Friday, 7 August 2020

வானம் தொட்டு விடும் தூரம்தான்







கடந்த சில நாட்களாக இந்திய ஆட்சிப்பணி (IAS) பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன
எல்லாம் நல்ல செய்திகள், உற்சாகம் ஊட்டும் செய்திகள், நம்பிக்கை தரும் செய்திகள்
ஒரு காலத்தில் இ ஆ ப அலுவலர்களின் பிள்ளைகள் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் மற்றவர்களுக்கு இது எட்டாக்கனி  என்று ஒரு பேச்சு இருந்தது
அதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு , பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிக எளிய குடுமபத்தின் முதல் பட்டதாரி தேர்வில் வெற்றி கண்டார்
இப்போது வரும் செய்திகள் இளைய தலைமுறைக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கை ஒளியாக அமையும்
மிக எளிய குடும்பத்தில் பிறந்து, பெரும்பாலும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து அங்கும் கொடுமை பொறுக்க முடியாமல் தப்பித்துப் போய் பல ஆண்டுகள் சிறிய பணிகள் பல செய்து வயிற்றைகழுவி பின்னர் சிறிய அரசுபணியில் சேர்ந்து விடாப்பிடியாகப் படித்து பட்டம் பெற்று பிறகு இ ஆ ப தேர்வு எழுதி வெற்றிகண்டு இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மாவட்ட ஆட்சியராய் இருப்பவர் திரு அப்துல் நாசர் .தமிழ் உட்பட ஆறு மொழிகள் தெரியும் இவருக்கு
இனி இந்த ஆண்டு இ ஆ ப தேர்வு முடிவுகள்
கல்வியில் மிக மிகப் பின்தங்கிய மாவட்டம் கடலூர். இந்த மாவட்டத்தில் மூன்று பெண்கள் நல்ல தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்
பார்வைக் குறைபாடு உடைய ஒரு பெண் விடா முயற்சி செய்து தேர்வில் வெற்றி கண்டிருக்கிறார்
இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் . பனி புரிந்து கொண்டே தேர்வு எழுதி சிறப்பான தகுதி பெற்றிருக்கிறார்
முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட மதுரை இளைஞர்  திரைப்படங்கள் ,மட்டைபந்து போட்டிகள் எதையும் பார்க்காமல் விட்டதில்லை என்கிறார்
கேரளாவில் ஒரு சிற்றூரைச் சேர்ந்த பெண் தேர்வு பெற்றதை அந்த ஊரே கொண்டாடுகிறது
மிக சிறிய வயதில் இ ஆ ப தேர்வு பெற்றவரும் ஒரு கேரளப் பெண்தான்
திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் தேர்ச்சி பெற்றிருக்கிறார்
இவையல்லாம் சொல்லும் செய்தி இதுதான்
இ ஆ ப தேர்வு என்பது எட்டாக்கனி அல்ல . பெரிய பின்புலமோ செல்வச் செழிப்போ தேவை இல்லை
உழைப்பு, உழைப்பு இது ஒன்றே வெற்றிக்கு வழி
இளைய தலை முறையினர் இனி துபாய் , சவூதி ,அமெரிக்க கனவுகளை விட்டு விட்டு இ ஆ ப எனும் அரசுப்பணிக்கு முயற்சிக்கலாம்
அரசை நிர்வகிக்கும் இவர்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு பணியாற்றினால் புதியதோர் உலகம் படைக்கலாம்
இன்னுமோர் நல்ல செய்தி (கட்செவியில் வந்தது )
கேட்கவே மகிழ்ச்சியாக இருகிறது
10, 20, 50 ரூபாய் நோட்டுகளாக சில்லறை மாற்றி வைத்து,  வீட்டு முற்றத்தில் வருபவர்களுக்கு தரம் பார்த்து கொடுத்து அதை ஜகாத் என்று பெருமைப்படுபவர்கள் மத்தியில்,  தாராள மனம் படைத்தவர்களிடமிருந்து ஜகாத் நிதியை ஒருங்கிணைத்து வசூலித்து அந்த நிதியின் மூலம் சமுகத்துக்கு பயனுள்ள அறப்பணிகளை முன்னெடுத்து வருகிறது
Zakat Foundation of India..

சையத் சஃபர் மஹ்மூத்.
மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி.
இவரது சிந்தனையில் உருவாகிய அமைப்பு தான் Zakat Foundation..

இந்த அமைப்பு 2013 முதல் பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 2% மாணவர்கள் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற நிலை மாறி இந்தாண்டு வெற்றி பெற்ற 829 பேரில் 42 முஸ்லீம்கள் தேர்ச்சி பெற்று 5% இலக்கை அடைய முடிந்துள்ளது..
அதிலும் Zakat Foundation நிதியுதவியுடன் பயின்ற கிராமப்புறங்களை சேர்ந்த 27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது பெருமைக்குரிய விஷயம்..
பல்வேறு மாநிலங்களில் 40 இடங்களில் Orientation Programne நடத்தி தேர்வான  700 மாணவர்களில் , முதல் கட்ட பயிற்சிக்கு பின் தகுதியான 50 பேர்  தேர்ந்தெடுத்து  Zakat Foundation மூலம் தங்குமிடம், உணவு, Education Materials முற்றிலும் இலவசமாக வழங்கி 27 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவிகளில் இறையருளால் அமரவுள்ளனர்..

Hamtharth Study Circle, Jamia Milliya IAS coaching centre மூலம் 20 பேரும், பிற நிறுவனம் மூலம் 5 பேருமாக மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...

ஜகாத் பணத்தை ஒவ்வொரு பகுதியிலும் ஒருங்கிணைத்து வசூலித்து சமுதாய மறுமலர்ச்சிக்கான ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி.

இது போன்ற உயர்ந்த சிந்தனைகள் எல்லோர் மனதிலும் வந்தால் சமுதாய முன்னேற்றம் நிச்சயம்
“உள்ளத்தனையது உயர்வு”
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
07082020fri
sherfuddinp.blogspot.com  




No comments:

Post a Comment