Friday, 12 October 2018

கதை நேரம் 9 கோலியாத் & டேவிட்





கோலியாத் & டேவிட்


Goliath and David
 பள்ளிப்பருவத்தில் ஆங்கிலத் துணைப் பாடத்தில் படித்த கதை .
இப்போதுதான் தெரிகிறது அது கதை அல்ல வரலாறு என்று
கோலியாத் – (ஜாலுத் ) பயங்கரமான மிகப்பெரிய உருவம் அதேபோல் குணமும் அரக்க குணம்.
மக்களை மிகக் கொடுமைப் படுத்தியும், கொன்றும், அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தும் அநீதம்  செய்து கொண்டிருந்தான். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் தத்தம் வீடு, வாசல்களை விட்டுப் பல திக்குகளிலும் ஓடி ஒளிந்தனர்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது இயற்கை விதி .அதன் படி ஜாலூத்தைக் வெற்றிகொண்டு அழிக்க இறைவன் டேவிடை தேர்வு செய்து அனுப்பினான்  ஜாலூத் தன்னை கொல்ல ஒருவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பக்கத்துணையாக ஒரு பெரும் படையைத் திரட்டிகொண்டு வந்தான்
 தம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் குதிரையைப் பார்த்தான். அதில் ஒரு சிறு மனித உருவம் உட்கார்ந்திருந்தது. குதிரை ஜாலூத்தின் தேர்  இருந்த இடம் வந்ததும் நின்றது. அதிலிருந்து டேவிட்  இறங்கி ஏ ஜாலூத்தே உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னதும் . ஜாலூத்  எள்ளி நகையாடினான்.
தம் கையிலிருந்த மூன்று கற்களையும், கயிறையும் எடுத்துக் காட்டி கயிற்றில் முதல் கல்லை வைத்து கவண் கல்லாக ஜாலூத்தின் தலையை நோக்கி டேவிட் எறிய . அவன் தலையை அது சுக்குநூறாக்கியது.
அடுத்த கல்லை அவன் உடலை நோக்கி எறிய. அது பட்டு அவன் உடல் நெடுஞ்சாண்கிடையாக சாய்ந்தது.
அடுத்த கல்லை படைகளை நோக்கி எறிய. படைகள் அனைத்தும் சிதறி ஓடின. இதில் காலாட்படைகள் மிதிபட்டே அழிந்தது.
அந்த நாட்டு மன்னர்  ஜாலூத்தைக் கொன்ற டேவிடுக்கு  அவர் தாம் வாக்களித்தபடி  தம் அழகிய மகளை திருமணம் செய்து வைத்தார்.  தமது நாட்டிலும் சரிபாதியை கொடுத்தார். இதன்பின் இரண்டுஆண்டுகள் வாழ்ந்தார்.
தமது இறுதிகாலம் நெருங்கி விpட்டதை அறிந்த மன்னர் தம்முடைய மறுபாதி நாட்டையும் டேவிடிடம் ஒப்படைத்து அவரூக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி தம் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார். மன்னர் மறைவிற்குப் பின்னர் டேவிட்  முழு நாட்டுக்கும் மன்னராகி  அந்த நாட்டு சமுதாயத் தலைவராகவும் ஆனார்
முழு நாட்டுக்கும் மன்னராகி சில ஆண்டுகள் பின்பு டேவிடுக்கு நபித்துவத்தை வழங்கி ஜபூர் என்ற மறை நூலையும் வழங்கினான்
எனவே இனிமேல் நபி தாவூத் (அலை) என்றே குறிப்பிடுவோம்
நபி தாவூத் அவர்கள் இறை வணக்கதிலேயே பெரும்பொழுதைக்
கழித்துக்கொண்டிருந்தார்
ஒரு நாள் நபி தாவூத் அவர்களை திடுக்கிட வைக்கும் ஒரு நிகழ்வாக இருவர் சுவர் ஏறிக்குதித்து நபி அவர்களின் தனி அறைக்குள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நபி தாவூத் அவர்கள் முன் வந்து நின்றார்கள்
அவர்கள் யார் ?
எதற்காக வந்தார்கள்- அதுவும் சுவர் ஏறிக்குதித்து ! ?
இந்த நிகழ்வு ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன ?
நபி தாவூத் அலை அவர்கள் வாழ்வில் நிறைய திருப்பு முனைகளையும் இறைவனின் சோதனையையும் சந்தித்தார்கள்
அவற்றில் இரண்டைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்தான் மேலே சொல்லப்பட்ட ஜாலூத் டேவிட் நிகழ்வும் இருவர் சுவர் ஏறிக்குதித்த நிகழ்வும் .
இந்தப்பின் புலத்தில் நபி வரலாற்றை வரும் பகுதிகளில் சுருக்கமாக விரிவாகப் பார்ப்போம்  
மீண்டும் அடுத்த வாரம்
Blog Address
sherfuddinp.blogspot.com
B/F 12102018

No comments:

Post a Comment