Wednesday, 2 October 2024

புதன் பதிவு பல்கலைக் கழகம்குடும்ப வினா விடைபொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு 02102024புதன்

 




பல்கலைக் கழகம்

(புதன் ) சிறப்புப் பதிவு

02102024புதன் 

குடும்ப வினா விடை  

எங்கள் அத்தா அம்மா பற்றி சில எளிய வினாக்கள் 


அத்தா

உடன் பிறப்புகள் எத்தனை பேர் ?

அவர்கள் பெயர் என்ன  ?

அவர்கள் வாழ்கைத்  துணைகள் பிள்ளைகள் பற்றித் தெரியுமா ?

தெரிந்ததை சொல்லுங்கள் 


இதே வினாக்கள் 

அம்மாவுக்கும்

 உடன் பிறப்புகள் எத்தனை பேர் ?

அவர்கள் பெயர் என்ன  ?

அவர்கள் வாழ்கைத்  துணைகள் பிள்ளைகள் பற்றித் தெரியுமா ?

தெரிந்ததை சொல்லுங்கள் 


உடனே  விடை  சொல்லத் துவங்கி விட்டீர்களா ?

சிலர், பலர் இதில் கலந்து கொண்டு  விடை சொல்ல முடியாது 

---என் உடன் பிறப்புகள் அவர்கள்  வாழ்க்கைதுணை நலன்கள் 

---அம்மா அத்தாவின்  உடன் பிறப்புகளான எங்கள் பெரியத்தா ,சச்சா 

சின்னம்மா , மாமா குப்பியின் பிள்ளைகள் 


அதாவது எங்கள் தலை முறையினர் யாரும் கலந்து கொள்ளவேண்டாம் 

அதற்கு அடுத்த அதற்கும் அடுத்த தலை முறை முறையினருக்கான பதிவு  இது 

நீங்கள் அவர்களுக்கு வழி காட்டலாம் 


என்ன எங்கள் ஆர்வத்தை மட்டுப்படுத்தி விட்டீர்களே என்று நினைக்க வேண்டாம் 

இதைத் தொடர்ந்து 

எல்லோருக்குமான பதிவு open to all பொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு வருகிறது 

விடை 

தெரிந்தவரை முயற்சி செய்து விடை அனுப்பிய  ஒரே சகோ

அஷ்ரப் ஹமீதாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

ஒரு சிறிய ---இல்லை இல்லை

பெரிய வருத்தம , சினம் கலந்த வியப்பு 

எத்தனை பேரன் பேத்திமார் ,கொள்ளுப் பேரன் பேத்திமார்  அத்தா அம்மாவுக்கும் அவர்களின் உடன் பிறப்புகளுக்கு !

யாருக்குமே விடை தெரியவில்லையா இல்லை தேர்ந்ததை சொல்ல மனமில்லையா !!

விடை நான் சொல்வதா க இல்லை 

ஆர்வம் இருந்தால் உங்களுக்கு மூத்த தலைமுறையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்


பல முறை அத்தா அம்மாவின் உடன் பிறப்புகள் பற்றி  எழுதியிருக்கிறேன் 





பொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு 

 (புதன் ) சிறப்புப் பதிவு

உங்கள் ஊருக்குப் போகும் வழி எது ?


02102024 புதன் 


இது ஒரு தத்துவப் பதிவு என்று எண்ணி புறந்தள்ளி விட வேண்டாம் 

அதற்காகத்தான் தலைப்பிலேயே ‘புதிர்’ போட்டு விட்டேன் :


பொய்யூர் மெய்யூர் என இரண்டு சிற்றூர்கள் 

பொய்யூர் வாசிகள்  பொய் மட்டுமே பேசுவார்கள் 

மெய்யூர் – உண்மை மட்டுமே


மெய்யூரில் உள்ள ஒருவரைப் பார்க்க போகிறீர்கள்

ஒரு இடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்து ஓன்று மெய்யூருக்கு மற்றது பொய்யூருக்குப் போகிறது 

ஆனால்  எது எந்த ஊருக்கு என்று சொல்லும் பலகை இல்லை 


அங்கே ஒருவர் நிற்கிறார் 

அவர் இரண்டு ஊரில் ஒன்றைச் சேர்ந்தவர்  

ஆனால்  எந்த ஊர்க்காரர் என்பது தெரியாது 



அவரிடம்  ஒரு கேள்வி

ஒரே ஒரு கேள்வி 

கேட்டு நீங்கள் சொல்லவேண்டிய மெய்யூருக்குப் போக வேண்டும் 


என்ன கேட்பீர்கள் ?

விடை 

உங்கள் ஊருக்குப் போகும் வழி எது ?

விளக்கம் தேவை  இல்லை என நினைக்கிறன் 

சரியான விடை அனுப்ப்பிய ஒரே சகோ


கணேச சுப்ரமணியத்துக்கு  நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்

முயற்சித்த சகோ சின்ன தஙகத்துக்கு நன்றி 


முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கும் அஷ்ரப் ஹமீதாவுக்கும் நன்றி 


இறைவன் நாடினால் நாளை குர்ஆனில்  சிந்திப்போம் 

02102024புதன் 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment