கிப்லா (இறை வணக்கத்தில் ஈடுபடும்போது நோக்கும்
திசை) ஜெருசேலம் நகரிலிருந்து புனித காபாவுக்கு மாற்றப்பட்டது எப்போது, எங்கு,
எப்படி?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
28072020tue
herfuddinp.blogspot.com
நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டுக்கு மதிய உணவுக்கு
விருந்தாளியாகப் போயிருக்கும்போது பள்ளியில் மதிய வேளைத் தொழுகை நடத்துகிறார்கள் .(விருந்து
அளித்தவர் பெயர் Bishr b.
Bara'b. Ma'rur பிஷ்ர் பிபரப் மாரூர்)
தொழுகையின் இரண்டாவது
ரக்கத் முடிந்து மூன்றவது ரக்கத்தின்போது
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி
வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத்
திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது
(மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும்.
(முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள்
முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;.----(2:144)
என்ற இறை
வசனம் திடீரென நபி பெருமானுக்கு அறிவிக்கப்படுகிறது. உடனே ஜெருசேலம் இருக்கும் வடக்கு திசையில்
இருந்து விலகி புனித காபா இருக்கும் தெற்கு நோக்கி திரும்பி தொழுகையை தொடர்ந்து
நடத்துகிறார்கள்
இது ஹிஜ்ரி
இரண்டாம் ஆண்டு ரஜப்// /ஷாபான் மாதத்தில் நிகழ்ந்தது.
நபி பெருமான்
கூட்டுத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள் .எனவே அவரகள் அப்படியே
திரும்பி நிற்க முடியாது .வடக்குத் திசையிலிருந்து தெற்கு நோக்கி நடந்து வந்து
தொழுவோர் முன்னால் நிற்க வேண்டும் . தொழும் கூட்டத்தாரும் தெற்கு பக்கம் திரும்பி
நின்று அணிகளை சரி செய்து கொள்ள வேண்டும்
உங்கள்
முகங்களை அந்த கிப்லாவின் பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்+ என்ற வசனத்துக்கு
உங்களுக்கு
தெரிந்த வரை, முடிந்த வரை சரியான திசையை நோக்கித் தொழுங்கள் . மிகத்துல்லியமாக
அதைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பயணித்துக்கொண்டிருக்கும்போது திசை
அறிவது சிரமமாக் இருந்தால் நாம் நோக்கி அமர்ந்திருக்கும் திசையை நோக்கித் தொழுவது
தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது
கிப்லா
மாற்றம் என்பது ஒரு மிக முக்கிய நிகழ்வாகும் .பனி இஸ்ராயில் என இறைவனால்
பெயரிடப்பட்ட இஸ்ரவேல் கூட்டத்தாரிடமிருந்து உலகத் தலைமைப் பொறுப்பு நீக்கப்பட்டு
அது நபி (ஸல்) அவர்கள் கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது (source
Towards understanding Quran )
கிப்லா மாற்றம்
மாலை (அசர் தொழுகையின்போது நிகழ்ந்தது என்றும் ஒரு கருத்து உண்டு
மதீனாவுக்கும்
உஹதுக்கும் இடையில் உள்ள ஒரு பள்ளியில் கிப்லா மாற்றம் நிகழ்ந்தது இன்றும்
மஸ்ஜிதுல் கிப்லதைன் – இரு கிப்லாக்கள் பள்ளி என்று பாதுகாக்கப்பட்டு வருகிறது
கிப்லா மாற்றம்
பற்றி நான் படித்துப் புரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள்
விடுதல்கள் இருந்தால் கருணை மிக்க இறைவன் மன்னிப்பான்
எல்லாப்புகழும்
அவனுக்கே
29072020wed
No comments:
Post a Comment