Thursday, 22 February 2024

திருமறை குரான் 35:21 23022024 வெள்ளி





 திருமறை குரான்

35:21
23022024 வெள்ளி
நிழலும் வெயிலும் சமமாகா
குர்ஆனில் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 35 (அல்பாதிர்/அல் மலாயிக்கத் ---தொடங்குபவர்/வானவர்கள் ) வசனம் 21
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி&
ஷர்மதா ---இருவர் விடையும் ஒரே நேரத்தில் வந்ததால் இரண்டையும் முதல் சரியான விடையாக எடுத்துக் கொண்டேன்
மீ மு இஸ்மாயில்
காதீப் மாமுனா லெப்பை
விளக்கம்
மறுமை நாள் பற்றி சொல்லும் இந்த வசனங்கள் 35:18—35:21) சில எடுத்துகாட்டுகள் வழியே இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்பவர்களையும் இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன
35:18. (மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
35:19
ۙ‏
35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
35:20
35:20. (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
35:21
ۚ‏
35:21. (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
35:22
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:23
இறைவன் நாடினால் விடை நாளை தமிழில் சிந்திப்போம்
12ஷாfபான்(😎 1445
23022024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment