Saturday, 14 April 2018



வண்ணச்சிதறல் 15

இலக்கியம் மாறுதோ

! https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTb62Xuhck-HPR-B3CTX3KAjW34dvz2CK51c7I0iz24Z9tYJtF0


ஏதோ கம்பன் , வள்ளுவன், இளங்கோ பற்றியெல்லாம் எழுதப்போகிறேன் என்று கற்பனை செய்து படிக்கத் தயங்க வேண்டாம் .
இது முழுக்க முழுக்க திரைஇசைப்பாடல்கள் பற்றிய பதிவு.
எனக்குத் தெரிந்ததைப் பற்றித்தானே நான் எழுத முடியும் !
இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. காலையில் கூவும் பறவைகள் ஒலி ஒரு உற்சாகத்தை யாருக்கும் தரும்.
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல என்ற பாட்டின் துவக்க இசையக்கேட்டாலே மனம் அந்தப்பாட்டில் ஒன்றி விடும்
சரி இலக்கியத்துக்கும் திரை இசைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? அதுதான் சொன்னேனே எனக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வவளவுதான்.
கண்ணில் மணிபோல மணியின் நிழல் போல என்ற வரிகளில் உள்ள உவமையில் எனக்கு இலக்கியம் இலக்கணம் எல்லாம் தெரிகிறது
அதே போல் சிறகில் எனை மூடி அருமை மகள் போல என்பதும்
அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஓன்று நிலவும் மலரும் பாடுது
ஒரு வரியை வினாவாக  நாயகன் பாட அதற்கு விடை சொல்லும் நாயகி அடுத்து நாயகன் கேட்ட வினாவைத் திரும்பப்பாடுவார். அதற்கு நாயகன் வேறு விடை சொல்லுவார்
நாயகன்- முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா?
நாயகி: இன்று பார்த்துப்பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா?
நாயகன் கணை தொடுத்து தொடுத்து விரட்டும் கண்ணால்
பார்க்கலாகுமா ? 
இதற்கு என்ன இலக்கணக்குறிப்பு என்பது எனக்கு தெரியாது  அனால் நல்ல இலக்கிய நயத்தை உணர முடிகிறது
“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகளின் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள தொடர்ந்து வந்தால் -------“
என்று அந்தாதிப் பாடலையும் திரையில் கேட்டோம் .
இன்னொரு அந்தாதிப்பாடல்
“ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடியின்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரகண்ணில் ஊறவைத்த ------ “
“உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்கின்றாயே “
என்ற வரிகளில் (சற்று பழமையான பாடல்)
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
என்ற திருக்குறளின் தாக்கம் தெரிகிறது
தமிழ் சொல் விளையாட்டை
“அத்திக்காய் காய் காய் “என்ற பாட்டிலும்
“ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக” என்ற பாட்டிலு,ம் கண்டு களித்தோம்
சாப்பாட்டுப்பிரியர்களுக்கு “கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் “
இல்லறத்தின் மாண்பு
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”
“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் “
“தாயின் வாழ்வு மறைந்த்போனால் தந்தைகென்று யாருமில்லை “
இல்லறத்தில் சற்று விரிசல் வரும்போது
“நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது?”
பள்ளி ,கல்லூரி வாழ்வு நிறைவடைந்து பிரியும்போது
“பசுமை நிறைந்த நினைவுகளே “


பிரிவுத்துயரை வெளிப்படுத்தும்
“எட்டடுக்கு மாளிகையில்ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச்சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி –
கையளவு உள்ளம் வைத்து கடல்போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி “
“பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி “
“இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஓன்று மறந்து வாழ ஓன்று”
என்ற அழாகான வரிகள்
“வாராய்என் தோழி வாராயோ “ என்ற பாடலின் சில வரிகள் சற்று விரசமா இருந்தாலும் கவிஞரின் சொல் நயத்திற்காக அந்த வரிகளை வெட்டாமல் விட்டதாக தணிக்கை குழு அதிகாரி தெரிவித்தார்
தத்துவங்கள் பாமர மக்களுக்கும் புரியும்படி சொலவதில் திரை இசைப்பாடல்களின் பங்கு போற்றத்தக்கது 
“கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் “
“வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது “
“அலைகள் இருந்தாலும் படகு அடித் தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் கலந்து வரும்
அந்த சுகத்தில் மயங்கி விடு இன்பச் சுவையில் உறங்கி விடு
இந்த உலகை மறந்து விடு என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே “
இப்படி பழைய பாடல்களின் பெருமை பேசிக்கொண்டே போனால் புதிய பாடல்கள் எதுவும் சொல்லும்படி இல்லையா என்று கேட்பது புரிகிறது
புதிய பாடல்களின் பெரிய குறை இனிய இசையைக் காணவில்லை . ஓசை அதிகம் . சொற்கள் புரிவதில்லை அதனால் எனக்கு மனதில் பதியவில்லை .
சில புதிய பாடல்களில் ஒரு சொல்லோ சொற்றொடரோ சலிப்பூட்டும் அளவுக்கு திரும்பத்திரும்ப ஒலிப்பதைக்க கேட்க முடிகிறது .அப்படி அந்த சொல்களில் புதுமையோ பெரிய பொருளோ இல்லை
“என் முன்னாள் காதலி”
“இதற்குத்தானா ஆசைபட்டாய்””
“முயல்குட்டி:”
இவை இந்த வகைப்படல்கள்
இதற்கு மாறாக தேன் என்ற சொல்லை பலமுறை பயன்படுத்தி ஒரு இனிமையான பழைய பாடல்
“”பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் “
“எனக்குப்பிடித்த பாடல்:”
“புத்தம்புது காலை”
இவையெல்லாம் புதிய(?) பாடல்களில் எனக்குப் பிடித்தவை
பழைய பாடல் எல்லாமே இனியவை என்றும் சொல்ல முடியாது
“லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ணெய் ஸ்டவ்வு “
போன்ற அபத்தமான பாடல்களும் உண்டு
“மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் “(ஆண் மயிலுக்குத்தானே தோகைஇருக்கும்)
“தென்னை வனத்தினில் “(தென்னந்தோப்பு தானே சரி)
“கங்கைக்கரை தோட்டம் கன்னிபெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” (கண்ணன் இருந்தது யமுனை நதிக்கரை )
போன்றசொல்குற்றம் பொருள் குற்றம் உள்ள பாடல்களும் உண்டு
மாறுபட்ட,புதுமையான இசை, படப்பிடிப்பு உள்ள இனிய பாடல்கள் சில
“மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே””
“அம்மம்மா கேளடி தோழி”
“ரகசியம் பரம ரகசியம் “
“லவ் இஸ் பைன் (நானொரு காதல் சந்நியாசி)
“பார்த்த ஞாபகம் இல்லையோ”
“உன்னை ஓன்று கேட்பேன் “
“பச்சை மரம் ஓன்று இச்சைக்கிளி ரெண்டு “ என்ற பாட்டை தூர்தர்சன் தேசிய ஒளிபரப்பில் பார்த்து, கேட்டு பீகார் வங்கி ஊழியர்கள் மிக இனிமையான இசை என்று பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது
இந்தித்திரைப்படம் ஆராதனா பாடல்கள் – “சந்தா ஹே து” “கோரா காகசுக்கா”
“மேரே சப்னம் கி ராணி”
மலையாளம் செம்மீன் படப்பாடல்கள் “கடலின் அக்கர போனிரே “
இன்றும் மனதில் நிற்கும் இனிமையான மென்மையான பாடல்கள்
வானொலியின் இடத்தை தொலைக்காட்சி பிடித்துக்கொண்டது ஒரு பெரிய இழப்பு. அடுத்த அறையில் இருந்தும், படுக்கையில் படுத்துக்கொண்டும் வானொலி கேட்கலாம் .
முன்பெல்லாம் சென்னை வானொலி நிலையத்திலும் , இலங்கை வானொலியிலும் இரவ பத்து மணி முதல் பதினொன்று வரை இனிமையான திரைப்பட்ல்கள் ஒலிக்கும்
இப்போதும் இசைக்கென்றே தனியாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன
ஆனால் அவற்றில் பெரும்பகுதி நேரத்தை வணிக விளம்பரங்கள் விழுங்கி விடுகின்றன
இசை அனுமதிகப்பட்டதா தடை செய்யப்பட்டதா என்றெல்லாம் சிந்திக்காமல் மனதில் தோன்றியதை அப்படியே எழுதி நிறைவு செய்கிறேன்
மூளைக்கு வேளை
சென்ற வாரப்புதிர்
மும்பை புறநகர் பகுதியில் நிகழ்ந்த ஒரு கொலையின் காவல் துறை பதிவு
கொலையுண்டவர் ஒரு ஆண் 09 11.2016 புதன்கிழமை 1235 மணியளவில் அவர் வீட்டில் கொலை செய்யப்படுகிறார் .மாலை 3,22 க்கு கொலையுண்டவரின் மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து எல்லோரிடமும் விசாரணை செய்கிறார்கள் .விசாரணையில் கிடைத்த தகவல்கள்
மனைவி- : நான் தூங்கிக்கொண்டிருந்தேன்
மகன் : தோழியுடன் திரைப்படம் சென்றிருந்தேன்
அண்டை அயலார்:: ஒரு திருமணத்திற்குப் போய்விட்டோம்
வண்டி ஓட்டுனர் : பணம் எடுக்க பணப்பொறிக்குப்  போனேன்
சமையல்காரர் : மதுக்கடைக்குப் போயிருந்தேன்
தோட்டக்காரர் அந்த நேரம் முழுதும் நான் தோட்டத்தில்தான் இருந்தேன்.எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை.
காவலாளி : உறவினர் திருமணத்துக்குப் போனேன்
காவல்துறை உடனே குற்றவாளியை இனம் கண்டு கைது செய்கின்றனர்
யார் குற்றவாளி ? எப்படிக்கண்டு பிடித்தார்கள் ?
விடை
வண்டி ஓட்டுனர்தான் குற்றவாளி .பணமதிப்பு நீக்கத்தின் தொடர்ச்சியாக நாடெங்கும் வங்கிகள், பணப் பொறிகள் முடக்கி வைகப்படிருந்தன (09 11 2016)
சரியான விடையை முதலில் அனுப்பிய
ரசூலாவுக்கும்  
இரண்டாவதாக அனுப்பிய
சேக் பீருக்கும்
பாராட்டுக்கள்
இரண்டு நாள் கழித்து சரியான விடை அனுப்பிய
இதயத்துக்கு ஆறுதல் பாராட்டுக்கள்

இனி இந்த வாரப்புதிர்
ஒரு தாய்க்கு ஒரே நாள் ஒரே நேரம் ஒரே மாதம் ஒரே ஆண்டில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன . ஆனால் அவை இரட்டைப்பிள்ளைகள் இல்லை
எப்படி ?

இ(க)டைச்செருகல்
சிறிய வயதில் அடிகடி கேட்ட பாடல் ஓன்று நெஞ்சில் ஓடிகொண்டே இருந்தது .பாடல் வரிகள்( “நெஞ்சம் அலைமோதவே “ குரல் – பீ.பீ சீனிவாஸ் நினவிருந்தன .பாடலின் நெஞ்சை நெகிழ வைக்கும் இசையும் நினைவில் இருந்தது
ஆனால் படத்தின் பெயர் தெரியவில்லை .தொலைக்காட்சியிலும் அந்தபாடல் ஒலிப்பதில்லை .
ஒரு நாள் வலைத்தளத்தில் தற்செயலாக அந்தப்பாடல் கண்ணில் பட்டது .படம் 1958 ல் வெளியான மண மாலை (எனக்கு எட்டு வயசு) படம்
பலமுறை கேட்டு மகிழ்ந்தேன் மகிழ்கிறேன்
இறைவன்
நாடினால்
மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்







No comments:

Post a Comment