சொந்த ஊர் 13
சகோ மெகராஜின் பார்வையில்
14022023 புதன்
_
சகோ மெகராஜ்
"திருப்பத்தூர்
சொந்த ஊர்
எனக்கு மிகவும்
மிகவும்
பிடிக்கும்
சின்ன வயதில் அத்தா அம்மா எல்லோரும் மகிழுந்தில் போவது
அடுத்து பள்ளிப் பருவத்தில் 9ஆம் வகுப்பு பெரியத்தா வீட்டில் தங்கிப்படித்தது
மூன்றாவது
திருமணமாகி ஆறு ஆண்டுகள் அங்கே இருந்தது
எல்லாமே இனிமை இனிமை இனிமை
அத்தா அம்மாவுடன் போகும்போது தலையில் சும்மாடு அதன் மேல் தண்ணீர் குடம் சுமந்து வரும் பெண்கள் கண்ணில் படுவது திரு நெருங்கி விட்டதை தெரிவிக்கும்
வீடுகளில் கடகம் எனப்படும் ஓலைக் கூடைகள் இன்னொரு அடையாளம்
பயணிக்கும்போதே அவ்வளவு இடநெருக்கடியில் அம்மா திரு வழக்கப்படி சேலையை பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொள்வார்கள்
அப்படிக் கட்டி விட்டால் தலையிலிருந்து முக்காடு விலகாமல் இருக்குமாம்
பெரியத்தா வீடு பீ மு மாமா வீடு சரிவுமாமா வீடு எல்லாம் பிடிக்கும்
இதற்கெல்லாம் மேல் பிடித்தது அச்சுக் கட்டு
மீசை தலைப்பாகையுடன் கம்பீரமான மாமாவின் தோற்றம் பாரதியாரை நினைவூட்டும்
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் என்பது அச்சுக்கட்டு வீடுதான் ஆங்காங்கே இடிந்த
மண் சுவர் ஓலைக்கூரை அதற்குள் பெரிய குடும்பம்
திரு போனதும் அச்சுக்கட்டுக்கு ஓட்டமாய் ஓடுவோம்
பார்வையிலும் சொல்லிலும் பிரியத்தை தங்கை மக்கள் மேல் காண்பிக்கும் மாமா அதே அளவு குப்பியும்
ஆளுக்கு ஓரணா கொடுப்பார்கள்
எங்கள் வீட்டில் யாருக்கும் காசு கொடுக்கும் பழக்கமும் நாங்களாக கடைக்குப் போய் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும் வழக்கமும் கிடையாது வேண்டியது எல்லாம் வீட்டுக்கு வந்து விடும்
அதனால் அந்த ஒரணா மிகப் பெரிய செல்வம் போல் தெரியும்
பம்பாய் மிட்டாய் கொட்டிக் கிழங்கு பனங்கிழங்கு
என பலவும் சுவைத்து மகிழ்வோம்
நிறைய மருதாணி செடி இருக்கும் அரைத்து கைகளில் பூசி விடுவார்கள்
மாமா மகள் ஆமினாஅக்கா தோற்றத்தில் எங்கள் அம்மா போல இருப்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும்
மாமா மக்கள் மாமுதா அக்கா நூரக்கா ஆமினா அக்கா எல்லோருக்கும் இன்றளவும் அவர்கள் தேவைகளுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன்
சீதேவிக் குளத்தில் முங்கி முங்கி குளிப்போம்
ஒரு குடம் தண்ணி
ஒரு பூ பூத்துச்சாம்
என்று பாடி முங்கி மூச்சடக்குவதில போட்டி போட்டு விளையாடுவோம்
அத்தாவுக்கு மதுரைக்கு குறுகிய கால பணி இட மாறுதல்
பள்ளியில் படிக்கும் என்னையும் ஜோதி. சர்புதீன் சுராஜ் இவர்களையும் திருவில் பெரியத்தா வீட்டில் தங்கிப் படிக்க வைத்தார்கள்
நான் 9 ஆம் வகுப்பு
பெரியத்தா வீட்டில் குளியலறையெல்லாம் இல்லாதது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை
அந்த அளவுக்கு பாசமாக இருந்தார்கள் பெரியம்மா குடும்பத்தில் அனைவரும்.
சரிவண்ணன் மிகப் பிரியமாகப் பேசும்
ஜமாலண்ணன் வேடிக்கையாகப்பேசி மகிழ்விக்கும்
.
பெரியம்மா காத்தூன் அக்கா பரிமளா அக்கா எல்லோரும் சிறிதும் வேறுபாடில்லாமல் பாசத்துடன் பழகுவார்கள்
திருமணமாகி ஆறு ஆண்டுகள் திரு வாழ்க்கை
,SI Manzil எனும் மிகப் பெரிய மாளிகை எங்கள் வீடு
நயம் மொசைக் தரையுடன் அறுபதாண்டடுகள் கடந்து இன்றும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மன்zi,ல்
எனும் கட்டிடம்
ஊர்மக்கள் எல்லொரும் ஒற்றுமையாக இணக்கமாக இருப்பார்கள்
மாலை நேரத்தில் மாதர் சங்கம் போல் பெண்கள் எல்லாம் கட்டிடத்தில கூடிப் பேசுவார்கள்
கோடை காலத்தில் உறவுப் பெண்கள் பலர் அங்கே தூங்குவதும் உண்டு
பிள்ளை பிறந்த நாற்பதாம் நாளன்று உறவினர்கள் அனைவருக்கும் எண்ணெய் சிகைக்காய் கொடுத்து குளிக்கச் சொல்வார்கள்
பா(ல்)ச்சோறு ஆக்கி எல்லோருக்கும் கொடுத்து விடுவார்கள்
குளியல் உடை மாற்றுதல் எல்லாம் சீதேவியில்தான்
உடை மாற்ற அறை எதுவும் இல்லை
குளிக்கும் சேலையை பகுதி பகுதியாக துவைத்து
காய வைத்து லாவகமாக உடுத்திக்கொள்வார்கள்
விடிவதற்குள் பெண்கள் குளியலை முடித்து கிளம்பி விடுவார்கள்
அதிக பணத்தாசை இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாக நிறைவாக வாழ்வார்கள்
சொல் செயல் எல்லாவற்றிலும் கலை நயம் இலக்கிய நயம் கலந்து நிற்கும்
அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர் பெயர் லொகர் வாச்சா
அவருடைய துணைவியிடம்
"அசர் சௌக்கியமா" என்று நக்கலாக கேட்பார்கள்
திட்டுவது கூட வாழ்த்துவது போல
"அடி அரசாளுவா மகளே"
"மண்ணாளுவா மகளே"
"நல்லாஇரு"
என்றுதான் வரும்
ஓலைக்கூடை முடைதல் நெகிழி பை செய்தல் பூத்தையல் குரோஷா லேஸ் பின்னுதல் போன்ற கை வேலைகளை பொழுது போக்காக கலை நயத்துடன் . செய்வார்கள்
.
பெரும்பாலான வீடுகளில்
பயிர்க்குழி என்று ஒரு சிறிய தோட்டம் இருக்கும்
அதில் கீரை அவரை கத்தரி வெண்டை போன்ற செடிகள் இருக்கும்
முருங்கை மரமும் இருக்கும்
அதிகமாக விளையும் காய்களை காய வைத்து வற்றலாக்கி விடுவார்கள்
இப்படி ஒரு எளிய. உணவுத் தண்ணிறைவு
சொட்டாங்காய் தாயம் கேரம் விளையாட்டுகள் பொழுது போக்கு
ஷபே பராத் இரவுக்கு களி
27 ஆம் இரவுக்கு கொழுக்கட்டை
10 ஆவது நோன்புக்கு ரொட்டி
. எல்லாம் செய்து வீட்டுக்கு வீடு கொடுத்து விடுவது வழக்கம்
குழந்தை பிறந்தால் வீட்டுக்கோ மருத்துவ மனைக்கோ பெண்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க வருவார்கள்
பிறந்தது அடுத்தடுத்துப் பெண் குழந்தை என்றால்
"பெங்(ண்) குடிதாம்மா பெருங்குடி
நீ ஒன்னும் கவலைப்படாதே"
என்று ஆறுதல் சொல்வார்கள்
ஆனால் அறை வாசலைத் தாண்டுமுன்பே
"ம் அரசுக்கு துணையா இன்னொரு அரசு பிறந்தி ருக்கலாம் " என்று காது படவே சொல்வார்கள்
சொல்லிவைத்தது போல் எல்லோரும் சொல்லும் வாழ்த்துகள் இவை
மருத்துவ மனை என்றால் பெரியாஸ்பத்ரி கண்ணாஸ்பத்ரி
என்று பெயர் பெற்ற ஸ்வீடிஷ் மிஷன் ம மனைதான்
மிகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பான மருத்துவ சேவை
அதில் செட்டிநாடு வார்டு ஒன்று இருக்கும்
அதையொட்டி பெரிய பெரிய வீடுகள் இருக்கும்
பேறுகாலத்துக்கு துணைக்கு கூட்டமாக வந்து அந்த வீடுகளில் தங்கி சமையலுக்கு ஆள் வைத்து வகைவகையாக செட்டி நாட்டு உணவுகள் செய்து சாப்பிடுவார்கள்
குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அறைக்குள் வராமல் வாசலிலேயே நின்று நலம் விசாரிப்பது அவர்கள் வழக்கம்
எங்கள் ஊர் பழமொழிகளில் நினைவில் நிற்கும் ஒரு சில
"பொன்னுப் பொடியை சிந்தினாலும் கீரைப் பொடியை சிந்தக்கூடாது"
"கண்ணு பாத்தா கை வேலை செய்யும் "
ஏதாவது வேலை சொல்வதென்றால்
தங்க மக பொன்னிரியா
என்று அருமையாக அழைப்பார்கள்
சுருக்கமாக சொல்வதென்றால்
ஏற்றத்தாழ்வு கருதாமல்
சாதி மதம் பாராமல் அலட்டிக் கொள்ளாமல் நிறைவாக ஒருவருக்கொருவர் உதவி
ஒன்றுமையாக வாழும் நல்ல சமுதாயம் எங்கள் ஊர்
என் மொழி
சகோ மெகராஜ் சனவரி மாதம் அனுப்பிய பல குரல பதிவுகளின் தொகுப்பு இது
குரல் தட்டச்சு சரியாக வராததால் குரலைக் கேட்டு கேட்டு. முடிந்த வரை எழுத்தாக்கினேன் சற்று சிரமம் தான்
சரியான தொகுப்பாக அமைந்திருக்கிறதா என்பதை சகோ மெஹராஜும் படிக்கும் நீங்களும் தான் சொல்லவேண்டும்
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
14022024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment