Monday, 9 April 2018

இசுலாமும் யோகக்கலையும் 37



இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 9



இப்படி படிப்படியாக விவரிக்கப்பட்ட தொழுகை தொடர்ந்து ஒவ்வொரு நிலையாக மாறிச் செய்யும்போது அங்க அவயங்கள் அனைத்துக்கும் ஒரு நல்ல உடல் பயிற்சியாய் அமைகிறது.
கையை ,காலை எப்படி வைக்கவேண்டும்,, கண் பார்வைஒவ்வொரு நிலையிலும் எங்கே இருக்கவேண்டும் என்பவை துல்லிதமாக வரைரைக்கபட்டுள்ளன .இவற்றை சரியாகக் கடைப்பிடித்தால் கைகால் பிடிப்பு, மூட்டு வலி போன்றவை நன்கு சீராகும். கண் பார்வையும் தெளிவாகும்
முன்பே குறிப்பிட்டது போல் தொழுகையில் ஒரு மன உறுதியோடு தொழுக  வேண்டும். தொடர்ந்து இப்படி செய்யும்போது தொழுகை ஒரு நல்ல மனப்பயிற்சி ஆகிறது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஏக இறைவனைப் பார்ப்பது போல் உணர்தல் இவை ஒரு சிறந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொடுக்கிறது .
பள்ளிவாசலில் போய்த் தொழுவது வலியுறுத்திதிச் சொல்லப்படுகிறது..பள்ளி வாசலில் தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கை கொடுத்து நலம் விசாரிப்பதுண்டு . இது மனித நேயச் செயலாகவும் நல்ல சமூக நலம்  பயப்பதாகவும் அமைந்துள்ளது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் இயல்பான சுவாச மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து தொழுகையை தியானத்துடனும் மூச்சுப்பயிற்சியிடனும் ஒப்பிட வைக்கிறது. .
மொத்தத்தில், தொழுகை முறை   முழுமையான ஒரு நலன்காக்கும் பயிற்சியாய் அமைகின்றனது  இதை முறைப்படி  கடைப்பிடித்தால் மனித வாழ்வில் நிம்மதியும் உடல் நலமும் மன நலமும் ஆன்மீக நலமும் சமூக நலமும் பெற்று இன்ப வாழ்வு வாழலாம்.
 
ஐ.நா. சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் நல வாழ்வு பற்றித் தரும் வறையரை:” சுகவீனமோ ஊனமோஇல்லாமல் இருப்பது மட்டும் நல வாழ்வு அல்ல;முழுமையான உடல் நலம், மன நலம் , சமூக நலம் ,ஆன்மீக நலம் ஒருங்கினைந்ததே முழுமை பெற்ற நல வாழ்வு “   
 தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில் (படங்கள்))
பிடித்தால் பகிரவும்

No comments:

Post a Comment