திருமறை குரான்
17042025 வியாழன்
இறைவனுடைய ஒரு நாள்
என்பது மனிதர்கள் கணக்கில் எவ்வளவு நாள் ?
எந்த வசனத்தில் இது பறறி
வருகிறது?
விடை
சூரா 22 அல்ஹஜ் வசனம்
47
நபியே! இன்னும்
வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன்
வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற
ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்
சரியான விடை எழுதி
வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன பாருக்
முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
விளக்கம்
நபி ஸல் அவர்கள் சொல்லும்
இறைவனின் தண்டனையும் தீர்ப்பு நாளும என்ன இன்னமும் வராமல் இன்னும் ஏன்
தள்ளிப்போகிறது என
நபியை கிண்டல்
செய்கிறார்கள அந்த நாளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று உணராமல்
அதற்கு ஓரு மறு மொழி போல் எச்சரிக்கை போல்இந்த
வசனம் அமைகிறது
ஆயிரம் என்பது ஒரு பெரிய
எண்ணைக் குறிப்பிடும் சொல்தான்
அதை சரியாக ஆயிரம் என்று
எடுத்துக் கொள்ளக் கூடாது
வசனம் 70'4
இறைவனின் ஒருநாள்
மனிதனின் 50000
ஆண்டுகளாகும் என்று சொல்கிறது
அரபு மொழியில் லட்சம்:
கோடி போன்ற எண்களுக்கு சரியான தனிச்சொல் கிடை யாது
இறைவன் நாடினால் நாளை
தமிழில் சிந்திப்போம்
19 ஷவ்வால் (10,) 1446
18042024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment