Saturday, 27 October 2018

அத்தாவின் எழுத்துக்கள் என்னுரை





என்னுரை


அத்தா பணி நிறைவுக்குப்பின்  தான் எழுதியவை பேசியவைகளில் சிலவற்றைத் தொகுத்து

கம்பராமயணக் கட்டுரைகள்
என்று ஒரு சிறு நூலாக அச்சிட்டு , அதை வெளியிட முயற்சித்தது நடக்கவில்லை
ஒரு வேலை பதவியில் இருக்கும்போதே முயற்சித்திருந்தால் நூல் வெளிவந்து விற்பனை ஆகி இருக்கும்

மொத்தம் 73 பக்கங்கள் சிறிதும் பெரிதுமாய் பதினேழு கட்டுரைகள்
எல்லாமே கம்பன் பற்றி என்று சொல்வதற்கில்லை . கம்பன், வள்ளுவன் கலிபாக்கள்  பொது அறிவுரைகள் மாணவருக்கு என பலதும் கலந்த ஒரு பூங்கொத்து எனலாம்

இந்த நூலை கட்செவியிலும் முகநூலிலும் வலை நூலிலும் சிறு சிறு பகுதிகளாக வெளியிட இருக்கிறேன் என்று பதிவு செய்தே.ன் . நான் நினைத்துப் பார்க்காத அளவுக்கு உற்சாகமான எதிர் பதிவுகள் வந்தன .நம் மக்களின் இலக்கிய ஆர்வம் இதில் தெரிந்தது

சற்று சிரமமான பணி இது. .நான் எழுதுவது என்றால் கணினியில் உட்கார்ந்து படபடவென்று தட்டி விடுவேன்
ஒரு நூலைப்பார்த்து, படித்து அதை எழுத்து எழுத்தாக சொல் சொல்லாக வரிவரியாக கணினியில் ஏற்றுவது மிகவும் நேரம் பிடிக்கும் சிரமமான ஓன்று

படித்து உள்வாங்கி எழுதினால் அது என் நடையில் வந்து விடும்
அத்தாவின் எழுத்துக்களை அப்படியே தருவதுதான் என் நோக்கம். அதற்கு மேல் வலைப்பதிவில் இந்த நூல் முழுமையாக வரவேண்டும்

நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல் படுத்த இறைவன் அருள் புரிவான்
.சில இடங்களில் இலக்கிய நடை துள்ளி விளையாடும் ,அவற்றிற்கெல்லாம் நான் விளக்கமோ பொருளோ கொடுக்கவில்லை. ஊன்றிப் படித்துப் பொருளுணர்ந்தால் இலக்கியத் தமிழை சுவைத்து மகிழலலாம் .

விரைவில் அத்தாவின் எழுத்தாக்கங்களுடன் சந்திப்போம்
பீ.சர்புதீன்  

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/W            28102018sun


No comments:

Post a Comment