தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.
குழந்தை அழத் தொடங்குகிறது.
ஒருபெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
அந்தக் கோயிலை ஒட்டியுள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்கிறான்.
பொழுதடைய கோவிலைச் சாத்த குருக்கள் வரும்போது குழந்தையின் முனங்கல் கிணற்றுக்குள் லிருந்து கேட்க குருக்கள் எட்டிப்பார்க்கிறார்.
குழந்தை யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் சேர்ந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்.
காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மணிநேரத்தில் காவல்துறை பெற்றோரைக் கண்டுபிடிக்கிறது.
குழந்தையைக் காணவில்லை என்று யாராவது புகார் கொடுத்து
இருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து ஒரே மணிநேரத்தில் நெல்லை காவல் துறை மதுரையில் இருக்கும் பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள்.
இரவோடு இரவாக பெற்றோர்கள் நெல்லை வந்து சேர்கிறார்கள்.
அடுத்த வினாடி குற்றவாளி நெல்லையில் கைது செய்யப் படுகிறார்
காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அப்புறமாக சட்டரீதியான நடவடிக்கைக்குப் பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவே அந்தக் கூட்டம்.
தன்னைக் காப்பாற்றிய அந்த யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடியே குழந்தையை ஒரு பெண்காவலர் கொண்டுவந்தார்.
அதைப் பார்த்ததும் அந்தத் தாய் அழுத அழுகை அனைவரின் கண்களும் பனித்தன.
தெய்வ அருள் பெற்ற குழந்தை என்றார் நீதியரசர்
இனி வருவது மெய்சிலிர்க்கச்செய்யும் உணர்ச்சிகரமான புல்லரிக்க வைக்கும் உச்ச கட்டம்
வழக்கமாக அந்தக் கோவிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளும் கேட்காது
அன்றைய தினம் திடீர் உடல்நலக் கோளாறினால் தன்னுடைய மருமகனை அனுப்பியிருக்கிறார்.
அந்த காதுகேளாத குருக்கள் அன்றைக்கு வந்திருந்தால் குழந்தையின் முனங்கல் கேட்டிருக்காது.
குழந்தை இரவுமுழுக்க தண்ணீரில் மிதந்து விறைத்து இறந்திருக்கும்.
சுவனத்தின் வாரிசுதாரர்கள் என இறைவன் யாரைக் குறிப்பிடுகிறான் ?
இறைவசனம் எது (எவை)?
விடை
சுராஹ் 23:1-11
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
அக்பர் அலி- முதல் சரியான விடை
ஷர்மதா
khatheeb Mamuna Lebbai
ஹசன் அலி (வசனம் 7:43 இதையும் குரிப்பிட்டிருக்கிறார்
“அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.”