புனித
திருமறைக் குரானை தமிழ் ஆங்கிலத்தில் படிப்பவர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டாகும்
சொர்க்கத்தில்
பெண்களுக்கு என்ன கிடைக்கும் ?
எனக்கும்
இந்த எண்ணம் வந்ததுண்டு . மிகச் சிக்கலாகத் தோன்றும் இந்த கேள்விக்கு விடை என்ன ? எல்லா
கேள்விகளுக்கும் எல்லா ஐயங்களுக்கும் விடை தருவது குரான் மட்டுமே
எனக்குக்
கிடைத்த ஓரளவு தெளிவான விடையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
முதலில்
சில செய்திகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
குரான்
முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு . இதை முழுதுமாய் புரிந்துகொள்வது என்பது
முடியாத ஓன்று
அதே
போல் குரானை முழுமையான பொருள் விளங்குமாறு வேறு மொழியில் மாற்றம்
செய்வதும் மிகச் சிரமம்
ஆங்கிலேயாராகப்
பிறந்து ,
பின்னர் இசுலாத்தில் இணைந்து அரபு மொழியை திறம்பபடக்கற்றுத்
தேர்ந்து குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் முகமது மர்மடுக் பிக்தால் .
இவர்
தன் முன்னுரையில் “குரானை மொழி பெயர்க்க முடியாது “ என்று சொல்கிறார்
.தன் மொழி பெயர்ப்புக்கு The Meanings of Glorious Quran “ என்றுதான் பெயர் வைத்துள்ளார்
மேலும்
இறைவனே தான் அனுப்பிய மறை நூலில் பல வசனங்கள் மிகத்தெளிவாக இருப்பதாகவும் சில
வசனங்களின் பொருளை படைத்த தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும் சொல்கிறான் (குரான் 3:7)
இதுபோல்
பொருள் விளங்காத இறை மொழிகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன . மிக எளிதான
எடுத்துகாட்டு “
ஏழு வானங்கள் “ என்பதற்கு இதுவரை சரியான
பொருள் தெரியவில்லை
இன்னொரு
செய்தி அரபு மொழி அமைப்பு .அரபு மொழியில் எல்லாப்பொருட்களுக்கும் ஆண் பால் பெண்
பால் என இரு பால்கள் மட்டுமே உண்டு
சில
இடங்களில் ஆண் பெண்ணைத் தனியாகக்குறிப்பிடும் குரான் இன்னும்சில இடங்களில்
இருவரையும் பொதுவாக (மற்ற மொழிகள் போல்) ஆண்பாலில் குறிப்பிடுவதும் உண்டு ,மேலும் இரு பாலையும்
குறிப்பிடும் பொதுச் சொற்களும் அரபு மொழியில் உண்டு
சற்று
நீளமான இந்த சிறிய முன்னுரை அவசியமான
ஒன்றாகிறது
இனி
கேள்விக்குப் போவோம்
சொர்க்கத்தில்
பெண்களுக்கு என்ன கிடைக்கும்?
பெண்களுக்கு
சொர்க்கம் கிடைக்கும் எனபதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை
பெண்களுக்கு
சொர்க்கம் உண்டுஎன்று உறுதி செய்யும் மறை மொழிகள் பல உண்டு (குரான் 3:195 4:124 33:35)
தொடரியில், விமானத்தில்
உயர கட்டண வகுப்பில் நுழைந்து விட்டால் அந்த வகுப்புக்கு உரிய வசதிகள் அனைத்தும்
ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைப்பது போல் சொர்க்கத்தில் புகுந்த
அனைவருக்கும்
குளிர்ந்த
நீரோடைகள் உள்ள சோலைகள்,
,தங்க இழைகள் கொண்ட உயர்ந்த படுக்கைகள்.மிகச்சுவையான பழங்கள்,
உணவு வகைகள், பானங்கள் ,வீண்
பேச்சுகள் இல்லாத நல்ல சூழ்நிலை எல்லாம் கிடைக்கும் என்பதில் குர்ஆனில் எந்த
இடத்திலும் மாறுபட்ட கருத்து இல்லை
கருத்து
மாறுபாடு வருவது அழகிய பெண்கள் பற்றித்தான்
முத்துக்கள்
போன்ற பெண்கள்,
அழகும் இளமையும் மாறாத பெண்கள், ஒத்த வயதுடைய
பெண்கள் என பலவிதமாக வர்ணிக்கப்படும்போது இவர்கள் எல்லாம் ஆண்களுக்கே உரியவை என்ற
எண்ணம் ஏற்படுகிறது
அப்படி
அல்ல என்கிறது மறை மொழி
மறை
மொழியின் ஒரு புகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு
---------இன்னும்
அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு,-------------(குரான் 2:25)
துணைவியர்
என்ற தமிழ் சொல்லுக்கு இணையான அரபு மூலத்தில் உள்ள அஸ்வாஜி اَزۡوَاجٌ
என்ற
சொல்லுக்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் இது ஆண், பெண் , கணவன் மனைவி இருவரையும் குறிக்கும் பொதுச் சொல் என்கிறார்கள் ( வாழ்க்கைத்
துணை, spouse ) என்பது போல்
மேலும்
,
இந்த உலக வாழ்வில் ஒழுக்கமாக வாழ்ந்த கணவன் மனைவிகள் மறு உலக
சொர்க்க வாழ்விலும் இணைந்து இருப்பார்கள் என்று விளக்கம் சொல்கிறார்கள்
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவன் சுவனப்பதவி அளிப்பதிலும் அங்குள்ள
வசதி வாய்ப்புகளை அளிப்பதிலும் ஆண் பெண் என்ற வேற்றுமை பாராட்டாமல் வாரி வாரி
வழங்குவான்
புனித
ஹஜ் பயணம் போகும் வரை அதன் மகிமை மகத்துவம் புரியாது . புனித காபாவைப் பார்த்ததும்
உள்ளம் உருகி கண்ணீர் மழையாகப் பொழியும் .
இதற்கு காரணமும் விளங்காது
.அப்படியிருக்கையில்
சுவனத்தின் மகத்துவம் அங்கு போகாமல் புரிய வாய்ப்பில்லை.கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
முழு
நம்பிக்கை கொண்டு சுகமான மறுமைக்காக இம்மையில் உழைப்போம்
(சகோ
அயுப் கானுக்கு
தொலைபேசியில்
நீங்கள் கேட்ட வினாவுக்கு எனக்கு தெரிந்த,, நான் விளங்கிக்கொண்ட தெளிவை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
புரிந்ததா
இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் . )
21062020 tue
No comments:
Post a Comment