16 வயதினிலே
தனம் தரும் கல்வி தரும் ---
தளர்வறியா மனம் தரும் –
-நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அபிராமி அந்தாதியில் வரும் ஒரு பாடல் வரிகள் இவை
அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி ஒரு சிறந்த பக்திச்
சிற்றிலக்கியம்
ஒரு பாடலின் நிறைவுப்பகுதி அடுத்த் பாடலின் துவக்கமாக வருவது அந்தாதி
எனப்படுகிறது
நூறு பாடல்கள் கொண்ட ஒரு முழு நூலையும் அந்தாதி முறையில்
அமைத்திருப்பது இயற்றியவரின் தனித்திறமை
மேலும் நிறைவுப்பாடலான நூறாவது பாடலின்
உதிக்கின்றனவே
என்ற நிறைவுச் சொல் முதல் பாடலில் துவக்கச் சொல்லாக
உதிக்கின்ற என்று அமைந்திருப்பது இன்னும் சிறப்பு
கவிஞர் கண்ணதாசன் அபிராமி அந்தாதிக்கு எளிய தமிழில் உரை
எழுதியிருக்கிறார்
அதன் தாக்கமோ என்னமோ ஒரே படத்தில் இரண்டு அழகான அந்தாதிப் பாடல்களை
கவிஞர் கொடுத்திருக்கிறார்.
பதினாறு வயதினிலே படத்தில் அழகு மயிலாக அறிமுகமாகி திரையுலகில் ஒரு
மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ஸ்ரீதேவி . அவர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானது மூன்று முடிச்சு படத்தில்.
சற்று மாறுபட்ட கதை அமைப்புக்கொண்ட மூன்று முடிச்சு எனக்குப் பிடித்த
படங்களில் ஓன்று
அந்தப்படத்தில் இடம்பெற்ற
கவிஞரின் இரண்டு அந்தாதிப் பாடல்களும் மிக இனிமையானவை ,அருமையானவை
முதல் பாடல் ஆடிவெள்ளி என்று துவங்கி அந்தாதி முறையில் ஆறு பகுதிகள்
அமையப்பெற்று சங்கமத்தில் கூடும் என்று நிறைவுறும்
அடுத்தது ரஜனிகாந்த் படகோட்ட கமலும் ஸ்ரீதேவியும் படகில் பயணித்தபடி
பாடும் பாடல்
வசந்த கால நதிகளிலே என்று கமல்
துவங்கி
பூமாலை மணவினைகள் என்று ஸ்ரீதேவி நிறைவு செய்வார்
கமல் தவறி நீரில் விழுந்து தத்தளிக்க அவரைக்காப்பாற்ற முயற்சிக்காகமல்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்
என்று அந்தாதியைத் தொடர்ந்து பாடியபடி ரஜனி படகை இயக்குவது பார்க்கும் நமக்கே அச்சத்தை
உண்டாக்கும்
ஸ்ரீதேவியை மணம் முடிக்கும் ஆசை வெறியுடன் ரஜனி
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்
என்று பாடியபடி வீட்டுக்கு
வருகிறார்
அதற்குள் ரஜனியின் அப்பாவை திருமணம் செய்து ரஜனிக்குத் தாய் என்ற
நிலையை அடைந்த ஸ்ரீதேவி மீண்டும் அந்தாதியைத் தோடர்ந்து
நீரலையில் முடிந்ததெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்த இடம் தாய் மகனாம் சூழ்நிலைகள்
என்று நிறைவு செய்வதில்
கண்ணதாசனின் கவித்திறனும் பாலச்சந்தரின் இயக்கத்திறனும் ஒருங்கிணைந்து
நம்மை மகிழ்விக்கின்றன
,
தமிழ் இலக்கணம் என்றால்
எனக்கு எட்டிக்காய் போல .
.தனது எளிய இனிய திரைப்பாடல்கள் மூலம் அந்தக் கசப்பை இனிப்பாக மாற்றி அதன் வழியே தமிழ் இலக்கியத்தையும்
சுவைக்க வைத்த கவிஞர் கண்ணதாசனுக்கு என் மனமார்ந்த நன்றி
மீண்டும்
அடுத்த வாரம்
Blog
Address
sherfuddinp.blogspot.com
B/F/த
18102018
No comments:
Post a Comment