Friday, 28 February 2020

இலவசம் நிறைவு பெறுகிறது சின்னச் சிதறல்கள்


சின்னச் சிதறல்கள்

இலவசம் நிறைவு பெறுகிறது





  அறப்பொருள் விநியோகம்  பற்றி என் கருத்துகளுக்கு முன் ஒரு சிறிய கதை
ஏற்கனவே நான் சொன்னதுதான் .நல்ல செய்திகள், கருத்துகளை திரும்ப சொல்வது, கேட்பது நல்லதுதானே
அர்ச்சுனன் ஒருநாள் கண்ணனிடம் கேட்கிறார்
“ நாங்களும் நிறைய தான தருமங்கள் செய்கிறோம். கேட்பவருக்கு இல்லை என்னாமல் கொடுக்கிறோம்
இருந்தாலும் நீயோ கர்ணனின் தருமத்தையே புகழ்ந்து பேசுகிறாயே இது ஏன்?”
“ நாளை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் என்னிடம் வா. இதற்கு நான் விளக்கம் சொல்கிறேன் “
என்று கண்ணன் சொல்ல, அதன்படி அதிகாலையில் அர்ச்சுனன் கண்ணனை சந்திக்கிறார்
கண்ணன் ஒரு தங்க மலையையும் ஒரு வெள்ளி மலையையும் அர்ச்சுனனிடம் கொடுத்து
“இன்று மாலை சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் மிச்சம் மீதி இல்லாமல் தருமாமாக  கொடுத்து விட வேண்டும் “ என்று சொல்கிறார
ஒரு கோடாரியை வைத்து வெட்டி வெட்டி கேட்போர் கேளாதோர் எல்லோருக்கும் அர்ச்சுனன் கொடுக்கிறார் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் .கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் வாங்கிக்கொண்டு போகிறார்கள்
பொழுது சாயும் நேரம் நெருங்கி விட்டது . இன்னும் அரைவாசி கூட கொடுத்து முடியவில்லை , சூரியன் மறைய இன்னும் சில நிடங்களே இருக்கும் நிலையில் அர்ச்சுனன் தன இயலாமையை ஒப்புகொள்ள கண்ணன் கர்ணனை அழைத்து வரச் செய்கிறார் . வந்த கர்ணனிடம் கண்ணன்
‘சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தருமம் செய்து விட வேண்டும் உன்னால் முடியுமா” என்று கேட்க
கர்ணன் அதற்கு மறுமொழி கூட சொல்லாமல் வழியில் வந்த இருவரை அழைத்து இந்தா இந்தத் தங்க மலை முழுதும் உனக்கு .வெள்ளி மலை உனக்கு “
என்று கொடுத்து ஒரு நொடியில் காலி செய்து விடுகிறார்
கண்ணன் ,கர்ணன் , அர்ச்சுனன் எல்லாம் உருவகப் பெயர்கள்தான் .மிக ஆழமான உளவியல் கருத்துகள் கொண்ட  கதை இது  .
கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னது
மாலைக்குள் இரண்டு மலைகளையும் தருமம் செய்து மூடிக்க வேண்டும் என்பதுதான்
ஒரு ஆளுக்கு இவ்வளவு தர வேண்டும் என்று சொல்லவில்லை . மாலை வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை
ஆனால் அர்ச்சுனன் தனக்குள் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் கொடுக்கவேண்டும் என்று ஒரு வரையறை ஏற்படுத்திக்கொண்டு மாலை வரை கொடுத்துக்கொண்டே இருந்தார்
இதைத்தான் உளவியலில் mental barriers based on assumptions  ஊகங்களைச் சார்ந்த மனத்தடைகள் என்பார்கள்
இப்படிப்பட்ட தடைதான் அரப்பொருள்  விநியோகத்திலும் நிகழ்கிறது
நாமாகவே மனதுக்குள் ஒரு வரையறை வகுத்துக்கொள்கிறோம்.
நாம் என்பதில் நானும் உண்டு
நான் கொடுக்க வேண்டிய தொகையை ஒருவர் அல்லது இவருக்கு மொத்தமாகக் கொடுத்து ஒரு சிறு தொழிலோ வணிகமோ துவங்க உதவும்   மனம் வருவதில்லை நான் நினைத்தாலும் சமுத்தாய  அழுத்தம் குடும்ப அழுத்தம்- உறவினர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் -என் எண்ணத்தை செயல்படுத்த முடிவதில்லை
அதற்கெல்லாம் மேல் வாங்குபவர்களும் ஒரு  முன்னேறும் நோக்கத்தில்  இருப்பது இல்லை . உன்னால் முடிந்ததைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டு என்பதுதான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது
விளைவு ,வாங்குபவர்கள் தொடர்ந்து ஆயுள் சந்தா போல் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள் .போன ஆண்டு கொடுத்து இந்த ஆண்டு கொடுக்காவிட்டால் அவர்கள் வருத்தப்படுவார்களே என்று நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு நம் முழுத் தொகையும் கொடுத்து அவர் வாழ்வில் முன்னேற்றம் கண்டு அடுத்த ஆண்டு அவர் பிறரிடம் வாங்காத அளவுக்கு உயர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு அவரே பிறருக்கு கொடுக்கும் நிலையை அடைவதுதான் உண்மையான சக்காத்தின் அடையாளம் என்று படித்த நினைவு
முயற்சி செய்து பார்ப்போமா ?
இதை முழு மனதுடன் எல்லோரும் செயல்படுத்தினால் ஒரு சிலரையாவது எழ்மை என்னும் வட்டத்துக்கு வெளியே கொண்டு வரலாம்  .
 எனக்கு மனதில் தோன்றிய ஒரு வழி: இறுதியாண்டு பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் ஒருவருக்கு அந்த இறுதியாண்டு படிப்பு செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் .
நல்ல முயற்சிகள் எல்லாவற்றிற்கும் இறைவன் கை கொடுப்பான்
என் கருத்துகளில் பிழை ஏதும் இருந்தால் கருணையே உருவான ஏக இறைவன் என்னை  மன்னிப்பான்
என் கற்பனையில் உருவான ஒரு கல்விக்கூடம் பற்றி எப்போதாவது எழுதுகிறேன் அது கற்பனை மட்டுமல்ல என் ஆசை, நோக்கம் என்றும் சொல்லலாம் 
ஆசை, கற்பனைக்கு வயது எல்லை கிடையாதே !
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்

sherfuddinp.blogspot.com
bfw28022020fri


No comments:

Post a Comment