Thursday, 4 October 2018

தமிழ் (மொழி) அறிவோம் 15 மூங்கில் இலை மேலே




மூங்கில் இலை மேலே

 

 Image result for கமலை ஏற்றம்


காட்டு ராணி என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகியிருக்கும்
படம் நான் பார்த்த நினவு இல்லை.; பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் என்றும் சொல்லமுடியாது
ஆனால் அந்தப் படத்தில் ஒரு இனிமையான,சொல் சுவை ,இலக்கிய நயம் நிறைந்த ஒரு பாடல் –
மூங்கில் இலை மேலே தூங்கும்
என்று துவங்கும் ,
அண்மையில் அந்தப்பாட்டை வலை தலத்தில் பார்த்துக் கேட்டேன் .  காட்சி அமைப்பு- -காடு, சூரிய ஒளி,விலங்குகள் என மிகச்சிறப்பாக இருக்கிறது .
அதிகம் கேள்விபட்டிராத திவாகரின் இசையில் சுசிலாவின் மயக்கும் தேன்குரல்
மிகச்சிறிய இந்தபாடலுக்கு ஒரு இலக்கியப் பின்புலம் இருப்பது ஒரு செவி வழிச் செய்தி
கம்பன்-
அறிமுகம் தேவை இல்லை என எண்ணுகிறேன்  இருந்தாலும் சில வரிகள் –கவிச்சக்கரவர்த்தி என்று சிறப்பிக்கப்பட்டவர் .வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் என்ற மிகப்பெரும்  காவியத்தை தமிழில் கம்ப இராமாயணமாக மிகச் சிறப்பாக மொழி மாற்றம் செய்தவர் .. தன்னை ஆதரித்த சோழ மன்னனுடன் ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட,
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ என்று பாடி சோழ நாட்டை விட்டு வெளியேறியவர்
 அண்மைக் காலம் வரை பட்டி மன்றங்கள், இலக்கிய மேடைகளில் பேச்சுத் தலைப்பு கம்ப இராமாயணம் சார்ந்ததாகவே இருக்கும் –

 ஒரு நாள் கம்பர்  வயல் வரப்பில் நடந்து போகும்போது ஏற்றப்பாட்டு ஓன்று காதில் விழுகிறது --
“மூங்கில் இலை மேலே தூங்கும் –“
ஆலிலை மேல் கண்ணன் தூங்குவது தெரியும் `
மூங்கில் இலை தூங்குவது யாரென்று அறிய அடுத்த வரியைக் கேட்க கம்பர் காத்து நிற்க, ஏற்றக்காரருக்குப் பசி எடுக்கவே பாட்டை அப்படியே விட்டு விட்டு இறங்கி சாப்பிடப் போய்விட்டார்.
-(-ஏற்றம்- மின்சாரம் இல்லாமல் மாடுகளை வைத்து கிணற்றில் இருந்து  நீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சும் ஒரு அமைப்பு-)
அடுத்த வரி  என்னவென்று ஏற்றக்காரரிடம் கேட்க  மனம் வரவில்லை . கவிச்சக்கரவர்த்தி அல்லவா ?
எனவே ஏற்றக்காரர்  சாப்பிட்டு முடித்து, சற்று இளைப்பாறி திரும்ப ஏற்றத்தில் ஏறும் வரை கம்பர் பொறுமை காக்கிறார்.
ஏற்றக்காரர் பாட்டைத் தொடர்கிறார் :
“மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே “
“ஏற்றப்பாட்டுக்கு எதிர் பாட்டு இல்லை “
என்று மனதளவில் பாராட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி
இந்த இலக்கிய நயம் மிகுந்த வரிகளை திரைப்பாடலில் புகுத்தியது கவிஞர் கண்ணதாசனின் கவித்திறன்
மரங்கள் காற்றில் உரசிக்கொள்வதை
தோளோடு தோள் சேர்த்து நிதமும் சுகம் பெறும் மரங்கள் என்று கற்பனையை ஓட்ட கவிஞரால் மட்டும்தான் முடியும்
பறவையை தோழியாக எண்ணி தலைவனிடம் தலைவி தூது விடுவதாய்ப் பாடலை அமைத்திருக்கிறார்
மீண்டும் அடுத்த வாரம்

Blog Address
sherfuddinp.blogspot.com
B/F 04102018

 https://www.youtube.chttps://www.youtube.com/watch?v=ujtBl7RKFEAom/watch?v=ujtBl7RKFEA

No comments:

Post a Comment