“ஆதுலர் சாலை”
என்றால் என்ன ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
30073020
sherfuddinp.blogspot.com
ஆதுலர் சாலை
இரண்டு பொருள்களில் இந்தச் சொல் வழங்கியது .
முதலாவது ஏழைகள், ஆதரவற்றோருக்கு உணவும் இடமும்
கொடுக்கும் விடுதிகள்
அடுத்து
மருத்துவ மனையைக் குறிக்கும் பழைய சொல்லாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது
மருத்துவம் சார்ந்த இன்னும் சில பழைய சொற்கள :
மருத்துவத்தில் சிறந்தவர்கள்
பெருமருத்துவனார் என்றும் வைத்திய சிகாமணி என அழைக்கப்பட்டனர்
நோயாளிகள்
வியாதி பட்டுக்கிடப்பார் என்று
குறிப்பிடப்பட்டனர்
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்குப்பெயர்
கல்லியக்கிரியை பண்ணுவான்
மூலிகைகளை சேகரித்து மருந்து தயாரிப்பவர்கள்
மருந்தாய்ந்து கொடுப்பார் என்று அழைக்கப்பட்டனர்
இவையெல்லாம் பண்டைய கல்வெட்டுகள் சொல்லும்
செய்திகள்
மன்னர்கள் , அசோகன், பல்லவர்கள், சோழர்கள்
ஆதுலர் சாலைகளை அமைத்து பராமரித்து வந்தனர் . சமணத்துறவிகள் தங்கள் மடங்களில்
மருத்துவ மனை அமைத்து சேவை செய்தனர்
மருத்துவப்பணி புரிந்தோர்க்கு ஊதியம் நெல்லாக
வழங்கப்பட்டது
மருத்துவ மனை என்ற விடை சொன்ன
சகோதரி மெகராசுக்கும்
வறியவருக்கு உணவும் தங்கும் இடமும்
கொடுக்குமிடம் என்று விடை சொன்ன
தோழர் வழிக்கரை வடிவேலனுக்கும்
இரண்டு விடைகளையும் விரிவாக அனுப்பிய
தோழர் இரவி ராசுக்கும்
நன்றி, வாழ்த்துகள், பாராட்டுகள்
இடி, மின்னல், மழை, மின்தடை,இணையம் துண்டிப்பு
போன்ற பல பலகாரணங்களால் உரிய நாளில் இந்தப் பதிவை உரிய நாளில் வெளியிட முடியாமல்
போய்விட்டது
02082020
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment