Monday, 21 April 2025

கழுவு கலனும் தானியும் 16042025 புதன்

 


கழுவு கலனும் தானியும்

16042025 புதன்

ஆட்டோ (தானி) ஓட்டுநர் ஒருவர் பல ஆண்டுகளாகப் பழக்கம்

எந்த நேரத்திலும் வருவார்

பணிப்பெண் வராத நாட்களில் அவரது துணைவி வந்து வேலைகளை செய்து விட்டு உரிய ஊதியத்தை வாங்கிச் செல்லுலார்

இதுபோல் அன்றொரு நாள் பணி செய்து விட்டு அந்தப் பெண் மிக மிக அதிகமாக பணம் கேட்டார்

அதிகமாக பேரம் பேசும் வழக்கம் எனக்கும் என் துணைவிக்கும் கிடையாது

ஆனால் மிக அதிகமாக கேட்டதால் என் துணைவி காரணம் கேட்டார்

பணிக்கு வந்த அந்தப் பெண் சொன்னது வேடிக்கையாக இருந்தது

"வழக்கமாக அவர் ஆட்டோவில் வந்து இறங்கிக் கொள்வேன்

இன்று அவர் வராததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உங்கள் வீட்டைத் தேடி அலைந்தேன்

அதற்கும் சேர்த்து கேட்கிறேன் " என்றார்

மேலே பேசாமல் கேட்ட தொகையைக் கொடுத்து அனுப்பி விட்டோம்

அதற்குப் பின் அந்த ஆட்டோகாரரையோ அவரது துணைவியையோ அழைப்பதில்லை

ஒரு plumber cum electrician

வேலை சிறிதோ பெரிதோ கூப்பிட்டால் உடனே வந்து செய்து விட்டு பணம் வாங்கிச் செல்லுலார்

அன்று ஊரடங்கு காலம்

குளியலறையில் குழாய் அடைத்துக் கொண்டு தண்ணீர் தேங்கி நின்றது

வழமை போல வந்தார் பார்த்தார்

என்ன நினைத்தாரோ தெரியவில்லை

"நிறைய வேலை இருக்கிறது

பல tiles உடைத்து மாற்ற வேண்டும்

25. 35 ஆயிரம் ஆகும்" என்றார்

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி

அவரை அனுப்பி விட்டு வீடு கட்டிய இளம் பொறியரிடம் பேசினேன்

அவர் அனுப்பியவர் வரும்போதே tiles வாங்கிக் கொண்டு வந்தார்

குளியலறையை பார்த்து விட்டு 5000 வரை ஆகலாம் என்றார்

வேலையை விரைந்து நேர்த்தியாக செய்து விட்டு

"Tiles எதுவும் மாற்றவில்லை

2500/ தான் ஆனது என்று

இன்ப அதிர்ச்சி கொடுத்தார்

அன்றிலிருந்து அவர்தான்

ஏற்கனவே வேறு பணிக்கு போயிருந்தால் மாலை அல்லது அடுத்த நாள் காலை வந்து செய்து விடுவார்

சாப்பாட்டு கூடத்தில் உள்ள wash basin(கழுவு கலன்)

வீடு கட்டியது முதலே ஒழுகிக் கொண்டிருந்தது

பலபேர் வந்து பார்த்தும் சரியாகவில்லை

அதனால் அடைத்தே வைத்திருந்தோம்

இவர் அதை சரிது செய்து இனிமேல் பிரச்சினை எதுவும் வந்தால் நான் காசு வாங்காமல் சரி செய்கிறேன் என்று உறுதி அளித்தார்

ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் சரியாக இருக்கிறது கழுவு கலன்

இப்படி நன்றாகப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது

நிலமைதலைகீழாக மாறிவிட்டது

என்ன ஏது என்பதும்

பல் மருத்துவர் பற்றிய செய்தி ஒன்றும் வேறு பதிவில்

இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்

16042025 புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment