தொடரும் இலவசம்
வண்டு குடைவது போல் ஒரு வினா, ஐயம் என்று சென்ற பகுதியில்
சொல்லியிருந்தேன்
அது என்ன என்று பார்ப்பதற்கு முன் ஒரு சில செய்திகள்
--இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள் வெறும் மூன்று % மட்டுமே
--பொற்கோயில் உணவு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டவர் பாபா பெரித்
எனும் சூபி முசுலிம் மத பெரியவர் . அதை பின்பற்றி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு
நானக் குருத்வாராக்களில் இதை
நடைமுறைப்படுத்தினார் (செய்தி – தி தந்தி 28122019)
நான் இசுலாமியன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை உண்டு. அந்த மதத்தில்
அறத்தை, தர்மத்தை கட்டாயக் கடமையாக
ஆக்கியிருப்பது ஒரு மிகப்பெரிய சமூக நல, பொருளாதாரப் புரட்சி .
“ உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உனக்கு மட்டும் அல்ல . உன்
தேவைக்கு, உன் குடும்பத்துக்கு தேவையான அளவுக்கு நிறைவாக எடுத்துக்கொள் . அதற்கு
மேல் உள்ளது மற்றவர்களுக்குநீ கொடுக்க வேண்டியது கடமை”
இதுதான் நான் சக்காத், சதக்கா என்னும் தர்மங்கள் பற்றி நான் புரிந்து
கொண்டது
இறைவன் சொல்கிறான், சொல்வதென்ன வாக்குறுதி அளிக்கிறான்
“ மற்றவர்களுக்காக
செலவழிப்பது எனக்கு (இறைவனுக்கு) கொடுக்கும் அழகிய கடன், அதை நான் பன்மடங்காகத்
திருப்பித் தருவேன் “
நூற்றுக்கு இரண்டரை ரூபாய் என்ற கணக்கு சக்காத்துக்கு
சதக்காவுக்கு எல்லையே இல்லை . தேவைக்குப் போக மிஞ்சியிருப்பதெல்லாம்
சதக்கா என்ற தர்மத்துக்குத்தான்
இதன்படி எல்லோரும் வாரி வாரித்தான் வழங்குகிறார்கள்
என்றாலும் எனக்கு ஒரு சிறிய வருத்தம் . இப்படி அள்ளிக் கொடுக்கும்
இசுலாமிய சமூத்தில் ஒரு பெரிய அளவில் கல்விக்கூடமோ, மருத்துவ மனையோ வறியவர்களுக்கு
உதவும் விதத்தில் இலவசமாக இல்லையே இது ஏன?
இல்லை எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கிறதா ?
அப்படி எதாவது இருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்
மதம் சார்ந்த கல்வி மதரசாக்கள், அரபுக்கல்லூரிகளில் முற்றிலும்
இலவசமாக , உணவு, தங்குமிடத்துடன் கொடுக்கப்படுகிறது
இது போதுமா ?
அங்கு படிப்பவர்கள் திருமறை,
மதம் பற்றி ஒரு முழுமையான புரிதல் பெறுகிறார்களா ?
அதிகமாகக் கேள்வி கேட்டால் “குழப்பவாதி “ என்பார்கள்
இருந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை
நான் முதலில் குறிப்பிட்டதுபோல் இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள்
வெறும் மூன்று %
இசுலாமியர்கள் பதினெட்டு %
இலவசமாக் உணவளித்தால் சோம்பேறித்தனம் வளரும் பிச்சசைக்காரர்கள் பெருகி
விடுவார்கள் என வாதிக்கலாம்
சீக்கிய சமுதாயத்தில்
பிச்சசைக்காரர்களே கிடையாது
இசுலாம் பற்றி அப்படி சொல்ல முடியுமா ?
சரி உணவை விட்டு விடுங்கள் .
இலவசக் கல்வி, மருத்துவத்தில் இசுலாத்தின் பங்கு என்ன ?
உலகக்கல்வி வழங்கும் இசுலாமிய கல்விக்கூடங்கள் பற்றி பள்ளியில் தொழுகை
நடத்தும் இமாம்கள் சொன்ன கருத்துக்கள் சில
-
இசுலாமியப்பள்ளி என்று என் மகனை சேர்க்கப்போனேன் .அவர்கள் சொன்ன
கட்டணம் என் ஒரு ஆண்டு ஊதியத்துக்கு மேல். ,போன வேகத்தில் திரும்பி வந்து விட்டேன்
n
எல்லோரும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள்தனே கட்டண சலுகை கிடைக்கும்
என்று குழந்தையை சேர்க்க பள்ளிவாசல்கள் இணைந்து நடத்தும் பள்ளிக்குப்
போனேன்..கட்டணத்தில் சலுகை கிடையாது என்றார்கள . சரி இரு தவணையில் கட்டணம் செலுத்த
அனுமதி கேட்டேன் .அதுவும் முடியாது என்று சொன்னார்கள் . வேறு தரமான கிறித்தவ
பள்ளியில் சலுகையுடன் சேர்த்துக்கொண்டார்கள்
ஏன் இந்த நிலை? என்ன பிரச்சனை நம்மிடத்தில் ? பணம் இல்லையா
பணமிருந்தும் மனம் இல்லையா?
இப்படி அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன
சக்காத்து, சதக்கா விநியோகிக்கும் முறை ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்
என்பது என் கருத்து, இசுலாத்தின் கருத்தும் அதுவே
இது பற்றி சிறிது விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்
இலவசங்கள் பற்றிய வினாக்களுடன் இறைவன் நாடினால் அடுத்த பகுதியில்
சந்திப்போம்
sherfuddinp.blogspt.com
BFW21022020fri
இந்தப்பதிவுக்கும்
முகநூலில் தடை தடை
No comments:
Post a Comment