புதிரும் எதிரும்
மூளைக்கு வேலை என்று வண்ணச் சிதறலின் ஒவ்வொரு பகுதியிலும் சில எளிய
புதிர்கள் , வினாக்கள் போட்டு வருகிறேன்
இந்த வாரம் வேறு ஒன்றும் எழுதத் தோன்றவில்லை . எனவே புதிர்களையே ஒரு தொகுப்பாகத் தருகிறேன்
வழக்கம்போல் எல்லாம் எளிமையானவைதான்
01.பெண்கள்
ஆண்ட்ராய்ட் கைப்பேசியை (Android Phone) பயன்படுத்தக்கூடாதாமே !
ஏன் ?
02. தமிழில்
உயிர் எழுத்துகள் பன்னிரெண்டு-
அ,ஆ,இ,ஈ,உ,ஊ.எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ.
இதில் அரபு மொழியில் இல்லாத ஓசைகள் எவை ?
03.திருக்குறளில்
வரும் பழங்களின் பெயர் என்ன?
04. ஆயிரம்
பிறை கண்டவர் என எண்பது வயது அடைந்தவர்களைச் சொல்கிறோம். எப்படி ?
80x12=960
தானே
05. திருமறைக்
குர்ஆன் – அத்தியாயம் 38( சாத்)- வசனம் 24
இதன் தனித்தன்மை என்ன ?
06. நான்கு
வேதங்கள் ரிக், சாம, அதர்வண, யஜுர்
இதில் எதில் இசுலாம் பற்றி முன்னறிவிப்பு உள்ளது ?
07. Minimalism –
இந்தச்சொல்லின் பொருள் என்ன?
08.இந்திய
அரசியல் நிர்ணய சபையின் (Constitution
Assembly) முதல் தலைவர் யார்?
09. 2+2= 5 என்றொரு கோட்பாடு இருக்கிறது .இதற்கு உள்ள ஆங்கிலச் சொல் என்ன?
10.உடலுக்கு
தன்னைத்தானே நோய்களை குணப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்கிறது என்ற கோட்பாடு எந்த வைத்திய முறையில் வருகிறது ?
11. சிவாஜி
நடித்த திருவிளயாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாட்டை எழுதியவர் யார் ?
12..தொடரி-
மேல்நாட்டு மணப்பெண் உடை
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
இவ்வளவு போதும் என எண்ணுகிறேன்
எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை முதலில் சொல்பவருக்கு சிறிய
பரிசும் உண்டு
இ(க)டைச்செருகல்
இந்தக்கேள்விகள் புதிர்கள் எல்லாவற்றிற்கும் இணையதளத்தில் விடை கிடைக்கும்.
அப்படி இணையத்தில் . அகராதியில் தேடும் பழக்கத்தைத் தூண்ட வேண்டும்
என்பதே என் நோக்கம்.
மற்றபடி என் அறிவுத் திறனை வெளிப்படுத்துவதோ உங்கள் அறிவின் அளவை
சோதிப்பதோ அல்ல
சென்ற வார
மூளைக்கு வேலை
பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர் கீழே
போகும்போதெல்லாம் மின் தூக்கியை( Lift) முழுமையாகப் பயன் படுத்துகிறார் .
ஆனால் திரும்பி மேலேவரும்போது பெரும்பாலும் ஆறாவது மாடி வரை மின் தூக்கியில் போய் பத்தாவது
மாடிக்கு நடந்து போகிறார். மழைக் காலங்களில் பத்தாவது மாடி வரை மின் தூக்கியில்
போகிறார்
ஏன்?
இதுதான் சென்ற வாரக் கேள்வி. இதுவும் ஒரு மாற்றுச்
சிந்தனை கேள்விதான்
அந்த மனிதர் மிகவும் குள்ளமானவர் என்பதே சரியான விடை.
மின் தூக்கியில் ஆறாவது பொத்தான் வரைக்கும்தான்
அவருக்கு எட்டும்/.வேறு யாராவது கூட வந்தால் அவர்கள் உதவியுடன் பத்தாவது மாடி வரை
போய்விடுவார்.
மழைக்காலத்தில் தன் கையில் இருக்கும் குடையை வைத்து
பத்தாவது பொத்தனை அழுத்தி விடுவார்
சரியான விடை அனுப்பிய
ஆத்திக்கா
வுக்கு
மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள்
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F /W 07102018
No comments:
Post a Comment