முருங்கை மரம்
இது மருத்துவக் குறிப்பு அல்ல
நம் கண்ணில் தோட்டத்திலும் தெரு ஓரங்களிலும் படும் செடி கோடி
மரங்களின் மருத்துவ குணங்களை எடுத்துச் சொல்லவே இப்பதிவு
பயன்பாட்டு முறை பற்றி தக்க தகுதி, அனுபவம் பெற்றவர்களின் அறிவுரை
பெற்று அதன்படியே செயல்படவேண்டும்
முருங்கை மரம்
இது தெரியாதவர்கள் யாரும்
இருக்க முடியாது .ஒரு குச்சியை நட்டு வைத்தால் வளர்ந்து மரமாகி விடும்
உரம் எதுவும் தேவை இல்லை என்பது இதன் சிறப்பு .
100% organic
இதன் இலை, பூ, காய், விதை பட்டை பிசின் எல்லாமே சிறந்த மருத்துவ குணம்
கொண்டவை
முருங்கக்காய் சாம்பாரிலும் கறிக்குழம்பிலும் சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்
முருங்கை இலை (கீரை ) உடல் சூடு, கைகால் வலி, அசதிக்கு சளிக்கு நல்ல மருந்தென்பார்கள்
முருங்கை பட்டை உடலில் உள்ள வீக்கங்களை வற்ற வைக்கும் குணமுடையது
பொதுவாக முருங்கை இலை, பூ. காய், விதை பிசின் எல்லாம் ஆண் பெண்
மலட்டுத்தன்மை நீக்குவதில் நல்ல மருந்தாகச் சொல்லப்டுகிறது
மேலும் உடல் வலிமை தாய்ப்பால் சுரப்பு, வாய்ப்புண், வயிற்றுப்புண்
போன்ற பலவற்றிற்கும் முருங்கை மரத்தில் உள்ள எல்லாமே நல்ல மருந்து
விலை மலிவாக இருப்பதால் அதன் சிறப்பை நாம் உணரவில்லை
ஒருவேளை இணைய விற்பனையில் ஒரு காய் ஒரே டாலர் என்று விற்றால் வாங்கிச்
சாபிடுவோமோ என்னவோ
முதலில் சொன்னபடி தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்தவரின் அறிவுரை பெற்று
பயனடையுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் ஒரு மூலிகை பற்றி அடுத்த பதிவில்
sherfuddinp.blogspot.com
BFW 12022020 Thu
No comments:
Post a Comment