Thursday, 4 October 2018

கதைநேரம் 8 அழகின் ஈர்ப்பு 4



அழகின் ஈர்ப்பு  4https://www.youtube.com/watch?v=iR611FNDTKM


அழகின் ஈர்ப்பு சென்ற வாரத்தில் நிறைவுற்றது என்றுதான் எண்ணினேன் . ஆனால் இறைவன் நாட்டம் வேறாக இருக்கிறது
புனித குர்ஆன் அத்தியாயம் பனிரெண்டை மிகச் சுருக்கமாய் போன பகுதியில் கொடுத்திருந்தேன் .அப்படி மிகச் சுருக்கும்போது அதன் தத்துவம் படிப்பினைகள் எல்லாம் மறைந்து போகின்றன என்று எழுதியிருந்தேன்
நண்பர் கல்யாணசுந்தரம்
முழுமையாகவிரிவாகத்தான் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

கேட்கும் போதே எனக்குள் அந்த உயிரோட்டம்.தானாகவே நிகழ வேண்டும்

என்று கருத்து முகநூலில் பதிவு செய்திருந்தார்
அவருக்குள் அந்த உயிரோட்டம் வரும் அளவுக்கு என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை .
இறைவனிடம் பொறுப்பை சுமத்தி விட்டு முடிந்த அளவு எழுதுகிறேன்

அத்தியாயம் பனிரெண்டு அருளப்பட்டதன் நோக்கங்கள் :

ஓன்று முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதை ஐயமுற மெய்ப்பிப்பது – அதுவும் எதிரிகளுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த செய்திகள் வழியாகவே  எடுத்துக்காட்டுவது

இரண்டு ஏக இறைத் தத்துவத்தை ஏற்க மறுத்து ,முகமது நபி ஸல் அவர்களை கடுமையாக எதிர்த்து பகை உணர்வையும் வெறுப்பையும் கக்கி வந்த குறைஷி குலத் தலைவர்களுக்கு பின் வருமாறு எடுத்துரைப்பது
“ யூசுப் நபி அவர்களிடம் அவரின் உடன் பிறப்புகள் நடந்து கொண்டதைப்போல இன்று நீங்கள் உங்கள் உறவுகளுடன் நடந்து கொள்கிறீர்கள்
ஆனால அந்த உடன்பிறப்புகள் தங்களுக்கு பகையாக நினைத்து கிணற்றில் வீசி எறிந்த அதே யூசுப் நபி அவர்களின் காலடியில் வந்து வீழ்ந்தார்கள்
அதே போல் நீங்களும் இறைவனின் திட்டத்தின் முன் வெற்றி பெற முடியாது
எவரை நீங்கள் அழிக்கத் துடிக்கின்றிர்களோ அதே உறவினருடன் நீங்கள் ஒரு நாள் கருணைப்பிச்சை கேட்கநேரிடும்”

அடுத்து வந்த பத்தாண்டுகால நிகழ்வுகள் இந்த முன்னறிவிப்பு முழுக்க முழுக்க சரியென மெய்ப்பித்து விட்டன

மூன்றாவதாக முந்தைய நபிகள் அவர்கள் பரப்பிய ஏக இறைக்கொள்கையும் முகமது நபி ஸல் அவர்கள் இப்போது பரப்பும் கொள்கையும் ஒன்றுதான் என்பது
நிறைவாக
“இறைவன் எவரை உயர்த்த நாடுகிறானோ அவரை உலகம் முழுதும் ஓன்று சேர்ந்து எதிர்த்தாலும் வீழ்த்த முடியாது .” என்ற கருத்து

என்னால் முடிந்த வரை , எனக்குத் தெரிந்தவற்றை ,நான் படித்து அறிந்ததை, புரிந்ததை சொல்லி விட்டேன்

பிழைகள் விடுதல்கள் இருந்தால். அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனுமாகிய. அந்த ஏக இறைவன் மன்னிப்பான்
இத்தோடு புனிதக் குர்ஆன் அத்தியாயம் பனிரெண்டு –யூசுப் வலைப்பதிவு இணைத்துள்ளேன்  (அரபு ஆங்கிலம்)  

 மீண்டும் அடுத்த வாரம்




Blog Address
sherfuddinp.blogspot.com
B/F      05102018

No comments:

Post a Comment