சொந்த ஊர் 12
வாழ நினைத்தால்............------
07 02 2024 புதன்
சு(சி)ற்றுலா சரி . சில நாட்களில் திரும்பி விடுவோம்
அங்கேயே தங்கி வாழ முடியுமா ?
முடியும் என்பது என் கருத்து
குறிப்பாக பணி நிறைவு செய்து ஓய்வூதியத்தில் நிம்மதியாக வாழ்வை அனுபவிப்பவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாழும் இடமாகும் இந்த ஊர்
என்ன இருந்தாலும் சென்னை போல வசதி குறிப்பாக மருத்துவ வசதி இங்கெல்லாம் கிடைக்காதே என்பீர்கள்
முற்றிலும் உண்மை . தமிழ் நாட்டில், ஏன் நாடு என்ற அளவில் பார்த்தால் கூட
சென்னை மிகச் சிறந்த நகரமாக வளர்ந்து வருவதில் நம் எல்லோருக்கும் பெருமைதான்
அதுவும் மருத்தவ வசதியில் உலக அளவில் புகழ் பெற்றது சென்னை
வட மாநிலங்கள், சவூதி போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் மருத்துவம் பார்க்க சென்னை வருகிறார்கள்
அதை விட்டு ஒரு சிற்றூருக்கு வருவது எப்படிஅதுவும் முதுமையில் என்பது ஒரு நல்ல கேள்வி
சென்னை வளர்ச்சி அளவுக்கு மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
அதன் விளைவாக ஊருக்குள் பயணம் மிகச் சிரமமான் ,நேரம் பிடிக்கும் செயலாகி விட்டது
வடபழனி கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு நடந்து பத்து மணித் துளிகளில் போய் விடலாம் – நடக்க இடம் கிடைத்தால்
வண்டியில் போகும்போது, முப்பது ,நாற்பது மணித்துளிகள் வரை ஆகிறது
தி நகர் போன்ற வணிகப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு அவசரத்துக்கு எளிதாக வெளியே வர முடியாது
இந்த நெருக்கடி புற நர்ப்பகுதிகள் உட்பட சென்னை முழுதுமே ஓரளவு பரவி வருகிறது
அண்ணாந்து பார்க்கின்ற அடுக்கங்கள் - - மின் தூக்கியில் இறங்கி வந்து
நிறுத்தத்தில் இருந்து வண்டியைக் கிளப்பி சாலைக்கு வருவதற்கே பல ம துளிகளாகி விடும்
திரு வில் இருந்து 20 கிமி காரைக்குடி –பேருந்தில் கூட அரை மணி நேரத்தில் பொய் விடலாம்
மதுரை – 60 கி மி ஒரு மணி நேரப் பயணம்
திருச்சி 1௦௦ கி மி 2 மணி நேரம்
இங்கெல்லாம் சென்னை அளவுக்கு இல்லாவிட்டாலும் மேம்பட்ட மருத்துவ வசதிகள் உள்ளன
மேலும் முன்பே குறிப்பிட்டது போல் உடல் நலத்துக்கு மிகவும் உகந்த ஊர் திரு
யார் கண்டது , இறைவன் அருளால் மருத்துவ மனைக்குப் போகத் தேவை இல்லாத அளவுக்கு உடல் நலம் சீராகலாம்
பொழுது போக்கிற்கு உள்ள இடங்கள்,
வழி பாட்டுத் தலங்கள்பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
நடைப் பயிற்சிக்கேற்ற அதிக போக்கு வரத்து இல்லாத இடங்கள் பல இருக்கின்றன . காலை நேரத்திலேயே தேநீர் கடைகள் செயல்படும்
சரி சொந்த ஊருக்குக் குடி போய் விட்டோம்
எனக்கு சும்மா இருக்க முடியாது சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால்
சேவை மனப்பான்மையில் செய்யகூடிய பணிகள் – எனக்குத் தெரிந்தவற்றைக் குறிப்பிடுகிறேன்
100 ஆண்டுகள் கடந்து நிற்கும் புகழ் பெற்ற SM மருத்துவ மனையை முன்பிருந்த நிலைக்கு , அல்லது அதனினும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்த முயற்சிக்கலாம்
கலைக்கல்லூரி 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது
பொறியியல் , மருத்துவம் போன்ற தொழிலகல்வி கல்லூரிகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம்
மாநில , ஒன்றிய அரசுப் பணிகள் பற்றிய விழிப்புணர்வை இளைய சமுதாயத்தில் ஏற்படுத்தலாம்
போட்டித் தேர்வுக்ளுக்கு வகுப்பு நடத்தலாம்
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரலாம்
மருத்துவம், பொறியியல் தவிர நிறைய இருக்கும் கல்விகள்,
குறிப்பாக பல நிறுவனங்கள் வழங்கும் பணி உறுதி உள்ள இலவசப் படிப்புகள் , பயிற்சிகள் பற்றி ஒரு தெளிவு உண்டாக்கலாம்
அருகில் உள்ள குன்றக் குடியில் ஒவ்வொரு வீடும் ஒரு சிறிய தொழில் கூடமா விளங்குகிறது என்று படித்திருக்கிறேன்
அந்த வகையிலும் மக்களுக்கு வழிகாட்டலாம
தொடரிப்பாதை , நிலையம் கொண்டுவர முயற்சிகள் துவங்கலாம்
இதற்கெல்லாம் பெரிதாக பொருள் செலவழிக்க வேண்டாம்
மனம் வைத்து உழைத்தால் போதும்
சொல்வது எளிது ஆனால் செயல் படுவது மிகச் சிரமம்தான்
அதிலும் எங்கள் ஊர் மக்கள் பொதுவாக போதும் என்ற மனம் படைத்த பொன் மக்கள்
நல்ல முயற்சிகளுக்கு இறைவன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையோடு செயலில் இறங்கலாம்
பாரதியின் கவிதை வரிகளுடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
நிதி.மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
இறைவன் நாடியால் நாளை திருமறையில் சிந்திப்போம்
07 02 2024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment