நபி ஸல்
முகவுரை
இறைவன் அருளால் ஓரிரு நாட்கள் ,இரவுகளில்
புனித ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்
கடந்த சில ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் புனித
மாதம் முழுதும் இஸ்லாமியப் பதிவுகள் போட எண்ணம் .இறைவன் நாடினால்
சில மாற்றங்கள் இந்த ஆண்டு
இது வரை குரான் பற்றிய பதிவுகள் மட்டுமே ரமலான்
மாதத்தில் வெளியிட்டேன்
இறைவன் படைத்த திரு மறையை நமக்கெல்லாம் கொடுத்து
மனித குலத்துக்கு வழிகாட்டியாய் , ஒளிரும் கலங்கரை விளக்கமாய் இன்றும் என்றும் விளங்கும்
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட எண்ணம், ஆசை
நபி பெருமான் வரலாறு என்பது இஸ்லாத்தின் வரலாற்றில்
ஒரு பெரிய பகுதியாகும்
இதை 30 நாட்களில் பகுதியாக வெளியிட முடியுமா
?
எந்த நூலை அடிபடையாக எடுத்துக்கொள்வது ?
ஆசிரியர் அப்துர்ரஹீமின் மிக எளிய இனிய நடையில்
சிறப்பாக இருக்கும்
இன்னும் அ லெ
நடராஜன் எழுதிய நூலும் இருக்கிறது
ஆனால் இவற்றையெல்லாம் சுருக்கினால் கருத்து
சிதையாமல் முழுமையாக இருக்குமா ?
இப்படி பல ஐயங்கள் மனதில்
M M பிக்தால் எழுதிய குரான் ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையாக 36 பக்கங்களில் நபி பெருமானின் வரலாற்றை எழுதியுள்ளார்
பிக்தால் ஆங்கிலம் தாய் மொழியாகக் கொண்ட ஒரு
இஸ்லாமிய அறிஞர்
அவருடைய எழுத்து மிக நீளமான வாக்கியங்கள் ,
நிறைய புதிய சொற்கள் என்று ஒரு ஆங்கில இலக்கியம் போல் இருந்தது
சற்று (மிகவும்) சிரமப்பட்டு பொருள் மாறாமல
மொழி மாற்றம் செய்ய வேண்டும்
(வலை தளத்தில் இல்லாததால் கூகிள் மொழி பெயர்ப்பில் முயற்சிக்கவில்லை
மேலும் கூடிய மட்டும் கூகிள் மொழி பெயர்ப்பை தவிர்த்து விடுவேன் )
எப்படியோ வழக்கம் போல் இறைவன் மேல் பொறுப்பை , பாரத்தை சுமத்தி விட்டு பணியைத் துவக்கினேன்
வழக்கத்துக்கு மாறாக ஷாfபான் மாதத்திலே கொஞ்சம்
கொஞ்சமாக மொழி மாற்றம் செய்ய துவங்கினேன்
மாபெரும் மனிதரின் மகத்தான வரலாறு ; அதற்கேற்ப நிறைய மன அழுத்தங்கள் – தவறு எதுவும் வந்து விடக்கூடாது என்ற
பதற்றத்தில் -
எப்படியோ எழுதத் துவங்கி விட்டேன் .,
இறைவன் நிறைவு செய்து தருவான் என்ற அசைக்க
முடியாத நம்பிக்கையில்
இன்னொரு மாற்றம் வழக்கம் போல் வினா விடை உண்டு
ஆனால் விடை என்று தனியாக இருக்காது
அடுத்த நாள் பதிவில் விடை இருக்கும்
சரியான் விடை அனுப்பியோர் பெயரும் வெளியிடப்படும்
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
குறை நிறைகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் –குறிப்பாக
குறைகளை .
பனித மாதத்தில் செய்யும் துவாக்களில் என்னையும்
என் குடும்பத்தாரையும் நினைவில் கொள்ளுங்கள்
(ஏற்கனவே நபிஸல் வாழ்வு பற்றிப்படித்தவர்கள், அறிந்தவர்களுக்கு இந்தத்
தொடரில் விடுதல்கள இருப்பது தெரியும்
ஆனால் அவற்றை எல்லாம் எழுத நான் முய்றசிக்கவில்லை.
மொழி மாற்றம் மட்டுமே செய்தேன்
ஏதாவது விட்டுப்போனதை சேர்க்கிறேன் என்று இறங்கினால் மிகவும் குழப்பமாகி விடும் எனக்கு )
புனித மாதத்தில் நம் கடமைகள் அனைத்தையும்
நிறைவேற்றி இறைஅருளை முழுமையாகப் பெறுவோம்
வினா
அராபிய நாட்காட்டியில் வாரத்தின் முதல் நாள்
எது ?
வெள்ளி / ஞாயிறு / திங்கள் ?
விடை
யௌமுல் அஹத் | ஞாயிற்றுக் கிழமை |
அஹத் = முதலாவது
எண் |
இசுலாமிய நாள் |
தமிழ் நாள் |
1 வது |
யௌமுல் அஹத் |
ஞாயிற்றுக் கிழமை |
2 வது |
யௌமுல் இஸ்னைண் |
திங்கட் கிழமை |
3 வது |
யௌமுல் ஸுலஸா |
செவ்வாய்க் கிழமை |
4 வது |
யௌமுல் அருபா |
புதன் கிழமை |
5 வது |
யௌமுல் கமைஸ் |
வியாழக் கிழமை |
6 வது |
யௌமுல் ஜுமுஆ |
வெள்ளிக் கிழமை |
7 வது |
யௌமுல் ஸப்த் |
சனிக் கிழமை |
இன்றைய வினா
ரமலான் மாதம் இஸ்லாமிய ஆண்டின் எத்தனையாவது மாதம் ?
இறைவன் நாடினால் புனித ரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்களை சிந்திப்போம்
11032024 திங்கள்
சர்புதீன் பீ
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நபி பெருமான்
1 பிறப்பு, திருமணம்
2திருமறை – முதல்
வசனம் அருளப்பெற்றது
3
ஹீரா மலையில் (அச்சமூட்டும்) அற்புதக்
காட்சி
3
ஹீரா மலையில் (அச்சமூட்டும்) அற்புதக் காட்சி ,
(4)நபியின் கலக்கம் ,பின் தெளிவு
4 குரான் – ஓதுவீராக
5 எதிர்ப்பு, துன்புறுத்தல்
6 அபீசீநியப் பயணம்
உமரின் மன(த) மாற்றம்
7சஹிfபாஆவணம் அழிப்பு ;யத்ரீபர்கள் வருகை
8 நபி பெருமானைக் கொல்ல சதி
ஹிஜ்ராஹ்
9 நபி ஸல் மதினா வருகை
10 மக்கத்து சூராககள்
11 மதீனத்து யூதர்கள்
கிப்லா மாற்றம்
12 பயணங்கள்
13 பதுருப்போர்
14 உஹதுப்போர்
15 உஹதின் தாக்கம்
பனு நடிர்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நபி பெருமான் 1
பிறப்பு, திருமணம்
12032024 செவ்வாய்
மனித குலத்துக்கு விடி வெள்ளியன் நபி பெருமான்
உதித்தது
மக்க மா நகரில் ஹி(ஜ்ரி க்கு ) மு (ன்)53 ஆம் ஆண்டு
குறைஷி குலத் தோன்றலான முகமதின் தந்தை அப்துல்
முத்தலிபின் மகன் அப்துல்லா
பிறக்குமுன்னே தந்தையை இழந்த முகமதை போற்றிப்
பாதுகாத்த பாட்டனார் அப்துல் முத்தலிப் மறைவுக்குப்பின் அவரின் மற்றொரு மகனாகிய அபு தாலிப் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
சிறிய தந்தை அபு தாலிபின்
வணிகக் குழுவோடு சிறுவனாய் இருந்த முகமது சிரியா
நாட்டுக்குப் பயணம் செய்து வந்தார்
சில ஆண்டுகளுக்குப்பின் கதீஜா என்பவரின் குழுவில் இது போல் பயணித்தார் முகமது
. செல்வச் சீமாட்டியான் கதீஜா துணையை இழந்தவர்
மிகச் சிறப்பாக் நேர்மை,
உண்மையுடன் வணிகப் பரிமாற்றங்கள் செய்த முகமதின் நடத்தை நடவடிக்கை பற்றி அவருடன் பயணித்த தன் மூத்த பணியாளர் வாயிலாகக் கேட்டறிந்த
கதீஜா சீமாட்டி மனம் விரும்பி முகமதை மணமுடித்தார்
தம்மை விட 15 வயது
மூத்த ஒரு பெண்ணை ,அதுவும் துணையை இழந்தவரை மணம் புரிந்து
ஆர்பாட்டம் இல்லாமல்
அமைதியாக ஒரு சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார்கள் முகமது அவர்கள்
கதீஜா அவர்களின் மறைவு வரை 25 ஆண்டுகள் பாசமும் நேசமும் நிறைந்த மகிழ்ச்சியான
இல்லறம்
அவரின் மறைவுக்குப்பின்னும்
எப்போதும் அவரை அன்புடன் ,மக கண்ணியத்துடன் நினைவு கூர்ந்து பேசினார் முகமது
ஏற்கனவே தன்
நன்னடத்தையால் அல் அமீன் - நம்பிக்கைக்கு உரியவர்
என்று சமுதாயத்தில் அறியப்பட்ட முகமதுக்கு இந்தத் திருமணம் மேலும் ஒரு உயர் நிலையை
வழங்கியது
சிராஜுதீன்
ஷர்மதா
பாப்டி
ஹசன் அலி
மெஹராஜ்
இன்றைய வினா
சிலை வணக்கம் பரவலாக
இருந்த நிலையில் உண்மை இறைவனைத் தேடும் ஒரு
சிலர் மக்காவில் இருந்தனர்
அவர்களுக்கு பெயர் என்ன ?
இறைவன் நாடினால் விடை
விளக்கத்துடன் நாளை நபி பெருமானை சிந்திப்போம்
01 ரமளான்(9) 1445
`12032024 செவ்வாய்
சர்புதீன் பீ
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நபி பெருமன் 2
“ஓதுவீராக”
திருமறை – முதல் வசனம்
அருளப்பெற்றது
13032024 புதன்
நபி இஸ்மாயில்(ஸல்)
அவர்கள் வழியில் தாங்கள் நபி இப்ராஹுமின் (ஸல்)வழிதோன்றல்கள் என்று மக்கா வாசிகள் உரிமை
கொண்டாடினர்
மேலும்
நபி இப்ராகிம் (ஸல்
உருவாக்கிய மக்காவில் அமைந்துள்ள புனித காபா ஏக இறைவன் வழிபாட்டுக்கான முதல் ஆலயம் ஆகும்
ஆனால் பெயரளவில் இறைவனின்
இல்லம் என்று சொல்லப் பட்ட காபாவில் நிறையநிறைய
உருவச் சிலைகள்
அவை இறைவனின் பெண்
மக்கள் என்றும் இறைவனை அடைய வழிகாடடுபவர்கள் என்றும் அழைக்கப்பட்டன
நூற்றாண்டுகளா பரவலாக
இருந்த இந்த உருவ வழிபாட்டில் வெறுப்படைந்த ஒரு சிலர் இபராஹீம் நபி போதித்த உண்மை
என்ன என்பதைக் கண்டறிய முற்பட்டனர்
இவர்கள் ஹனிfப் என்ற
சொல்லின் (plural ) பன்மையான ஹுனாfபா என்று அழைக்கப்ட்டார்கள்
(சிலை வணக்கத்தை விட்டு) விலகிச் செல்பவர்கள் என்ற பொருள் கொண்ட
இச்ச்சொல் காலப் போக்கில்
ஹுனாfபாக்களின் நல்ல குணம் , நடத்தையால்
உணமையானவர் ,
நேர்மையானவரக் குறிக்கும் சொல்லாக மாறியது
ஒரு குழுவாக
சேராமல் அவரவர் தங்கள் வழியில் ஆழ்மனதில்
இறைவனைத் தேடினர்
ஹுனபிகளில் ஒருவராய்
இருந்த முகமது அவர்கள் ஆண்டு தோறும் கோடை ரமலான் மாதத்தில் குடும்பத்துடன் மக்காவுக்கு அண்மையில் உள்ள
ஹிரா எனும் பாலைவன மலையில் இறை தியானத்தில்
ஈடுபடுவ்து வழக்கம்
ரமலான் மாத நிறைவுப்
பகுதியில் ஒரு இரவில் முகமதுக்கு இறைவன் அருளால் திருமறை துவக்க வசனங்கள் இறங்கின
அப்போது வயது 40 அவருக்கு
ஒரு வித ஞான உறக்க
நிலையில் இருந்த முகமதுக்கு ஒரு குரல் ஆணை இடுகிறது
“ஓதுவீராக “
“எனக்கு ஓத(படிக்கத்)த்
தெரியாது “ இது முகமதின் மறு மொழி
மீண்டும்
“ஓதுவீராக” என்ற குரல்
“எனக்கு ஓத(படிக்கத்)த்
தெரியாது “ முகமது
இப்போது கேட்போர்
நடுங்கும்படி குரலில்
மீண்டும்
“ஓதுவீராக”
“எதை ஓதுவது >” முகமது
(யாவற்றையும்)
படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2 خَلَقَ
الْإِنسَانَ
مِنْ
عَلَقٍ
´அலக்´(சதைக் கட்டி ) என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3 اقْرَأْ
وَرَبُّكَ
الْأَكْرَمُ
ஓதுவீராக:
உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4 الَّذِي
عَلَّمَ
بِالْقَلَمِ
அவனே
எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5 عَلَّمَ
الْإِنسَانَ
مَا
لَمْ
يَعْلَمْ
மனிதனுக்கு
அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(குரான்
சூராஹ் 96 அல் அலக் (சதைகட்டி ) வசனம் 1—6)
நேற்றைய வினாவுக்கு சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறும் ஒரே ஒருவர்
சகோ
ஹசன் அலி
சகோ Khatheeb Mamuna Lebbai, சிராஜுதீன் இருவருக்கும் முயற்சிக்கு நன்றி
அவர்கள் சொன்னஸாபியீன் [என்பது John the Baptist (யஹ்யா , யோவான்) என்ற நபியை ஏற்றுக்கொண்டு நட்சத்திரத்தை வணங்கும் கூட்டம்
இன்றைய
வினா
முகமதை
நபி என்று முதலில் நம்பிக்கை கொண்டவர் யார் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை நபி பெருமானை சிந்திப்போம்
முதல் இப்தாரையும் இரண்டாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
02 ரமலான்(9) 1445
13032024 புதன்
சர்புதீன் பீ
<<<<<<<<<<<<<<<<<<<
நபி ஸல் 3
ஹீரா மலையில் (அச்சமூட்டும்) அற்புதக் காட்சி ,
நபியின் கலக்கம் ,பின் தெளிவு.
“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்"
140320234வியாழன்
(நபி பெருமானுக்கு இறைவன் திரு வசனம் அருளப்பெற்றதால் அவர்கள் (இறை தூதர் _நபி ஆகி விட்டார்கள்
எனவே இனிமேல் நபி ஸல் என்று குறிப்பிடுவோம் )
ஞான நிலையில் இருந்து விழித்த நபி ஸல் அவர்களுக்கு
அவர் கேட்ட வசனங்கள் இதயத்தில் பதிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு
குகையை விட்டு வெளியே வந்த நபி (ஸல்)க்கு மீண்டும் அந்த திகைப்பூட்டும் குரல் கேட்டது
“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்
நான் ஜிப்ரில் “
விழிகளை அடிவானத்துக்கு மேலாக பார்த்த நபி (ஸல்) க்கு (வானவர்
தலைவன்) ஜிப்ரில் அலை மனித உருவில் நிற்பது தெரிந்தது
மீண்டும் அந்த அச்சுறுத்தும் குரல்
“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்
நான் ஜிப்ரில் “
என்றது
கண் கூசும் அந்த ஒளிக் காட்சியிலிருந்து நபி
ஸல் அவர்கள் முகத்தைத் திருப்ப
திரும்பிய பக்கமெல்லாம் எதிரே நெடிதுயர்ந்த
அந்த உருவம் காட்சி அளித்தது
நெடு நேரம் நீடித்த இந்த நிலையில் நபி ஸல்
அவர்கள் மனதில் ஒரு பெரும் துயர நிலை
ஒரு வழியாக அந்த உருவம் மறைந்தவுடன் கதீஜா பிராட்டியாரிடம்
போன நபிக்கு தன்னால் முடிந்த அளவக்கு ஆறுதல்
சொன்ன கதீஜா
“உங்களின் நல்ல குணத்துக்கும் நடத்தைக்கும் இறைவன் அருளால் தீயது எதுவும் உங்களை அணுகாது “ என்றார்கள்
முகமது நபி ஆகி விட்டார் என்று
முழுமையாக நம்பிய கதீஜா , மக்கா
திரும்பியதும் தன் உறவினரான வராக்க என்ற முதியவரிடம் நபியை அழைத்துச் சென்றார்கள்
யூத, கிறித்தவ மத வேதங்களை கற்றுனர்ந்த வராகா
முன்பு மூஸா நபியிடம் வந்த அதே வானவர்தான்
இப்போது முக்மதிடம் வந்திருக்கிறார்
முகமதை இறைவன் சமுதாயத்துக்கு வழிகாட்டும்
நபியாக முகமதைத் தேர்வு செய்திருக்கிறான்
என்று சொல்லி அன்னை கதீஜாவின் நம்பிக்கையை
உறுதி செய்தார்
நபியின் மனக்கலக்கம் ,தயக்கம் இவற்றிற்கெல்லாம் ஒரு வலுவான காரணம் இருக்கிறது :
நபி அவர்கள் ஒரு ஹுனாபி என்று ஏற்கனவே பார்த்தோம் . அவர்கள் தேடியது
உண்மையான மதத்தை இயற்கை வழியில்
அதில் வானவர்கள் போன்றவர்கள் வருவதை அவர்கள்
எதிர் பார்க்கவில்லை ; ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை
வானவர்கள் போன்ற சாதாரணமாக் கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன்
தொடர்பு இருப்பதை மந்திரவாதிகள், ,சோதிடர்கள் ,, கவிஞர்கள் ஒரு பெருமையாக பேசிக்கொண்டிருந்த
காலம் அது
மேலும் அமைதி, எளிமை, இறை அர்ப்பணிப்பு இவற்றின்
உருவாக இருந்தார் நபி
இறைவனின் தூதராக ,பெருமளவில் மக்களை சந்திக்கும் ஒருவராக அவரால்
தன்னை கற்பனை கூட செய்ய முடியவில்லை
தனக்கு வந்த செய்தியின் இறைத் தன்மை புரியும்போது
மனதில் வந்த ஒரு போராட்ட்ம் , கலக்கம் ஒரு
நேர்மையான உள்ளத்தில் ஏற்படும் இயல்பான ஒன்றே
மேலும் மக்களிடம் இறை செய்தியை எடுத்துச் சொல்லும்போது தன்
அமைதியான கௌரவமான வாழ்க்கை பெருமளவில் மாறும் என்ற அச்சமும் அவரை வாட்டியது
அன்னை கதீஜாவந்தது வானவர்தான் , தீயது ஓன்று இல்லை என்பதை பரிசோதித்து உறுதிப்படுத்தினார்
தொடர்ந்து வந்த இறை செய்திகள் அவற்றின் உறுதித்
தன்மை எல்லாம் படிப்படியாக தன் மேல் சுமத்தப்பட்ட மாபெரும் பணியை ஒப்புக்கொள்ளும் மன
நிலையை உண்டாக்கின
அதன் விளைவு பணிவு கலந்த ஒரு உற்சாகம்
இறைவனின் – அல்லாவின் அடிமை எனும் பெருமை மிக்க
பெயருக்கு மிகவும் பொருத்தமானவராக ஆகி விட்டார் முகமது நபி ஸல்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷிரீன் பாருக்
ஜோதி
பாப்டி
மெகராஜ்
இன்றைய வினா
முதன் முதலில் முகமதை நபியாக ஏற்றுக்கொண்டவர்
அன்னை கதீஜா என்று பார்த்தோம்
தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்த ஒரு சிலர் யார்
?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
இரண்டாவது இப்தாரையும் மூண்றாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
03 ரமலான்(9) 1445
140320234வியாழன்
சர்புதீன் பீ
.................................
நபி ஸல்
4 குரான் –
“படியுங்கள், ஓதுங்கள் “
ٱقْرَأْ
15032024வெள்ளி
இறை மயக்க தியான நிலையில் நபி ஸல் சொன்னவற்றை இஸ்லாமியர்கள் புனித
நூலின் பகுதியாகப் போற்றுகிறார்கள்
இயல்பான நிலையில் சொன்னவை வேறு , தியான மயக்க நிலையில் சொன்னவை வேறு
. ஒரு போதும் இரண்டும் ஒன்றாவதில்லை
இறை மயக்க நிலையில் சொன்னவை புனித மறை நூல்
இயல்பான நிலையில் சொன்னவை நபி மொழிகள் –சுன்னத் –ஹதீஸ்
கல்வி கற்காத உம்மி நபி அவர்களை வானவர் தலைவர்
“படியுங்கள், ஓதுங்கள் “ என்று வலியுறித்தினார் அரபு மொழியில் இது
ٱقْرَأْ
இக்ரா என்று வரும் (குரான் 96 :2)
அந்த அடிப்படையில் புனிதத் திருமறை
குரான் என்று அறியப்படுகிறது
முதல் மூன்றாண்டுகள் நபி ஸல் அவர்களின் இஸ்லாமிய பரப்புரை அவர் குடும்பம், நெருங்கிய நண்பர்கள்
இடையே மட்டும் இருந்தது
`முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் கதீஜா பிராட்டியார்என்று
பார்த்தோம்
இரண்டாவது== நெருங்கிய உறவினர் அலி அவர்கள்
மூன்றாவது ஜைத் (Zeyd) அடிமையாக இருந்தவர்
அதற்கு அடுத்து நபியின் நீண்ட நாள் நண்பர்
அபு பக்ர் தன் அடிமைகள் சிலர், இன்னும் சில குடும்ப உறுப்பினர்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்கள்
பொதுவாக மற்ற மக்கா வாசிகள் நபி அவர்களை
கண்டு கொள்ளவேயில்லை
சற்று மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணி
, அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை
நேற்றைய வினா--ஒரு விளக்கம்
பிக்தால் ஆங்கிலப் பதிவில் உள்ள வரிசைப்படி இஸ்லாமில் அடுத்தடுத்து இணைந்தவர்கள் மேலே சொன்னபடி
இரண்டாவது== நெருங்கிய உறவினர் அலி அவர்கள்
மூன்றாவது ஜைத் (Zeyd) அடிமையாக இருந்தவர்
அதற்கு அடுத்து நபியின் நீண்ட நாள் நண்பர் அபு பக்ர் தன் அடிமைகள் சிலர், இன்னும் சில குடும்ப உறுப்பினர்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்கள்
முதலாவது கதீஜா பிராட்டியார் என்பது ஒருமித்த கருத்து -இதிலும் பெண்ணின் பெருமை உயர்கிறது
அடுத்து அலியா இல்லை அபுபகரா என்பதில் வேறுபாடு இருக்கிறது
எனவே இந்தப் பெயர்களுடன் வந்த விடைகள் சரியான விடைகள்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
பாப்டி - முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்
ஜெய்லானி ஜெய்லானி
fபக்ருதீன்
Khatheeb Mamuna Lebbai
இன்றைய வினா
“எழுந்து எச்சரிக்கை செய்வீராக “
என்று நபிக்கு இறைவன் ஆணையிட்ட குரான் வசனம்
எது ?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம் மூன்றாவது இப்தாரையும் நான்காவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
04 ரமலான்(9) 1445
15032024 வெள்ளி
சர்புதீன் பீ
&&&&&&&&
நபி ஸல்
“எழுந்து எச்சரிக்கை செய்வீராக “
5 எதிர்ப்பு,
துன்புறுத்தல்
நபித்துவம் பெற்ற
மூன்றாம் ஆண்டின் நிறைவுப் பகுதியில்
இறைவன் ஆணை வருகிறது
“எழுந்து எச்சரிக்கை
செய்வீராக “ குரான் 74:2
அதற்கிணங்க நபிகள் தம் பரப்புரையை பொது
மக்களிடம் துவங்குகிறார்கள்
பகல் இரவு , பிறப்பு இறப்பு, ஆக்கம் அழிவு
இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தும் ஏராளமான
சட்ட திட்டங்கள்
சட்ட்டங்களை உருவாக்கி மேற்பார்க்கும் ஏக
இறைவனின் மாட்சிமை
அந்த மாட்சிமைக்கு சற்றும் தொடர்பில்லாத
சிலை வணக்கத்தின் அறியாமை
இவைஎல்லாம் பற்றி மக்களுக்கு எடுத்துச்
சொல்கிறார்கள் நபி ஸல்
நாம் பல்லாண்டுகள் , பல தலைமுறைகளாக கடைப்பிடித்து
வரும் சிலை வணக்கத்தை நபிகள் தவறு என்று சொல்வதை மக்கா வாசிகள் உணர்ந்தவுடன் ஒரு பகைமை
உணர்வு உருவாகிறது
அதன் விளைவு - நபியைப் பின்பற்றும் ஏழை எளிய மக்களை பகடி செய்தல் , அவமானப் படுத்துதல் என பலவகைகளில்
தொல்லை கொடுக்கிறார்கள்
நபி பெருமான் குடும்பம் , குலத்தோர் உயிருக்கு உயிர் என்று பழி வாங்காமல் விடமாட்டர்கள் என்ற அச்சம் ,
தயக்கத்தால்தான் நபியை தாக்காமல் ,கொல்லாமல்
விட்டு வைத்தார்கள்
தன் கொள்கையில் வலுவான பிடிப்புடன் நபி
ஸல் அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது ,விளக்கம் அளிப்பது என எல்லா வகையிலும் தம் பரப்புரையை விரிவாக்கினார்கள்
இதற்கு எதிராக மக்கா குறைஷிகளும் முடிந்த அளவுக்கு நபியின் அறவுரைகளை
கிண்டல் செய்வது , நபியைப் பின் பற்றுபவர்களை துன்புறுத்தி விரக்தியடையச் செய்வது என தங்கள் முயற்சிகளை தீவிரப்
படுத்தினார்கள்
நேற்றைய வினாவுக்கு
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
Khatheeb Mamuna Lbbai முதல் சரியான விடை
ஷிரீன் fபாருக்
ஹசன் அலி
இன்றைய வினா
இஸ்லாத்தின் முக்கிய எதிரிகளில் ஒருவர்
மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவ , அது குறைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பை பன் மடங்காக்கியது
யார் அந்த ஒருவர் ?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
நான்காவது இப்தாரையும் ஐந்தாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
05 ரமலான்(9) 1445
சர்புதீன் பீ
--===========
No comments:
Post a Comment