இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 8
இருப்பு நிலை ஆசனங்கள்
யோகாசனத்தின் இறுதி இலக்கு எளிதாக அமர்ந்து
தியானத்தில் ஈடு படுவதாகும்.
ஸ்திரம்
சுகம் ஆசனம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்..எனவே தியானத்தில் அமரும் இருப்பு
நிலை ஆசனங்கள் மிக முக்கியமானவையாகும்..
தியான நிலை ஆசனமான வச்சிராசனம் தொழுகையின்
இருப்பு நிலையை மிகவும் ஒத்திருக்கிறது என்று சித்தானந்த சுவாமிகள் யோகா
ஆசனா என்ற நூலில் கருது தெரிவித்து இருக்கிறார்கள். இதே கருத்தை நிசாமியும்
தெரிவித்துள்ளார்., மேலும் கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர்வதால்
தொழுபவர்களுக்கு பத்மாசனம் மிக எளிதாக வரும்..
தொழுகையின் இருப்பு நிலையில் ஆட்காட்டி விரலை
நீட்டுவது யோகா முத்திரையை ஒத்திருக்கிறது
முதுகுத்தண்டை முறுக்கும் ஆசனங்கள்
யோகாசனங்கள் முடிந்து ஓய்வு நிலைக்குப்போகுமுன்
முதுகுத்தண்டை இரு பக்கமும் வளைத்து சமநிலைப்படுத்தும் அர்த்த மட்சியேந்திர
ஆசனம் செய்வது உண்டு. இதர் போல் தொழுகையின் இறுதியில் கழுத்தை இரு பக்கமும்
திருப்பி சலாம் கொடுக்கப்படுகிறது. . அர்த்த மட்சியேந்திர ஆசனம்
அளவுக்கு இல்லாவிட்டாலும் மிக எளிதான இந்த சலாம் கழுத்து இறுக்கத்தைப் போக்க
பெரிதும் உதவுகிறது
தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்
No comments:
Post a Comment