Friday, 14 February 2020

சின்னச் சிதறல் இலவசம் இலவசம்




இலவசம் இலவசம்


திரு ரகுராம் ராசன் முன்னால் RBI ஆளுநர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்
“கூகிள் தன் வாடிக்கையாளர்களுக்கு  பலப்பல வசதிகளை இலவசமாக வழங்குகிறது . இவற்றின் விலையை யார் சுமக்கிறார்கள் என்பது தெரியவில்லை “
சில நாட்களுக்கு முன் என் பதிவு ஒன்றில்
So there is a price for everything .
என்று எழுதியிருந்தேன்
ஆனால் நடைமுறையில் பல சிறப்பான வசதிகள் முற்றிலும் இலவசமாக் கிடைக்கின்றன. இவற்றை வழங்குபவர்கள் கூகிள் போன்ற வணிக நிறுவனங்கள் இல்லை . எனவே அவற்றின் நோக்கம் , யார் செலவை யார் சுமக்கிறார்கள என்ற ஐயங்களுக்கு இடம் இல்லை
உணவு
அமிர்தசரஸ் பொற்கோயிலில் உள்ள சமையல் கூடம் உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் .என்று அறியபடுகிறது
ஐம்பதாயிரம் பேருக்கு தினமும் சுவையான சுத்தமான உணவு முற்றிலும் இலவசமாக் வழங்கப்படுகிறது .விழா நாட்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை போகும்
சாதி மத பேதம் கிடையாது . வறியவர், செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லை .கூட்டத்துக்குரிய தள்ளுமுள்ளு கிடையாது . யார் வந்தாலும் இன்முகம் கட்டி அமர வைத்து சப்பாத்தி, சப்ஜி என்னும் காய்கறி கூட்டு, சோறு பருப்பு இனிப்பு கொடுக்கிறார்கள்
சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் .சாப்பிடும்  தட்டுகளை ஐந்து முறை கழுவி சுத்தம் செய்கிறார்கள்   
ஒரு நாளுக்குத் தேவை (குவின்ட்டால்(100 கிலோ) அளவில்)
கோதுமை ஐம்பது          பருப்பு பதினெட்டு     அரிசி பதினேழு பால் ஏழு
சமையல் எரிவாயு நூறு உருளைகள் 
கல்வி
புட்டபருத்தி ஸ்ரீ சத்ய சாயி கல்வி நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கல்லூரிக் கல்வி மருத்துவக் கல்வி உட்பட  முற்றிலும் இலவசமாக (உணவு, விடுதி உட்பட) சாதி மத பாகுபாடின்றி  வழங்குவது பற்றி இணையத்தில் பார்த்தேன்
மருத்துவம்
புட்டபருத்தியில் இருக்கும் நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மனையில் , இதய அறுவை, சிறுநீரக மாற்று , நுரையீரல் அறுவை , போன்ற மிகச் செலவு பிடிக்கும் சிகிச்சைகள் முற்றிலும் இலவசம்
திருப்பதியில் உள்ள BIRRD மருத்துவமனையில்
polio , cerebral palsy ,congenital anomalies ,spinal  injuries , and orthopedically handicapped 
iஇவற்றிற்கு ஏழைகளுக்கு முற்றிலும் இலவச மருத்துவம் ,இலவச உணவு இலவச செயற்கை உறுப்புகள்
கல்வி, மருத்துவத்தில் கிறித்தவ பரப்பாளர்களின் பங்கு மிகப்பெரிது
சரி இதெல்லாம்  இப்போது எதற்கு, யார் கேட்டது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது
ஒரு ஐயம் , வினா என் மனதில் வண்டு குடைவது போல் ஒரு குடைச்சல்
அது என்ன ?
இறைவன் நாடினால் அடுத்த பகுதியில்




sherfuddinp.blogspot.com
BFW14022020FRI





\

No comments:

Post a Comment