திருமறை குர்ஆன்
17:1
16022023 வெள்ளி
"---------(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்;___"
குர்ஆனின் எந்த வசனத்தில் வருவது இது?
விடை
சூரா 17(அல இஸ்ரா) 1
". (இறைவன். -அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்;
.
(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்;
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம் நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.17:1"
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஹஸன் அலி
. முதல் சரியான விடை
ஷர்மதா
கதீப் மாமுனா லெப்பை
விளக்கம்
ஹிஜ்ரி பயணம் ஒரு ஆண்டுக்கு முன்பு நிழந்த
மிராஜ்/ அல இஸ்ரா நிகழ்வு பற்றி சொல்கிறது இந்த வசனம்
உறுதியாக நம்பக்கூடிய பல செய்திகள் இது பற்றி விரிவாகச் சொல்கின்றன
மிகச் சுருக்கமாக
ஓரிரவில் இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரில் அலை மூலம் புராக் எனும் வாகனத்தில் நபி ஸல் அவர்களை மக்காவில் உள்ள புனித காபாவில் இருந்து ஜெருசலேத்தில் உள்ள அல அக்ஸா ஆலயத்துக்கு வரச் செய்கிறான்
அங்கு சில நபிமார்களோடு சேர்ந்து தொழுகை நடத்திய பின்
பல மேல் நிலை உலகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு
பல உயர் நபிகளை சந்தித்த பின்
நிறைவாக மிக உயர்ந்த நிலையில் உள்ள உலகிற்குப் போய் அங்கு ஏக இறைவன் நபிக்கு நேரடியாக காட்சி அருளுகிறான்
ஐவேளத் தொழுகை போன்ற பல ஆணைகளை இறைவன் நேரில் நபிபெருமானுக்கு வழங்குகிறான்
சுவர்க்க நரகக் காட்சிகளை நேரில் காண்கிறார்கள் நபி
பின்னர் அல் அக்ஸா ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் காபா வரப் படுகிறார்கள் நபி ஸல்
இறைவன் நபி சந்திப்பில்
பரிமாறிக் கொள்ளப்பட்ட வணக்கங்களும் வாழ்த்துகளும்
தொழுகையில் "அத்தஹியாத்து" என்று துவங்கி "வரசூலுகு* வரை ஓதப்படுவதா சொல்கிறார்கள் அறிஞர்கள்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
05ஷாபான்(8) 1445
1602024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment