யாழினி
அழகான இனிமையான பெண்ணுக்கு அழகான இனிமையான
பெயர். யாழினி என்ற பெயரே மறந்து போய் அழகி என்ற பட்டப் பெயராலேயே அறியப்பட்டவர்
அந்த அளவுக்கு அழகு
மிக எளிமையான குடும்பத்தில் ஒரே மகள். மிகவும்
சிரமப்பட்டு கல்லூரியில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கி விட்டார் தந்தை .
யாழினியின் அழகினால் கவரப்பட்டு அவரை மணம்
முடிக்க முன்வந்தவர்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவர் மாறன் என்ற இளைஞன்.நல்ல
படிப்பு. கை நிறைய சம்பளம். வசதியான குடும்பம் யாழினியின் அழகுக்கு ஓரளவு ஈடு
கொடுக்கும் அழகு, நல்ல குண நலம், ஒழுக்கம்
அவரும் யாழினியும் ஓரளவு
பேசிப்பழகிஇருக்கிறார்கள் .மாறன் மேல் யாழினிக்கு ஒரு ஈடு பாடு உண்டு,.
மாறன் யாழினியின் அப்பாவிடம் நேரடியாகவும் தன
பெற்றோர் மூலமும் முறையாகத் தன விருப்பத்தைத் தெரிவித்தார் . எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் செலவிலேயே திருமணம் நடத்தி யாழினியின் பெற்றோரையும்
பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார்
ஆனால் பெண்ணின் தந்தை இதற்கெல்லாம் மசியவில்லை .
பொருளாதாரம்,வசதியில் உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத இடைவெளி ...உங்கள்
வசதியில் மயங்கி பெண்ணைக் கொடுத்தால் என் தன் மானத்துக்கு பல சோதனைகள் வரும்
.அதற்கு நான் தயாராக இல்லை .என்று வன்மையாக மறுத்து விட்டார்
யாழினிக்கு மனதுக்குகுள் ஒரு ஏமாற்ற உணர்வு
மட்டுமே . ஆனால் மாறனோ மனம் உடைந்து இடிந்து போய்விட்டார் .கண்ணில் நீர்
முட்டிக்கொண்டு வந்தது மிக வெறுமையாக உணர்ந்தார்
யாழினியின் அப்பா தன் வசதிக்கு ஏற்ப ஒரு பையனைப்
பார்த்து மணம் முடித்து வைத்தார் .அறிவுடை நம்பி என்ற அந்த இளைஞன் நிறையப் படித்தவர் ..
அறிவியல். பொருளாதாரம், அரசியல் ,கணிதம் ,, இலக்கியம் இலக்கணம் வேதம் என்று எதுவாக
இருந்தாலும் மிக எளிதான மொழியில் மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில் வல்லவர்
இதனால் எப்போதும் அவர் வீட்டில் மாணவர் கூட்டம்
அலைமோதும் .இதை வைத்தே நிறைய பொருள் ஈட்டியிருக்கலாம் . ஆனால் அவருக்கு ஒரு
கொள்கை. அறிவை வணிகம் செய்து பணம் சம்பாதிக்கக் கூடாது என்று .. யாரவது ஏதாவது கொடுத்தால் அங்கே வைத்து
விட்டுப் போங்கள் என்று சொல்வார் .கை நீட்டி வாங்கிக்கொள்ள மாட்டார் .
வாயைத்திறந்து எதுவும் கேட்க மாட்டார்
கொஞ்சம் நிலமும் ஒரு பழைய காலத்துப் பெரிய
வீடும்தான் அவரது சொத்து .தன் மனதுக்குப் பிடித்த வேலை கிடைத்தால் போவர்,
மொத்தத்தில் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும்
சொல்வதற்கில்லை .நல்ல ஒழுக்கமானவர்
இல்லறம் நல்லறமாகத்தான் போய்க்கொண்டிருந்தது .
ஆனால் யாழினி கனவு கண்ட மாட மாளிகை, மகிழுந்துப் பயணம் ,வெளிநாடு சுற்றுலா.
இதெல்லாம் கைகூடாமல் போனதில் அப்பா மேல் எரிச்சல் ,சினம் ,
நாளாக நாளாக இந்த கனவு, வெறுப்பு சினம் எல்லாம் தன்னை
அறியாமலேயே யாழினிக்கு மாறன் மேல் ஒரு ஈர்ப்பாக மாறியது இது தவறு என்று அறிவு
இடித்துக்காட்டுகிறது ஆனால் மனம் அடங்க
மறுக்கிறது
இப்படி ஒரு நல்ல துணைவனுக்கு மனதால் துரோகம்
செய்வதும் தவறு என உறுத்தல் கொஞ்சம் இருந்தது
காலப்போக்கில் அந்த உறுத்தலும் மறைந்து மாறன்
மேல் உள்ள ஈர்ப்பை ரசித்து சுவைகாணத் துவங்கி விட்டார்
துணைவன் நம்பியின் அறிவுக் கூர்மைக்கு
யாழினியின் எண்ண ஓட்டத்தை நன்றாகப் புரிந்து
கொள்வது சிரமமாக் இல்லை . யாரையும் கடிந்து பேசிப்பழக்கம் இல்லாத அவர் அமைதி
காத்தார் .காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்பிக்கை
ஒரு ஆறேழு மாதம் போயிருக்கும். பொது நிகழ்வு
ஒன்றில் யாழினியும் மாறனும் சந்திக்கும்படி ஆயிற்று
மாறனின் நிலை- பார்த்தவர்கள் இரககப்படும்படி
இருந்தது . ஒழுங்கில்லாத தாடி மீசை கசங்கிய உடை உருக்குலைந்த உடல், வெறித்த ஏக்கப்
பார்வை நானொரு ராசி இல்லா ராஜா என்று பாடாத குறை
யாழினி மனம் இளகி உருகிப்போனார். பெண்களுக்கே
உரிய இரக்க குணம் மேலிட மாறனுக்கு ஆறுதல் கூற அவருடன் போனார்
பிரிந்தவர்கள் சந்தித்தபோது பேச்சு ஏது? கண்ணீர்
விட்டுக் கதறி அழுதார்கள் இருவரும் மனதால் ஆறுதல் சொல்லிக்கொன்டர்கள். உணர்ச்சிப்பெருக்கில்
உள்ளங்களோடு சேர்ந்து உடல்களும் சங்கமித்தன .
எப்படி ? ஏன்? யார் செய்த தவறு ?தெரிந்தா
தெரியாமலா? இப்படி எந்தக் கேள்விக்கும் விடை காண முடியாத அளவுக்கு அது நிகழ்ந்து
விட்டது .It so happened என்ற ஒரே விடைதான்
உணர்ச்சிப்பிழம்பு அடங்கி தணலாகி தணிந்த
பிறகுதான் இருவருக்கும் நிலைமை புரிந்தது . குற்ற உணர்ச்சியில்
துடித்துப்போய்விட்டனர் . நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்று மாறன் புலம்ப இருவரும் தவறி விட்டோம் இதில் யார் யாரை தண்டிப்பது என்றாள்
யாழினி
அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை ..வா
உன்னன வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுப் போகிறேன் என்றார் மாறன் . வேண்டாம்
பக்கம்தான் நான் நடந்தே போகிறேன் என்றார் யாழினி
வெறும் அரை கிலோமீட்டர் மீட்டர் தொலைவு ஐந்து கிலோமீட்டராக
நீண்டது போல் தோன்றியது இந்த இடைவெளியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
எண்ணங்கள் அலைமோதின யாழினி மனதில்.
இப்படியே எங்காவது கண் காணாத இடத்துக்கு ஒடி
விடலாமா வீட்டுக்குப் போனால் அந்த உத்தமரை எப்படி எதிர்கொள்வது அவர் என்ன சொல்வார்
என்ன செய்வார் அவர் என்னதான் மே(மெ)ன்மையனவ்ர் என்றாலும் இப்படி ஒரு தவறை எப்படிப்
பொறுத்துக்கொள்வார் நடந்ததை நாமே அவரிடம் சொல்லிவிடலாமா இல்லை தெரியும்போது
தெரியட்டும் என்று விட்டு விடலாமா
இப்படிப் பலவாறான மன ஓட்டங்களுடன் வீட்டை
நெருங்கி விட்டார். இப்டியே பூமி நம்மை விழுங்கி விடாதா என்ற உணர்வுடன் வாசலில்
அடிஎடுத்து வைத்தார்
ஏதோபடித்துக்கொண்டிருந்த நம்பி பெரிதாக ஒன்றும்
சொல்லவில்லை ஆனால் அவர் சொன்ன சில சொற்களின் தாக்கம் !
ஆயிரம் அம்புகள் உடலிலும் உள்ளத்திலும்
உயிரிலும் பாய்ந்தது போல் துடித்துப் போனார் யாழினி
அப்படி என்னதான் சொன்னார் நம்பி
“பரவாயில்லை உள்ளே வா “
க(இ)டைச்செருகல்
, கதை
நிறைவுற்றதா இல்லையா ?
எப்படிப் பார்த்தாலும் எனக்கு கதை இதற்கு மேல்
ஓடவில்லை .
நிறைவு செய்யவேண்டும் என்பதற்காக எதாவது எழுதினால்
அது மிக செயற்கையாக , இருக்கிறது
எனவே இப்படியே விட்டு விடுகிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
13082020thu
sherfuddinp.blogspot.com