நூறும் ஐம்பதாயிரமும
மகனுக்கு பல்லில் கொஞ்சம் பிரச்சினை
எல்லாப் பல்லும் ஆடுவது போன்ற ஒரு உணர்வு
சென்னையில் ஒரு பல் மருத்துவர் பற்றி கேள்விப்பட்டேன்
பல பட்டங்கள் விருதுகள் வாங்கியவர்
அரசு மருத்துவக் கல்லூரியில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்
இப்போது தனியாக ஒரு பெரிய பல் மருத்துவ மனை நடத்தி வருகிறார்
ஒரு விழாவுக்காக சென்னை போயிருந்தபோது அவரிடம் காண்பித்தோம்
முதலில் x ray இன்னும் சில சோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார்
எல்லாம் அங்கேயே இருக்கிறது
கட்டணம் 4000/ செலுத்தி
எடுத்துக் கொண்டு போனோம்
பொறுமையாக நன்றாகப் பார்த்தார்
"பல் எதுவும் சரியாக இல்லை
மாற்றி புதிதாக வைக்க வேண்டும்
இல்லையேல் பற்கள் ஒவ்வொன்றாக விழுந்து விடும்
செலவு 50000/(ஐம்பது ஆயிரம்) அல்லது அதற்கு மேல் ஆகலாம்
மேலும் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும்
இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து விட்டு விரைவில் வாருங்கள்"
என்றார்
பணமோ ஓய்வோ பெரிய தடை இல்லை
ஆனால் ஒரு பொய்ப் பல் வைத்தாலே எவ்வளவு சிரமம் என்று அனுபவப் பட்டவர்களுக்கு தெரியும்
முழுவதும் பொய்ப் பல் என்பது ஒரு வாழ்நாள் தண்டனையாக இருக்கும்
விழாவுக்குப் பின் கடலூர் வந்து விட்டோம்
மகன் பைசலின் அலுவலக நண்பர் சொன்ன உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்தோம்
அதிகம் பேச மாட்டார்
அப்பா பல் மருத்துவர்
(மகளும் பட்டம் பெற்று விரைவில் பல் மருத்துவர் தொழில் துவக்க இருக்கிறார் )
இவர் சற்று மாறுபட்ட மருத்துவர்
சர்க்கரை நோயாளிகளுக்கு பல் எடுக்க அவர்கள் மருத்துவரிடம் ஒப்புதல் பெற்று வரச் சொல்லுவார்
சோதனை கூடங்களில் இவருடைய சீட்டைப் பார்த்தால் கட்டணத்தை குறைத்து விடுவார்கள்
காரணம் இவர் அவர்களிடம் commission வாங்க மாட்டார்
பல்லை நன்றாக பரிசோதித்துப் பார்த்தார
பிறகு பற்பசை போன்ற ஒரு gel கொடுத்தார்
இதைப் பல்லில் தடவி கொஞ்ச நேரம் கழித்து கொப்புளித்து துப்பி விடுங்கள்
என்றார்
இப்போது மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும்
பல்லில் இதுவரை இறைவன் அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லை
அவர் அன்று வாங்கிய மொத்தக் கட்டணம்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
வெறும் நூறு ரூபாய்
Gel விலையும் சேர்த்து
யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை
எனக்கு புரியவில்லை
நூறு எங்கே!
50 ஆயிரம் எங்கே!!
இவ்வளவு தொகை மாறுபாடு எப்படி !!!
உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
23042025 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment