சொந்த ஊர்14
சகோ சிக்கந்தர் பார்வையில்
21022024 புதன்
(சகோ சிக்கந்தர் இரண்டுபதிவுகள் அனுப்பினார்
அடுத்து பாத்தாக்கா – fபாத்திமா பீவி – சிக்கந்தரைப் பெற்ற தாய் பற்றி
இரண்டையும் ஒரே பதிவில் வெளியிடுகிறேன்
நிறையபழமொழிகள் , பட்டப் பெய்ரகளையும் குறிப்பிட்டிருக்கிறார்
மனித உருவப் படங்களை கூடிய மட்டும் தவிர்த்து விடுவேன் )
இனி சகோ சிக்கந்தர்
தங்களது பதிவை கண்டு மிகவும் மனநிறைவாக இருந்தது பதிவிட முடியாத விஷயங்களை பதிவிட்டது மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது நம்ம ஊரில் குறிப்பாக சீதளி வடகரை தெருவில் வசிக்கும் குடும்பத்தில் தான் அதிகப்படியான பட்டப்பெயர் சொல்லி அழைக்கிறார்கள் . அந்தப் பெயரை சொன்னால் தான் அந்த குடும்பத்தை பற்றி நாம் அறிய முடியும். எனக்குத் தெரிந்த
பட்ட ப் பெயர்கள் .
பழமொழிகள் கீழ் வருமாறு.
அணிவால் விடு காக்கா பீர் ராவுத்தர் வீடு ஆயிஷா வீடூ
சில்வர் பார்த்து வீடு ஸ்டாண்ட்டு அய்யாதுரைவீடு பட்டறைகாார் வீடு கோமாளி வீடு சஞ்சீபேத்தி வீடு ஆப்பக்கடுகு வீடு
பள்ளத்தூரான் வீடு புலவர் வீடு கோட்டயான் வீடு
மண்டை லெப்பை வீடு டோக்கு சைய்யது விடு வெட்டுநோட்டு அம்பலம் வீடு
கணக்க வீடு பல்லுகடிச்சால் வீடு பொசிக்கி வீடு ( அச்சு கட்ட்டு)
சில பழமொழிகள்
ஆற்றிலே போட்டாலும் அலந்து போடணும்
சேத்தில் போட்டாலும் சிதறாமல் போடணும்
இஞ்சி பச்சடி தொட்டு நக்கடி
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி
ஒய்யார கொண்டையிலே தாழம்பூ உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்
கையார்பெட்டி ( ஓலைப்பெட்டி) உசக்கை (உயரம்) கருங்கலுச்சல் (திட்டுவது)
கழுவுற தண்ணியிலே நழுவுற மீன்
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கி கொண்டாட்டம்
ஆடிக்காத்தில் அம்மியும் நகரும்
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஊர்ல கல்யாணம் மார்பில சந்தனம்
எனது நனிமா ஆயிஷா பீவி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர்களுடைய கடைசி காலம் வரை தனிமையிலே யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள் . V M மாாமா ,மற்றும் ஈ னா ஐயா கவனித்துக் கொல்வார்கள்
நெல் அறைப்பதற்கு ஒரு பெரிய கடகத்தில் நெல்லை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து ரைஸ் மில் வரை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக நடப்பார்கள் நான் அவர்களுக்கு உதவிக்காக பின்னாடி போக வேண்டும் அவர்களுக்கு ஈடு கொடுத்து என்னால் ஓட முடீயாது ..
ஈனா வீட்டில் ஒரு விசேசம் வந்தால சரியா பங்கு பிரித்து கொடுப்பார்கள் எல்லாம் அவர்களுடைய பொறுப்பிலேயே கொடுத்து விடுவார்கள் நாணயம் ,வாக்கு முதலிய அவர்களிடம் உள்ள குணங்கள்
யாருக்கும் தேவை இல்லாமல் பயப்பட மாட்டார்கள் உண்மையை உரக்க எடுத்து சொல்வார்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு குறிப்பிட்டு சொல்லும் படி நல்லபெயருடன் வாழ்ந்தார்கள். பீ மு ஐயா மூலமாக மாத்திரைகள் வரும். அவர்கள் எங்கள் வீட்டில் படுத்திருக்கும் போது இரவில் வபாத் ஆகிவிட்டார்கள் கடைசி வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள் சிறிது சர்க்கரை நோய் இருக்கும
எங்கள்
ஆயிஷா நனிமா ஒரு சகாப்தம் அவர்களை வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது
நம்ம
திருப்பத்தூரில் எனது மலரும் நினைவுகள் சில.
முன்பு இரண்டு பெரிய மளிகை கடைகள் தான்இருந்தது வாத்தியாரம்மகன் காசி, அரபி ராவுத்தர் மளிகை கடைகள் மற்றும் சிறிய கடைகள் இருந்தது மக்களிடத்தில் வருமானம் இல்லாததால் நாணயக் குறைவு கொடுக்கல் வாங்கலில் சிக்கள் போதிய வருமானம் கிடைக்க வழி இல்லை இன்று நிலை அப்படி இல்லை பெரும்பாலான வர்கள் வெளிநாட்டுக்கு சென்று தங்கள் வாழ்வாரத்தை பெருக்கி கொண்டார்கள் சாதாரணமாக கீழ் நிலையில் உள்ளவர்கள் கூட சொந்தமாக வீடு கட்டி செழிப்பாக வாழ்ந்து வருகிறார்கள் உதாரணமாக சீதளிகரையில் மாட்டுக்கு லாடம் கட்டும் லாடக்காரர் அவருடைய வாரிசுகள் வெளிநாட்டுக்கு சென்று நல்ல சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டி தங்கமணி தியேட்டரில் எதிர்பார்ப்பு பெரிய பள்ளிவாசல் கட்டி இருக்கிறார்கள்
இங்குள்ள பெரியவாசலில் நல்லவிதமாாக இமாம்கள் பயான்கள் செய்து ,மற்றும் தவ்ஹீத் ஜமாத் இஸ்லாம்பற்றி எடுத்துசொல்லி முஸ்லிம்கள் இடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுடைய அறிவுரைகள் எல்லாம் இஸ்லாத்தை நன்கு புரிந்து நடக்கமுடிகிரது.
அரசியலில் நம்மவர்கள் அதிக பங்கு லகிக்கிறார்கள்
இப்போது எங்கள் மக்கள் கையில் அதிகமாக பணம் புழக்கம் இருப்பதால் வியாபாரம் அதிகப்படியான கடைகள் வந்து பெரிதாக நடந்து வருகின்றது.
எனது தாயார் பாத்திமா பீவி அவர்களைப் பற்றி பதிவிடாமல் இருக்க முடியாது எங்கள் நணிமா அவர்களுக்கு சிறுவயதில் ஓத கற்றுக் கொடுக்கவில்லை .இவர்களாகவே சற்று தூரத்தில் சிங்கம்புணரோட்டில் இருக்கும் ஒரு ஒஸ்தாபியிடம் குர்ஆன் தினமும் சென்று குர்ஆன் ஓத கற்றுக் கொண்டார்கள் இவர்கள் இவர்களுடைய நெருங்கிய தோழிகள் ஜெமினா அத்தமா அடிக்கடி அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் மற்றும் அருகில் உள்ள முகமதாபாத்து மற்றும் இருவர் அவர்கள் மிகவும் தீவிரமாக இஸ்லாமிய விஷயங்களில் பேசிக் கொண்டிருப்பார்கள் அனைவரும் முரீது வாங்கும் நிலைக்கு போய் வாங்கி விட்டார்கள்
மற்றபடி இவர்களது வாழ்க்கையில் எனது தங்கை மகமூதூ என்ற மல்லிகா அவர்களுக்கு பரமக்குடியில் திருமணம் நடந்தது அது விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் கூட்டி வந்து விட்டோம் பிறகு தங்கைக்கு உறவு முறையில் திருக்கழாப்பட்டி திருமணம் முடித்துக் கொடுத்தோம் முடித்துக் கொடுத்தோம் தங்கைக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது அதை தாயார் அவர்களே வளர்த்து வந்தார்கள் அதன் பின் எனது தம்பி மனைவி லபாத்தாகி ஆகிவிட்டார்கள் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் .இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை அந்த குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
நான் சென்னையில் இருக்கும் போது அவர்களை என்னோட கூட்டி வருவதற்கு முடியவில்லை கடைசி வரை பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு திருமணங்கள் முடித்து வபாத்தாகி விட்டார்கள் இறக்கும் போது வயதுவயது 63 அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தது மொத்தம் 7 + 4= 11. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியத ஒரு தியாகி
எனது தாயார். அவர்கள் படித்து வந்த புத்தகங்கள் என் கைவசம் வைத்திருக்கிறேன அப்பொழுது தமிழில் குர்ஆன் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வந்துவிட்டது அதைப் படித்து குர்ஆனுடைய விளக்கங்களை அறிந்து கொள்வார்கள் அந்த புக் இத்துடன் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன் அவர்களுடைய மன்னரையுயில் அல்லாஹுத்தஆலா வெளிச்சத்தை உண்டாக்கி கியாமத்து நாள் வரை நிம்மதியாக உறங்கி கேள்வி கேட்கப்படும் நாளில் அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் புக செய்யும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்
என்னுரை
சொந்த ஊரின் நினைவுகள் ,அதில் இரண்டரக் கலந்து விட்ட உறவுகள் பற்றி சகோ சிக்கந்தர் எழுத்தைப் படித்தோம்
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
21022024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment