்
“வாராய்என் தோழி வாராயோ “ என்ற பாடலின் சில வரிகள் சற்று விரசமா இருந்தாலும் கவிஞரின் சொல் நயத்திற்காக அந்த வரிகளை வெட்டாமல் விட்டதாக தணிக்கை குழு அதிகாரி தெரிவித்தார்
தத்துவங்கள் பாமர மக்களுக்கும் புரியும்படி சொலவதில் திரை இசைப்பாடல்களின் பங்கு போற்றத்தக்கது 
“கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் “
“வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது “
“அலைகள் இருந்தாலும் படகு அடித் தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் கலந்து வரும்
அந்த சுகத்தில் மயங்கி விடு இன்பச் சுவையில் உறங்கி விடு
இந்த உலகை மறந்து விடு என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே “
இப்படி பழைய பாடல்களின் பெருமை பேசிக்கொண்டே போனால் புதிய பாடல்கள் எதுவும் சொல்லும்படி இல்லையா என்று கேட்பது புரிகிறது
புதிய பாடல்களின் பெரிய குறை இனிய இசையைக் காணவில்லை . ஓசை அதிகம் . சொற்கள் புரிவதில்லை அதனால் எனக்கு மனதில் பதியவில்லை .
சில புதிய பாடல்களில் ஒரு சொல்லோ சொற்றொடரோ சலிப்பூட்டும் அளவுக்கு திரும்பத்திரும்ப ஒலிப்பதைக்க கேட்க முடிகிறது .அப்படி அந்த சொல்களில் புதுமையோ பெரிய பொருளோ இல்லை
“என் முன்னாள் காதலி”
“இதற்குத்தானா ஆசைபட்டாய்””
“முயல்குட்டி:”
இவை இந்த வகைப்படல்கள்
இதற்கு மாறாக தேன் என்ற சொல்லை பலமுறை பயன்படுத்தி ஒரு இனிமையான பழைய பாடல்
“”பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் “
“எனக்குப்பிடித்த பாடல்:”
“புத்தம்புது காலை”
இவையெல்லாம் புதிய(?) பாடல்களில் எனக்குப் பிடித்தவை
பழைய பாடல் எல்லாமே இனியவை என்றும் சொல்ல முடியாது
“லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ணெய் ஸ்டவ்வு “
போன்ற அபத்தமான பாடல்களும் உண்டு
“மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் “(ஆண் மயிலுக்குத்தானே தோகைஇருக்கும்)
“தென்னை வனத்தினில் “(தென்னந்தோப்பு தானே சரி)
“கங்கைக்கரை தோட்டம் கன்னிபெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” (கண்ணன் இருந்தது யமுனை நதிக்கரை )
போன்றசொல்குற்றம் பொருள் குற்றம் உள்ள பாடல்களும் உண்டு
மாறுபட்ட,புதுமையான இசை, படப்பிடிப்பு உள்ள இனிய பாடல்கள் சில
“மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே””
“அம்மம்மா கேளடி தோழி”
“ரகசியம் பரம ரகசியம் “
“லவ் இஸ் பைன் (நானொரு காதல் சந்நியாசி)
“பார்த்த ஞாபகம் இல்லையோ”
“உன்னை ஓன்று கேட்பேன் “
“பச்சை மரம் ஓன்று இச்சைக்கிளி ரெண்டு “ என்ற பாட்டை தூர்தர்சன் தேசிய ஒளிபரப்பில் பார்த்து, கேட்டு பீகார் வங்கி ஊழியர்கள் மிக இனிமையான இசை என்று பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது
இந்தித்திரைப்படம் ஆராதனா பாடல்கள் – “சந்தா ஹே து” “கோரா காகசுக்கா”
“மேரே சப்னம் கி ராணி”
மலையாளம் செம்மீன் படப்பாடல்கள் “கடலின் அக்கர போனிரே “
இன்றும் மனதில் நிற்கும் இனிமையான மென்மையான பாடல்கள்
வானொலியின் இடத்தை தொலைக்காட்சி பிடித்துக்கொண்டது ஒரு பெரிய இழப்பு. அடுத்த அறையில் இருந்தும், படுக்கையில் படுத்துக்கொண்டும் வானொலி கேட்கலாம் .
முன்பெல்லாம் சென்னை வானொலி நிலையத்திலும் , இலங்கை வானொலியிலும் இரவ பத்து மணி முதல் பதினொன்று வரை இனிமையான திரைப்பட்ல்கள் ஒலிக்கும்
இப்போதும் இசைக்கென்றே தனியாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன
ஆனால் அவற்றில் பெரும்பகுதி நேரத்தை வணிக விளம்பரங்கள் விழுங்கி விடுகின்றன
இசை அனுமதிகப்பட்டதா தடை செய்யப்பட்டதா என்றெல்லாம் சிந்திக்காமல் மனதில் தோன்றியதை அப்படியே எழுதி நிறைவு செய்கிறேன்
மூளைக்கு வேளை
சென்ற வாரப்புதிர்
மும்பை புறநகர் பகுதியில் நிகழ்ந்த ஒரு கொலையின் காவல் துறை பதிவு
கொலையுண்டவர் ஒரு ஆண் 09 11.2016 புதன்கிழமை 1235 மணியளவில் அவர் வீட்டில் கொலை செய்யப்படுகிறார் .மாலை 3,22 க்கு கொலையுண்டவரின் மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து எல்லோரிடமும் விசாரணை செய்கிறார்கள் .விசாரணையில் கிடைத்த தகவல்கள்
மனைவி- : நான் தூங்கிக்கொண்டிருந்தேன்
மகன் : தோழியுடன் திரைப்படம் சென்றிருந்தேன்
அண்டை அயலார்:: ஒரு திருமணத்திற்குப் போய்விட்டோம்
வண்டி ஓட்டுனர் : பணம் எடுக்க பணப்பொறிக்குப்  போனேன்
சமையல்காரர் : மதுக்கடைக்குப் போயிருந்தேன்
தோட்டக்காரர் அந்த நேரம் முழுதும் நான் தோட்டத்தில்தான் இருந்தேன்.எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை.
காவலாளி : உறவினர் திருமணத்துக்குப் போனேன்
காவல்துறை உடனே குற்றவாளியை இனம் கண்டு கைது செய்கின்றனர்
யார் குற்றவாளி ? எப்படிக்கண்டு பிடித்தார்கள் ?
விடை
வண்டி ஓட்டுனர்தான் குற்றவாளி .பணமதிப்பு நீக்கத்தின் தொடர்ச்சியாக நாடெங்கும் வங்கிகள், பணப் பொறிகள் முடக்கி வைகப்படிருந்தன (09 11 2016)
சரியான விடையை முதலில் அனுப்பிய
ரசூலாவுக்கும்  
இரண்டாவதாக அனுப்பிய
சேக் பீருக்கும்
பாராட்டுக்கள்
இரண்டு நாள் கழித்து சரியான விடை அனுப்பிய
இதயத்துக்கு ஆறுதல் பாராட்டுக்கள்

இனி இந்த வாரப்புதிர்
ஒரு தாய்க்கு ஒரே நாள் ஒரே நேரம் ஒரே மாதம் ஒரே ஆண்டில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன . ஆனால் அவை இரட்டைப்பிள்ளைகள் இல்லை
எப்படி ?

இ(க)டைச்செருகல்
சிறிய வயதில் அடிகடி கேட்ட பாடல் ஓன்று நெஞ்சில் ஓடிகொண்டே இருந்தது .பாடல் வரிகள்( “நெஞ்சம் அலைமோதவே “ குரல் – பீ.பீ சீனிவாஸ் நினவிருந்தன .பாடலின் நெஞ்சை நெகிழ வைக்கும் இசையும் நினைவில் இருந்தது
ஆனால் படத்தின் பெயர் தெரியவில்லை .தொலைக்காட்சியிலும் அந்தபாடல் ஒலிப்பதில்லை .
ஒரு நாள் வலைத்தளத்தில் தற்செயலாக அந்தப்பாடல் கண்ணில் பட்டது .படம் 1958 ல் வெளியான மண மாலை (எனக்கு எட்டு வயசு) படம்
பலமுறை கேட்டு மகிழ்ந்தேன் மகிழ்கிறேன்
இறைவன்
நாடினால்
மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்