ஒரு சிறிய உளவியல் புதிர்
மூன்று நான்கு உறவினர்கள் ஒரு வீட்டில் மதிய உணவுக்கு வருகிறார்கள் .
விருந்து உண்டபின் வீட்டுப் பெண்மணி வெற்றிலை பாக்கு எடுத்து வைக்கப் போகிறார் .
விருந்தாளிகளில் ஒருவர் வீட்டுப் பெண்ணின் உதவிக்கு வருகிறார் . நீ
போய் மற்ற வேலையைப் பார். நான் வெற்றிலை பாக்கு எடுத்து வைக்கிறேன் என்று
சொல்கிறார்
வீட்டுப் பெண் ,” அக்கா மறக்காமல் வெற்றிலையை நன்றாகக் கழுவி
விடுங்கள் “ என்று சொல்கிறார்
அதற்கு அந்த விருந்தாளி என்ன பதில் சொன்னார் ?
இதுதான் கேள்வி .
பெரிதாக சிந்தித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் மனதில்
தோன்றும் பதிலை எழுதி அனுப்புங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சந்திப்போம்
17072020
உளவியல் வினாக்களுக்கு வரும் விடைகள் எதுவுமே தவறு கிடையாது,
விடை அளித்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள் பாராட்டுகள்
திருவாளர்கள்
சிக்கந்தர்
எனக்கு தெரியாதா கழுவி விட்டுத்தான்
வைப்பேன என்பார்
சுந்தரராஜ்
இந்த சின்ன விஷயம் கூட எனக்குத்
தெரியாதா
இரவிராசு
jபதில் இதுவாகத்தான் இருக்கும்...
"அது எனக்கு தெரியாதா !
போய் வேலையை பார் ஆத்தா !"
"போடி எனக்கு சொல்ல வந்துட்டியா !!
எனக்கு தெரியும் "
" போம்மா கண்ணு ! போய் வந்தவங்கள கவனி
தாயீ .."
" நீ போய் உன் வேலையை பார்..... நான் என் வேலையை பாக்கிறேன் அம்மா...."
இது போன்ற அந்தந்த இடங்களுக்கு தகுந்த
வழக்கு சொற்கள் நிறைய நம் தாய் மொழியில் இருக்கிறது......
*எப்படி நம்மால் சொல்ல இயலும் *....
மெஹராஜ் .
jவெற்று(வெறும்) இலையில் என்ன இருக்கு நன்றாகக்கழுவ.ஆனாலும் அது
அழுக்காத்தான் இருக்கும்
அமான் ரபி ஹாஜியார்
வைத்திருக்கும்
வெற்றிலை வாடியும் ,பழுத்தும்
போய் விட்டதே சச்சா
, தண்ணீரில்
ஊர விட்டாலும் பழைய நிலைக்கு வராதே சச்சா!
என்று ஒரு மாறுபாடான விடையை அனுப்பி இருக்கிறார் . அவருடைய மன
நிலை என்ன என்பது ஆராய வேண்டிய ஓன்று . அதை
பின்னால் எப்போதாவது இறைவன் நாடினால் பாப்போம்
இப்போது வீட்டுப்பெண் வெற்றிலை கழுவச் சொன்னதற்கு விருந்தாளி
சொன்ன பதில் என்ன என்று பார்ப்போம்
(சில மாறுதல்களுடன் கூடிய உண்மை நிகழ்வு இது)
“நீயும் உங்கம்மாவும்தான் கழுவ மாட்டீர்கள் . நாங்கள் எல்லாம்
எல்லாவற்றயும் கழுவி விடுவோம் “.
சற்று சிந்தித்துப்பாருங்கள்.
வெற்றிலையை கழுவும் பழக்கம் வீட்டுப்பெண்ணுக்கு
இருப்பதால்தான் விருந்தாளியிடமும் கழுவச் சொல்கிறார்
ஆனால் விருந்தாளியோ வீட்டுப்பெண்ணின் பரம்பரையை வம்புக்கு
இழுத்து இழிவுபடுத்தும் தொனியில் பேசுகிறார் . நாங்கள் -----என்று பெருமை பேசுகிறார்
இது போன்ற சொற்கள் எல்லாம் மனதில் வளர்த்து வந்த வெறுப்பு,
சினம், பகை இவற்றின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள்
வாய் தவறி சொல்லி விட்டேன் – slip of the tongue
என்று சொல்வதும் தவறு:
மனதில் உள்ள
எண்ணங்கள்தான் சொற்களாக வழுக்கி வருகின்றன, மனதில் உதிக்காத
ஒன்றை வாயோ, நாவோ பேசமுடியாது என்பது
உளவியலாளர்கள் கருத்து
இப்போதைக்கு இது போதும்
இறைவன் நாடினால் வேறொரு பதிவில் எப்போதாவது சிந்திப்போம்
17072020fri
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment