கறி காய்
முன்குறிப்பு
நெல்லைதமிழ் பற்றி நான் எழுதியிருக்கிறேன்
கொங்கு தமிழ் பற்றியும் பதிவிட்டுருக்கிறேன்
அந்த வரிசையில் இது வேறொன்று
நண்பர்கள் வட்டத்தில் மாற்று மதத்தினரே எனக்கு அதிகம் .
குறிப்பாக நாற்பது ஆண்டு
வங்கி வாழ்ககையில் பல அந்தணர்களுடன்
நெருங்கிய நட்பு
அந்த நெருக்கத்தில் அவர்கள் இயல்பாகப் பயன்படுத்தும் சில தமிழ்
சொற்கள் சற்று மாறுபட்டு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்
அவற்றை இங்கு ஒரு பதிவாகத் தருகிறேன்
மற்றபடி ஒரு இனத்தை கேலி, கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை
என் எழுத்துக்களில் எதுவுமே offensive ஆக இருக்கக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்
இனி அந்தணர் தமிழ் பற்றி
சாத்தமுது – என்னை மிகவும் ஏமாற்றிய ஒரு சொல்
அமுது என்றவுடனே அமுதும் தேனும் எதற்கு, அன்பே அமுதா என்றெல்லாம்
கற்பனை சிறகு விரித்துப்பறக்கும்.
.ஒரு சுவையான இனிப்பான உணவு நாவில் பட்டு தொண்டையில் இறங்குவது போல் உணர்வு
ஏற்படும்
முன்பு என் உறவினர் ஒருவர் நெல்லையில் பாலமுது என்ற சொல்லில் மயங்கி
அது வெறும் சுடுகஞ்சி என்று அறிந்து ஏமாந்தது பற்றி எழுதியிருந்தேன்
அதே போல்தான் சாத்தமுது என்பது ரசத்தை குறிக்கும் சொல்லாம்
அடுத்து சில சொற்களின் மாறுபட்ட ஒலிவடிவங்கள்
காய்கறி கறிகாய் என்று வரும்
அப்பளம் அப்(ப)ளாமாகி விடும் .
அதற்குத் துணையாக வடகம் வடாம் என்றாகும்
வீடு அகமாகி அகம் ஆம் ஆகி வீட்டிலே என்பது ஆத்திலே ஆகிவிடும்
நெல்லைத் தமிழில் ஒலிக்கும் அவாள் இவாள் என்பது இங்கு அவா இவா என்று
வரும்
ஐயங்கார் – ஐய்ங்கார்
சேவிப்பது என்பது கும்பிடுதளைக் குறிக்கும் சொல் என நினைக்கிறேன்
சாணாச் சுருணை – வீடு துடைக்கும் துணி என்று புரிந்திருக்கிறேன் .
இதற்கும் சாணிக்கும் ஏதும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை
கோமியம் – கோ – பசு
அத்தங்கா என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறேன் .பொருள் தெரியவில்லை
சில எழுத முடியாத ஒலிகளும் உண்டு . ன்னா , .ன்னோ என்று ஒலிக்கும்
என் காதில் விழுந்து என் நினைவில் நிற்கும் தமிழ் சொற்களை மட்டுமே
இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்
வலை தலத்தில் தேடினால் இன்னும் நிறைய சொற்கள் கிடைக்கும்.
இறைவன் நாடினால் மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்
என்ன கவனமாக எழுதினாலும் ஒரு இனம் பற்றிய பதிவில் தவறு ஏதும் வந்து
விடக்கூதாது என்று உறுதி செய்ய என் பதிவை நண்பர் திரு (டி பீ கே)கல்யாண
சுந்தரத்துக்கு அனுப்பி வைத்தேன் , அவர் nothing offensive என்று சான்று அளித்ததோடு தன் பங்குக்கு நிறைய
சொற்களும் , விளக்கங்களும் அனுப்பியிருந்தார்
அவருக்கு என் நன்றிகள்
அவற்றை கீழே தருகிறேன்
[15:32, 19/02/2020] CB Retd TPK2: முதலில் காய்கறி... தென் மாவட்டங்களில்
உச்சரிப்பது. வட மாவட்டங்களில்
(சென்னை) கறிகாய்.
ஐயங்கார்கள் வீட்டில் தூய தமிழ்
சொற்களைப். பேசிகிறார்கள்.
அமிர்தம் என்ற சமஸ்கிருதச் சொல்
தமிழில் ..அமுது. அமிர்தம் சாகாத நிலை
தரும். உணவு உயிரைக் காப்பதால் அதை அமுதென
குறிப்பிடுகின்றனர்
சாறு..ரசம். .. சாற்றமுது.
திருக்கண்ணமுது என்பது சர்க்கரைப் பொங்கல்.
சேவிப்பது, தண்டனிடுவது...
ஐயங்கார்..தமிழ்.
வீட்டுத் தரையை சுத்தம் செய்ய முதலில் பசுவின்
சாணியைச் சிறிது கரைத்துத் தெளிப்பர். பிறகு தரை மெழுகித் துடைக்க உபயோகிக்கும்
துணி சாணாத்துணி.
அத்தங்கா..அத்தை மகள்....
.அம்மங்கா.. மாமன் மகள்.
அத்தான்.. அத்தை மகன்.
அம்மாஞ்சேய்...(அம்மாஞ்சி) மாமன்
மகன்.....
.மன்னி... அண்ணி.
அத்தான், அம்மாஞ்சி மனைவி ....
அத்தான் மன்னி, அம்மாஞ்சி மனைவி மன்னி
மாட்டுப்பொண் மருமகள்
[15:36, 19/02/2020] Sherfuddinp: நன்றி
I hope there's nothing offensive
And I can post with your comments
[15:43, 19/02/2020] CB Retd TPK2: ஆமாம். Nothing offensive
[16:18, 19/02/2020]
Sherfuddinp: Thanks once again
இறைவன் நாடினால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
BFW20022020thu
No comments:
Post a Comment