ஆகஸ்ட் 22 1970
நான் கனரா வங்கிப் பணியில் அடியெடுத்து வைத்த
நாள் .அரை நூற்றாண்டு கடந்து விட்டது .அன்றும் சனிக்கிழமைதான். நெல்லை சந்திப்புக்
கிளையில் பணி துவக்கம். அப்போது எனக்குத் தோன்றவில்லை . வங்கி செலவில்
(வங்கிப்பணியில்) பதினெட்டு இடங்களைப் பார்ப்போம் என்று , ஏறத்தாழ இந்தியாவையே
பார்த்த நிறைவு
நெல்லை சந்திப்பு, உடன்குடி, நெல்லை நகர் ,
கல்பகஞ்சேரி (கேரளா) , திருச்சி புத்தூர் , துறையூர்
சிவான் (பீகார்) , சண்டிகர் , ஜலந்தர் ,
மங்களப்பட்டி , ஈரோடு , கோவை
(கவுண்டம்பாளையம் )
ஏறுவாடி,
வாணியம்பாடி, சென்னை(பெரம்பூர்) கடலூர், காரைக்கால் , குட்டா (கர்நாடகா)
ஜலந்தரில் ஆய்வுப்பணியில் இருந்தபோது ஜம்மு,
ஜோத்பூர்,சிர்சா (ஹரியானா) தில்லி போன்ற பல ஊர்களில் மாதக்கணக்கில் தங்கிய அனுபவம்
நகராட்சி ஆணையாராகப் பணியாற்றிய எங்கள் அத்தாவுக்கு பணியிட மாறுதல்
என்பது பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும் .எங்கு போனாலும் சற்றும் தயங்காமல்
அது கல்வி ஆண்டின் இடையில் இருந்தாலும் குடும்பத்தோடு போகும் எங்கள் அத்தாவின் பழக்கத்தால் எனக்கு
இடமாறுதல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை
பிகாரில் இருந்த எட்டு மாதங்கள் தவிர இறைவன்
அருளால் வேறெங்கும் குடுமபத்தை விட்டு தனியாக நான் இருந்ததில்லை.பிள்ளைகள்
படிப்பிலும் எந்தத் தடங்களும் இல்லை
சொல்லப்போனால் இட மாறுதல்களை நான் விரும்பி
ஏற்கும் மன நிலையில்தான் இருந்தேன்
ஒவ்வொரு இடமும் புதிய அனுபவங்களைக்
கற்றுத்தருகிறது குறிப்பாக பணி நிறைவுற ஒன்னரை ஆண்டுகளே இருக்கும் நிலையில் காரைக்காலில்
இருந்து கர்நாடக மாநிலம் குட்டாவுக்கு மாறுதல்.கிளையில் எல்லோரும்
வருத்தப்பட்டார்கள் அங்கெல்லாம் போக வேண்டாம் பேசாமல் விருப்ப ஓய்வில் போய்
விடுங்கள் என்று சொன்னார்கள்
எனக்கோ இன்னும் பதினெட்டு மாதப் பணி ஒரு புதிய இடத்தைப்
பார்க்கும் வாய்ப்பு இரண்டையும் விட மனமில்லை
இதனால் எனக்குக் கிடைத்த பலன்கள் :
-
பணிக்கொடை உச்ச வரம்பு ஐந்திலிருந்து பத்து லட்சமாக உயர்ந்தது
-
-
திரைப்படங்களிலும் கனவிலும் மட்டுமே பார்க்கக்கூடிய
ஒரு அழகான ஊரில் ஒன்னரை ஆண்டுகள் வாழ இறைவன் நாடினான்
நாற்பது ஆண்டுகளுக்குமேல் வங்கிப்பணி
என்ன சாதித்தேன் ? ஒன்றும் இல்லை
ஒருவேளை நாற்பது ஆண்டுப் பணியே ஒரு சாதனையோ ?.
தெரிந்து எந்தத் தவறும் செய்ததில்லை .தவறுக்குத்
துணை போனதில்லை பயன்படுத்திய அளவுக்கு
மட்டுமே வண்டி எரிபொருள் பணம் வாங்கினேன் இறைவன் அருளால் மருத்துவமனைச் செலவு
வாங்கியதில்லை
எந்தப் பணியாளர் பற்றியும்(மேலிடத்தில் இருந்து
அழுத்தம் வந்தாலும்) மோசமான அறிக்கை அனுப்பியதில்லை
நான் வங்கியில் சேர்ந்த காலத்தில் bound ledgers
were being gradually replaced by loose
leaf ledgers
வாணியம்பாடியில் கிளை மேலாளராய் இருந்தபோது
கணினி மயமாக்களின் முதல் படி ALPM
சென்னையில் IBBS
கடலூரில் ATM, Anywhere Banking
பணிநிறைவுற்ற குட்டா கிளையில் ஒய்வ பெற சில
மாதங்கள் முன் CBS எனப்படும் முழுக் கணினிமயமக்கள்
மேலாளர், முது நிலை மேலாளர் பதவியில் கிளை
மேலாளர், உதவி மேலாளர், ஆய்வுப்பணி, பணியாளர்கள் பயிற்சிக் கல்லூரியில்
பயற்சியாளர் என பல நிலைகள் Mobile Faculty Task Force என்ற
பணியிலும் சில மாதங்கள்
மொத்தத்தில் from bound ledgers to Core
Banking solution ஒரு இனிய பயணமாகவே
அமைந்தது இறைவன் அருள்
நான் வாழ்ந்த பணி புரிந்த இடங்கள் எல்லாம் பற்றி
வாழ்க்கைப் பயணத்தில் வங்கி அனுபவங்கள் என்ற தலைப்பில் பல பதிவுகள் விரிவாக எழுதியிருக்கிறேன்
நினைவுகளை எழுதத் துவங்கினால் நீ
........................ண்டுகொண்டே போகும் எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
22082020sat
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment