Thursday, 31 October 2024

திருமறை குரான் சுராஹ் 80 கடுகடுத்தார் 01112024 வெள்ளி






 திருமறை குரான்

சுராஹ் 80 கடுகடுத்தார்

01112024 வெள்ளி

கடுகடுப்பாகத் துவங்கும் சூராஹ் எது ?
காரணம் என்ன ?
விடை சுராஹ் 80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத்---முதல் சரியான விடை
சிராஜுதீன்
பீர் ராஜா
ஷிரீன் fபாருக் &
ஷர்மதா
விளக்கம்
80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-ؕ‏
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
இறை வசனங்கள் தெளிவாக பொருள் விளங்கும்படி இருக்கின்றன
இன்னும் விளக்கம்
(சகோ சிராஜுதீன்)
ஒரு நாள் நபி (ஸல்) குறைஷி தலைவர்களிடம் தாவா செய்துக்கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி அங்கு வந்தார்கள். அவர்கள் குறைஷிகள் மத்தியில் இழிவாக பார்க்கப்பட்டவர். ஆகவே நூஹ் (அலை) அவர்களது சமுதாயம் கூறியது போல இந்த குறைஷிகளும் அங்கிருந்து சென்றுவிடுவார்களோ என்று அஞ்சி முகத்தை கடுகடுப்பாக்கி முகத்தை திருப்பிக்கொண்டார்கள். இதைக்கண்டித்து அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கி வைத்தான் என தஃப்ஸிர் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
சகோ தல்லத்
அத்தியாயம் 80
2ம் வசனத்தில் காரணம் உள்ளது.
ஒருவரின் ஊனத்தை வைத்து(தோற்றத்தை வைத்து)எடைபோடவோ முகம் சுளிக்கவோ) கூடாது என்பதை உணர்த்த இறக்கிஅருளப்பட்ட அத்தியாயம்
சுருக்கமாக
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை இறைவன்
நபி ஸல் அவர்களிடம் சொல்வது போல் உலக மக்கள் அனைவருக்கும் சொல்கிறான்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்

01112024 வெள்ளி
28 ரபி உல் ஆகிர் (4) 1446
சர்புதீன் பீ

Wednesday, 30 October 2024

சட்டமும் நான் உரைத்தேன் 30102024Wed

 








சட்டமும் நான் உரைத்தேன்

30102024Wed
சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வார்கள்
அது சரியா என்று கேட்கும் அளவுக்கு எனக்கு சட்ட அறிவுஇல்லை
இருந்தாலும் அடிக்கடி கண்ணில் /காதில் படும் சட்டச் சொற்களுக்கு
எளிமையான விளக்கம் கொடுக்க ஒரு முயற்சி
English version by
A budding young advocate
தமிழில் நான்
(Duly verified and necessary corrections made by
Experienced second generation Advocate Sheik Peer-My son in law)
Thanks to both of them
Let us pray to the Almighty the advocates to grow up and reach the peak
Questions
What is the difference between?
வேறுபாடு என்ன?
1 Summon and Warrant?
2 Munsif and Magistrate?
3 District court and Sessions court?
4 custody and arrest?
5 Civil court and Criminal court?
Answers in English and Tamil
1. Summon: It is a legal notice that notifies the person about the legal obligation (responsibility) to appear before the court.
Usually issued to a person/parties/witnesses.
Warrant: It is a legal document whose object is to bring the accused (who has ignored the summons and has not appeared) to the court. It's is issued by
the enforcement authorities.
Summon-அழைப்பாணை என தமிழில் சொல்லலாம் என எங்கோ படித்த நினைவு
சாட்சிகளும் வழக்கில் தொடர்பு உடையவர்களும் நீதி மன்றத்துக்கு குறிப்பிட்ட நாளில் வரவேண்டும் என்ற சட்டபூர்வ கடமையை தெரிவிக்கும் கடிதம்
Warrant – இதுவும் பிடியாணை என தமிழில் சொல்லலாம் என எங்கோ படித்த நினைவு
குற்றம் சாட்டப்பட்டவர் அழைப்பாணைக்கு வராமல் இருந்தால் பிடியாணை அனுப்பப்படும்
அதற்கும் வராவிட்டால் அவர் கைது செய்யப்படலாம்
இது கைது செய்ய ஆணையிடும் அதிகாரம் படைத்தவர்களால்தான்
பிடியாணை வழங்க முடியும்
2. Magistrates generally preside over lower courts, handling minor offences, preliminary hearings, and family matters. He does not have the power to award life imprisonment or death sentences.
Magistrates (நீதி மன்ற நடுவர்)
சிறு குற்றவியல் வழக்குகள்,, குடும்பப் பிரச்சினைகளை கையாளும் கீழமை நீதி மன்றத் தலைமை அதிகாரி
வாழ்நாள் தண்டனை ,மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை
Munsif (உரிமையியல் நடுவர்)
சிறு உரிமையியல் வழக்குகளைகே , கையாளும் நீதி மன்றத்தில் தலைமை அதிகாரி
3. The main difference between a district court and a sessions court is that a district court is the primary court for civil matters, while a sessions court is the court for criminal matters
district court and a sessions court(மாவட்ட நீதி மன்றம்/அமர்வு நீதி மன்றம்
பொதுவாக அமர்வு நீதி மன்றம் குற்றவியல் வழக்குகளைகையாளும்
மாவட்ட நீதி மன்றம் உரிமையியல் வழக்குகளை கையாளும்
. Both courts have appellate jurisdiction of respective fields.
நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு மேல் முறையீடுகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்கள்.
4. Arrest is a mode of formally taking a person in police custody. Whereas ‘custody ‘ merely denotes surveillance or restriction on the movement of the person concerned. The words custody and arrested are not synonymous terms. In every arrest, there is
custody, but not vice versa.
. Arrest/ custody (கைது/ காவல் )
காவல் என்பது ஒருவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து கட்டுபடுத்தும் நடவடிக்கை
கைது என்பது கைது செய்து முழுமையாக காவல் துறையின் பிடியில் வைத்திருப்பது – சிறையில் அடைப்பது
ஒவ்வொரு கைதிலும் காவல் உண்டு
ஆனால் எல்லாகக்காவல்களும் கைது ஆகாது
Once arrest is made within 24 hours the arrested person to be produced before court. The court after satisfying prima facie accusation may remand the accused and send to prison, it is Judicial custody. In case police seeks for custody of the person for further investigation, if court permits for particular period it is called police custody.
No person can be kept in custody without permission of court, then it amounts to
Illegal detention.
கைது செய்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்
முதல் நோக்கு குற்றச்சாட்டு சரிதான் என்று தெளிவு படுத்திக்கொண்டு
சிறைக்கு அனுப்பலாம்
இது நீதி மன்றக்காவல்
மேற்கொண்டு விசாரணை செய்ய நீதி மன்ற அனுமதியோடு, அனுமதித்த நாட்களுக்கு காவல் துறை காவலில் எடுக்கலாம்
நீதி மன்ற அனுமதி இல்லாமல் ஒருவரை காவலில் வைத்திருப்பது
சட்டத்துக்குப் புறம்பானது
5.Civil law deals with disputes between the private individuals and organization.
Civil court protects the rights of the parties and solve the disputes and has lower
burden of proof.
Remedies typically include monetary compensation rather than fines or imprisonment.
In criminal cases it’s deals with offenses against the society as whole, rather than disputes between two parties.
Criminal law involves the burden of punishments and penalties upon those, who are found guilty of criminal offenses.
In compare to civil cases the burden of proof are higher in criminal cases.
In criminal cases the cases are initiated and conducted by the government attorney.
Remedies of criminal cases including Imprisonment, fines and both.
Civil law(உரிமையியல் சட்டம் )
இது தனி மனிதர்கள்/ நிறுவனங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைக்
கையாளுகிறது
குற்றத்தை நிருபிக்கும் பொறுப்பு இதில் குற்றவியல் வழக்குகளை விடகுறைவு
இதில் தீர்ப்பு என்பது பெரும்பாலும் பண இழப்பீடு ஆக இருக்கும்
சிறை தண்டனை, தண்டம் விதிப்பது இதில் அதிகம்இல்லை
Criminal law (குற்றவியல் சட்டங்கள் )
தனி மனிதருக்கு இடையில் இல்லாமல் சமுதாயத்துக்கு எதிரானா குற்றங்களைக் கையாளுகிறது
இந்த வழக்குகளில் குற்ற்ம் தொடுத்து வழக்கை நடத்துபவர் அரசுவழக்கறிஞர்
குற்றத்தை ஐயமற நிருபிக்கும் பொறுப்பு இதில் அதிகம்
சிறை தண்டனை, தண்டம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்
Let us meet tomorrow in Quran by His Grace
30102024Wed
Sherfuddin P

Monday, 28 October 2024

English Quiz canoodling 29102024 Tue

 



English Quiz

canoodling
29102024 Tue
A word of 10 letters including 4 vowels
Initial letter c
Not A very common word
Indicates sort of amorous activities
First three letters make a positive word
What is that word?
Answer
Canoodling=
to engage in amorous embracing, caressing, and kissing
Greetings and congratulations to those who sent correct answers:
M/S
A R Viswanathan – first correct answer
&
Franklin Selvaraj
Thanks to M/S AshrafHameeda and Sirajuddin for participating
Let us meet tomorrow by His Grace
291020234 Tue
Sherfuddin P

Saturday, 26 October 2024

தமிழ் (மொழி )அறிவோம் வேதாளம் சொல்லும் கதை 27102024 ஞாயிறு

 




தமிழ் (மொழி )அறிவோம்

வேதாளம் சொல்லும் கதை
27102024 ஞாயிறு
இன்று ஒரு மாறுபட்ட பதிவு
பள்ளிப் பருவத்தை நினைவு கூறும் பதிவு
விக்ரமாதித்தன் கதை அந்தக்கால சிறுவர மாத இதழான
அம்புலிமாமாவில் தொடர்கதையாக வந்து மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது
“தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன்”
என்று ஒரே மாதிரியாக ஒவ்வொரு மாதமும் துவங்கும்
மிகச் சுருக்கமாக கதையின் கருத்தை மட்டும் சொல்கிறேன் :
(விக்ரமாதித்தன் –சுருக்கமாக விக்ரம் )
ஒரு யாகத்திற்கு விக்ரமனுக்கு வேதாளம் தேவைப்படுகிறது
(முருங்கை) மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளத்தைக் கைப்பற்றி விக்ரம் தன தோளில் சுமந்து செல்லும்போது வேதாளம் ஒரு கதை சொல்லி ,கதையின் நிறைவாக ஒரு கேள்வி கேட்டு விட்டு
“இதற்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும் என்று எச்சரிக்கும்
விக்ரம் பதில் சொன்னவுடன் அவன் மௌனம் கலைந்ததால் வேதாளம் பறந்து மரத்துக்குப் போய்விடும்
தொடர்ந்து முயற்சி செய்த விக்ரமுக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கும்
வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் விக்ரம் மௌனம் காப்பான்
ஆனால் அவன் தலை வெடிக்காது
வேதாளத்தைக் கொண்டு போய் யாகத்தை நிறைவு செய்து விடுவான்
அன்று வேதாளம் கேட்ட கேள்வி என்ன ?
அதற்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் விக்ரம் தலை வெடிக்காதது ஏன்
இதுதான் இன்றைய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
விடை
மிகச் சுருக்கமாக
A அப்பா A1 மகன்
B அம்மா B1 மகள்
எப்படியோ அப்பா A மகள் B1 ன்னை திருமணம் செய்கிறார்
அதே போல் அம்மா B மகன் A1ன்னை
இந்த இரு இணைகளுக்கு குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளுக்குள் என்ன உறவு முறை ?
இது விடை இல்லாத ஒரு வினா
எனவே விக்ரம் மௌனம் காப்பான்
ஆனால் அவன் தலை வெடிக்காது
வேதாளத்தைக் கொண்டு போய் யாகத்தை நிறைவு செய்து விடுவான்
இந்தக்கதைதான் அபூர்வ ராகங்கள் படத்துக்கு கருவாக அமைந்தது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முழுமையான சரியான முதல் விடை –நன்றி
வேதாளம் விக்கிரமாதித்தனுக்குக் கூறிய இறுதிக்கதை பின் வருமாறு:
ஒரு அரசனும் அவனுடைய வளர்ந்த மகனும் ஒரு சமயம் ஒரு பாதையில் நடக்கையில் இரண்டு பேரின் நடந்த காலடித் தடம் கண்டார்கள். ஒருவர் கால் பதிவு பெரிதாகவும் மற்றொருவருடையது சிறிதாகவும் இருந்தன.
எதிரில் வந்த வழிப்போக்கனை இத்தடங்கள் பற்றி வினவ, இரு வளர்ந்த பெண்கள் முன்னால் செல்கிறார்கள், அவர்கள் காலடிகள்தான் இவை என்றான்.
அரசன் 'உன் அம்மா இறந்து விட்டார், ஆகவே பெரிய காலடித் தடம் உடைய பெண்ணை நானும், சிறிய காலடி உள்ள பெண்ணை நீயும் மணந்து கொள்வோம்' என, மகனும் உடன்பட, வேகமாகச் சென்று அப்பெண்களைத் தடுத்தனர்.
அப்பெண்கள் ஒரு இளம் பெண்ணும் அவளுடைய கணவனை இழந்த தாயும் ஆவார்கள். அரசனும் மகனும் அவர்களை மணம் புரியக் கேட்க அவர்களும் சம்மதித்தனர்.
ஆனால் ஒரு சிக்கல். தாயின் காலடி சிறிதாகவும் மகளின் காலடி பெரிதாகவும் இருந்தது.
இருந்தாலும் அரசன் முதலில் ஒப்புக்கொண்டபடி தகப்பன் பெரிய கால் பாதமுடைய மகளையும், மகன் பெரிய பாதமுடைய தாயையும் திருமணம் புரிந்தனர்.
காலப் போக்கில் அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.
தாயின் குழந்தைக்கு, மகள் குழந்தையின் உறவு என்ன?
மகள் குழந்தைக்குத் தாயின் குழந்தையின் உறவு என்ன?
அவர்கள் தாய், தந்தைகள் என்ன உறவு?
வேதாளம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முயன்ற விக்கிரமாதித்தனுக்குத் தலை சுற்றியது.
எப்பதிலும் கூற முடியவில்லை.
மொத்தம் 23 கதைகளுக்கு பதில் கூறிய விக்ரமன் இந்த 24 வது கதைக்கு உறவின் முறை தெரியாத காரணத்தால் பதில் தெரியாதால் அனைத்து கதைக்கும் பதில் கூறிய விக்ரமன் மீது இரக்கம் கொண்ட வேதாளம் தான் நயவஞ்சக முனிவன் ஒருவனால் விக்ரமனை வெல்ல சூழ்ச்சி செய்து அனுப்பட்ட கதையைக்கூறி பின்னர் அவனை வெல்வதற்கு விக்ரமனை அழைத்து சென்று வெற்றி பெற உதவியது.
தல்லத்-சுருக்கமான சரியான விடை
ஓரளவு சரியான விடை அனுப்பிய சகோ
கணேச சுப்பிரமணியம், சிவ்சுப்பிரமணின்
குறிப்புகள் அனுப்பிய சகோ ஹசன் அலி மூவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௭௧௦௨௦௨௪
27102024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 24 October 2024

திருமறை குரான் 39 :42 25102024 வெள்ளி

 




திருமறை குரான்

39 :42
25102024 வெள்ளி

ஏக இறைவனாகிய அல்லாஹ் உயிர்களை நித்திரையில் கைப்பற்றுகிறான்
என்ற கருத்துடைய வசனம் எது?
விடை
39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்);42
சரியான விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் --முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்.
ஷர்மாதா &
ஷிரீன் fபாருக்
விளக்கம்
أَمِஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.(39:42)
நம் வாழ்நாளை நிர்ணயம் செய்வது முழுக்க முழுக்க இறைவன் கையில்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதை இந்த வசனம் தெளிவாக்குகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
21 ரபி உல் ஆகிர் (4) 1446
25 10 2024 வெள்ளி.
சர்புதீன் பீ

Tuesday, 22 October 2024

மூலிகை அறிமுகம் கொடுக்காப்புளி 23102024 புதன்

 




மூலிகை அறிமுகம் 

கொடுக்காப்புளி

23102024 புதன் 

மூலிகைகளை சுவைத்து கொஞ்ச நாளாகி விட்டது 

அதற்கு ஈடு செய்வது போல் இன்று ஒரு சுவையான  மூலிகை 

கொடுக்காப்புளி

சுவையான தின்பண்டமாக அறியப்பட்ட இதுவும் ஒரு மூலிகை என்பது

சில நாள் முன்பு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் 

என்னைப்பொறுத்தவரை தின்பண்டம்  மட்டுமல்ல 

இளமை நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு இனிமை

60  ஆண்டுகள் முன்பு காரைக்குடியில் நாங்கள்  வாழ்ந்த வீடு  பற்றி  விரிவாக எழுதியிருக்க்றேன்

பெரிய வீடு  அதற்கேற்ற பெரிய திறந்த வெளி வீட்டு முன்புறம் 

சுருக்கமாகச் சொன்னால் இன்றைய தலைமுறையினர் நுழை வாயிலிலிந்து வீட்டு வாசலுக்கு நடக்கத் தயங்குவார்கள் 

அந்தத் திறந்த வெளியில் இரண்டு மூன்று  கொ பு  மரங்கள் இருந்ததாக நினைவு

நல்ல உயரமாக இருக்கும் .முள் இருக்கும் துரட்டியால்தான் காய், பழம் பறிப்போம்

கிடைத்ததை, விரும்பியதை மனம்போல உண்போம் –கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை

அந்த வகையில் எங்கள் தலை முறையினர் கொடுத்து வைத்தவர்கள் 

இலந்தைபழம்,கொ பு கொய்யா எல்லாம் வீட்டில் மரத்தில் பறித்த பழங்களை நிறைய சாப்பிட்டோம் 

இது  சத்தானது ,உடலுக்கு  நல்லது என்றெல்லாம் பார்க்காமல் விளயாட்டாக 

சாப்பிட்டோம்

குழந்தைகள் குழந்தைகளாக , சிறுவர் சிறுமிகள் சிறுவர் சிறுமிகளாக 

வளர்ந்தோம்

(நினைவுக்கடலில் மூழ்கி விடாமல் விரைந்து வெளியே வருகிறேன்   

)

இப்போதோ வில்யாட்டே வினையாக –வீடியோ கேம் 

கொபு வில்  அதிகமாக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது

இது பற்றி   ஒரு  செய்தி:

ஆடு இந்த மரத்தில் ஏறி  காய்,பழங்களை சாப்பிட்டு விட்டு அப்படியே மேலிருந்து கிழே

குதித்து விடுமாம் 

அந்த அளவுக்கு கால் எலும்புகள் வலிமையாகி விடுமாம் 

மற்ற பலன்கள்

- கொடுக்காப்புளி பழம் 

 செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

- இது வயிறை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

- குடல் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய கொடுக்காப்புளி பயன்படுத்தப்பட்டுள்ளது

- இந்த பழம் 100 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.

நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது

கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. 

- இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டாக செயல்படுகிறது.  

- மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது.

- கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி தவிர, புரதச்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

கொடுக்காப்புளி பழம் பார்ப்பதற்கு புளியம்பழம் போலவே காணப்படுகின்றது. இது வடிவத்தில் ஜிலேபி போல வளைந்து இருக்கின்றது. பழுத்தவுடன், இந்த பழம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. கொடுக்காப்புளி பழம் இனிமையான சுவை கொண்டது. 

i: ஜலேபி என்ற சொல்லைக்  கேட்டவுடனேயெ, ஒரு இனிமையான, மிருதுவான இனிப்பின் நினைவுதான் நமக்கு வரும். 

ஜங்கல் ஜிலேபி என்றழைக்கப்படும் கொடுக்காப்புளி (கொடுக்காய்ப்புளி) பழமும் அப்படித்தான்.

 நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இந்த பழத்தின் அறிவியல் பெயர் 'Pithecellobium dulce'. இது Madras Thorn என்றும் அழைக்கப்படுகின்றது

வழக்கமான எச்சரிக்கை

வீட்டிலும்  வெளியிலும் நாம் பார்க்கும், பார்த்த மரம் செடி கொடிகளை

மூளிகைகளாக அறிமுகம் செய்யவே இந்தப்பதிவு

இது மருத்துவக் குறிப்பு அல்ல

இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம் 

23102024 புதன் 

சர்புதீன் பீ

Monday, 21 October 2024

English Quiz Civil 22102024 Tue

 



English Quiz

Civil
22102024 Tue
A word of 5 letters including 2 vowels
Initial letter c
A very common word with multiple meanings and application
Few are
Administration
Army
Construction
What is that word?
Answer
Civil
No explanation needed I think
Contrary to my expectation
I received only one correct answer
Greetings and Congratulations to
Ms. Sharmatha
Thanks to M/s AR Viswanathan and Franklin Selvakumr
For participation (irrelevant answers)
Let us meet tomorrow by His Grace
221020234Tue
Sherfuddin P

Saturday, 19 October 2024

தமிழ்(மொழி )அறிவோம் பரை 20102024ஞாயிறு


                                        




 தமிழ்(மொழி )அறிவோம்

பரை
20102024ஞாயிறு
முந்தைய தலை முறையைக் குறிக்கும் ஒரு இரண்டே எழுத்துச் சொல்லுக்கு
என்ன குறிப்பு கொடுப்பது என்று மட்டுப்படவில்லை
முதல் எழுத்து திரை இயக்குனர் திரு பீம் சிங்கை ஓரளவு நினைவு படுத்தும
சொல்லின் மற்றொரு பொருள்
ஒரு அளவின் அலகு(unit of measurement)
என்ன அந்தச் சொல் ?
விடை
பரை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ கணேச சுப்பிரமணியம் -முதல் சரியான விடை
சோமசேகர்
அஷ்ரப் ஹமீதா
வேலவன்
தல்லத்&
வெங்கடேசன் –நன்றி விளக்கமான விடைக்கு
முயற்சித்த சகோ மெஹராஜ், ஆ ரா விஸ்வநாதன் இருவருக்கும் நன்றி
பரை
ஏழாம் தலைமுறை மூத்தப் பெண். பூட்டியின் பூட்டி
சிவசத்தி
அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41)
ஒரு அலகு (2 கன அடியும் 544M. M. 655.)
.
: நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை, பரன் + பரை
. ஏழு தலைமுறை என்போம். ஒரு தலைமுறை 60 ஆண்டுகள். ஈரேழு தலைமுறை என்போம். 7× 2× 60 = 840 ஆண்டுகள்
உறவுகளுக்குஇவ்வளவு சொற்கள் இருப்பது தமிழின் சிறப்பு
வேறு எந்த மொழியிலும் கிடையாது என்கிறார்கள்
இறைவன் நாடினால் நாளைஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௦௧௦௨௦௨௪
20102024ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 17 October 2024

திருமறை குரான் 21:23 18 102024 வெள்ளி

 






திருமறை குரான்

21:23


18 102024 வெள்ளி
“அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்”
இந்த வசனம் குர்ஆனில் எந்தப் பகுதியில் இடம் பெறுகிறது ?
விடை
சூராஹ் 21அல் அன்பியா( நபிமார்கள்) வசனம் :23
சரியான விடை எழுதி வாழ்த்து பாரட்டுப் பெறுவோர் :
சகோ
ஷர்மதா – முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஷிரீன் fபாருக் &
தல்லத்
இறைவனின் மாட்சிமையை ,முழுமையான ஆட்சி அதிகாரத்தை சொல்லும் இன்னொரு வசனம்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
.14ரபி உல் ஆகிர் (4) 1446
18 102024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 15 October 2024

ஆரஞ்சு மிட்டாய் 1610224 புதன்

 



ஆரஞ்சு மிட்டாய்

1610224 புதன்
எனக்கு மிகவும் பிடித்த இளமைக்கால சுவை ஆரஞ்சு மிட்டாய்
அதோடு இணைந்து நினைவில் மிதந்து வரும் பாக்கு மிட்டாயும் தேன் மிட்டாயும்
இன்றும் இதெல்லாம் கிடைத்தாலும் பழைய சுவை காணாமல் போய் விட்டது
கிடைக்காமலே போனது
பச்சைக் காகிதம் சுற்றிய நெய் மிட்டாய்
அகலமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் தேங்காய் மிட்டாய்
இவை இரண்டும் பாரிஸ் நிறுவன மிட்டாய்கள்
நல்லவை எல்லாம் காணாமல் போவதும் காலத்தின் கட்டாயம் போலும்
இளமை நினைவுகள் ---நீந்தினால் நீந்திக்கொண்டே இருக்கலாம்
ஒரு அளவில் கரை ஏறி நிகழ் காலத்துக்கு வருவோம்
அந்த இளைஞருக்கு வயது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை
எழுபது +தான்
உழைப்பு என்றால் அப்படி ஒரு உடல் உழைப்பு
காலை முதல் மாலை வரை வெய்யில்,குளிர் எதற்கும் அசராத உழைப்பால் மெலிந்து உரமேறிய உடல்
பால் பண்ணை உரிமையாளர் அவர்
நல்ல செல்வந்தர்
பணியாட்கள் ,உறவினர்கள் என்று பலபேர் இருந்தாலும் இவர் உழைத்துக்கொண்டே இருப்பார்
இவரைபார்த்தால் நோயே விலகி ஒடி விடும் என்று நினைப்பதுண்டு
இவரை கொஞ்ச நாளாக பார்க்க முடியவில்லை
வீட்டார் சொன்னதை நம்ப முடியவில்லை
உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார் என்றார்கள்
மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
வாய் புற்றுநோய் அவருக்கு
புகைத்தல் ,புகையிலை , பான்பராக் என எந்தப் பழக்கமும் கிடையாது
பின் எப்படி ?
அதுதான் உச்ச கட்ட அதிர்ச்சி
ஆரஞ்சுமிட்டாய் அவருக்குப் பிடிக்குமாம்
பிடிக்கும் என்றால் மிகவும் மிகவம் மிகவும் பிடிக்குமாம்
பிடித்ததனால் நிறையவே சாப்பிடுவாராம்
அதில் உள்ள வேதிப்பொருள்கள்தான் நோய்க்குக் காரணம் என்பது மருத்துவர் கருத்து
அளவுக்கு மிஞ்சினால் ஆரஞ்சு மிட்டாயும் நஞ்சுதான் போல
மருத்துவ மனையில் சேர்த்து இறைவன் அருளால் நோய் குணமாகி சில நாட்களில் வீடு திரும்புவாராம்
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு முழுமையான உடல் நலத்தையும் நீண்ட வாழ்நாளையும் அருள்வானாக
நிறைவாக
மருத்துவ மனைக்குப் போக வண்டியில் ஏறும் நொடி வரை உழைத்தாராம்
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
1610224 புதன்
சர்புதீன் பீ
May be an image of text
Like
Comment
Send
Share