Wednesday, 5 August 2020

இறைவன் பற்றி இறைவன்









இறைவனுக்கு இசுலாம் கூறும் வரையறை (definition )) என்ன ?
நாளை சிந்திப்போம் இறைவன் நாடினால்
04082020tue
shefuddinp.blospot.com


அளவற்ற அருளாளன், நிகற்ற அன்புடையோன், யாவர்க்கும் மேலானவன், இல்லை என்று சொல்லாதவன், மன்னிப்பதில் மகத்தானவன், தண்டிப்பதில் நீதமானவன், அவன் மட்டுமே படைப்பவன்  என இறைவனின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்
இதற்கெல்லாம் மேலாக ஒரு நான்கே  வரிகளில் இறைவன் பற்றிய வரையறை (definition) புனித குர்ஆனில் வருகிறது


. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(112:1-4)
இந்த சிறிய (பகுதி) சூராவின் பலன்கள் மிகமிகப்பெரிது
சரியான விடை அனுப்பிய சகோ.  முகமது இப்ராஹிமுக்கு நன்றி , வாழ்த்துகள், பாராட்டுக்கள்
இன்னொரு பாராட்டுக்குரியவர் திரு ரவிராஜ்
அவர் அனுப்பிய விடை
[08:12, 05/08/2020] Cb rtd Raviraj: God in Islam

Description
DescriptionIn Islam, God is the absolute one, the all-powerful and all-knowing ruler of the universe, and the creator of everything in existence. Islam emphasizes that God is strictly singular; unique; inherently One; and also all-merciful and omnipotent. According to Islam, God is neither a material nor a spiritual being. Wikipedia
[08:12, 05/08/2020] Cb rtd Raviraj: Google search..
[08:16, 05/08/2020] Sherfuddin: Good effort
மிகச் சரியான விடையாக இல்லாவிட்டாலும் அவருடைய ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியவை , வாழ்த்துகள்
நேற்றைய பதிவில் definition  என்பது தவறுதலாக dentition என்று வந்துவிட்டது (prediction mistake )
இதை நாசூக்காக சுட்டிக்காட்டி, அந்த தவறான சொல்லுக்கும் மிஸ்வாக் பற்றி விளக்கமளித்த திரு ரவிராஜுக்கு மீண்டும் நன்றி, பாராட்டுகள்
அல்லா என்ற அரபுச்சொல்லுக்கு இணையான சொல் எந்த மொழியிலும் கிடயாது என்பது அறிஞர் பெருமக்கள கருத்து
எளிதில் புரிவதற்காக இறைவன் என்ற சொல்லை பயன்படுத்திஇருக்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05082020wed
sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment