மூலிகை அறிமுகம்
கொடுக்காப்புளி
23102024 புதன்
மூலிகைகளை சுவைத்து கொஞ்ச நாளாகி விட்டது
அதற்கு ஈடு செய்வது போல் இன்று ஒரு சுவையான மூலிகை
கொடுக்காப்புளி
சுவையான தின்பண்டமாக அறியப்பட்ட இதுவும் ஒரு மூலிகை என்பது
சில நாள் முன்பு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்
என்னைப்பொறுத்தவரை தின்பண்டம் மட்டுமல்ல
இளமை நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு இனிமை
60 ஆண்டுகள் முன்பு காரைக்குடியில் நாங்கள் வாழ்ந்த வீடு பற்றி விரிவாக எழுதியிருக்க்றேன்
பெரிய வீடு அதற்கேற்ற பெரிய திறந்த வெளி வீட்டு முன்புறம்
சுருக்கமாகச் சொன்னால் இன்றைய தலைமுறையினர் நுழை வாயிலிலிந்து வீட்டு வாசலுக்கு நடக்கத் தயங்குவார்கள்
அந்தத் திறந்த வெளியில் இரண்டு மூன்று கொ பு மரங்கள் இருந்ததாக நினைவு
நல்ல உயரமாக இருக்கும் .முள் இருக்கும் துரட்டியால்தான் காய், பழம் பறிப்போம்
கிடைத்ததை, விரும்பியதை மனம்போல உண்போம் –கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை
அந்த வகையில் எங்கள் தலை முறையினர் கொடுத்து வைத்தவர்கள்
இலந்தைபழம்,கொ பு கொய்யா எல்லாம் வீட்டில் மரத்தில் பறித்த பழங்களை நிறைய சாப்பிட்டோம்
இது சத்தானது ,உடலுக்கு நல்லது என்றெல்லாம் பார்க்காமல் விளயாட்டாக
சாப்பிட்டோம்
குழந்தைகள் குழந்தைகளாக , சிறுவர் சிறுமிகள் சிறுவர் சிறுமிகளாக
வளர்ந்தோம்
(நினைவுக்கடலில் மூழ்கி விடாமல் விரைந்து வெளியே வருகிறேன்
)
இப்போதோ வில்யாட்டே வினையாக –வீடியோ கேம்
கொபு வில் அதிகமாக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது
இது பற்றி ஒரு செய்தி:
ஆடு இந்த மரத்தில் ஏறி காய்,பழங்களை சாப்பிட்டு விட்டு அப்படியே மேலிருந்து கிழே
குதித்து விடுமாம்
அந்த அளவுக்கு கால் எலும்புகள் வலிமையாகி விடுமாம்
மற்ற பலன்கள்
- கொடுக்காப்புளி பழம்
செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- இது வயிறை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- குடல் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய கொடுக்காப்புளி பயன்படுத்தப்பட்டுள்ளது
.
- இந்த பழம் 100 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.
நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்
புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது
கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
- இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டாக செயல்படுகிறது.
- மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது.
- கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி தவிர, புரதச்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
கொடுக்காப்புளி பழம் பார்ப்பதற்கு புளியம்பழம் போலவே காணப்படுகின்றது. இது வடிவத்தில் ஜிலேபி போல வளைந்து இருக்கின்றது. பழுத்தவுடன், இந்த பழம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. கொடுக்காப்புளி பழம் இனிமையான சுவை கொண்டது.
i: ஜலேபி என்ற சொல்லைக் கேட்டவுடனேயெ, ஒரு இனிமையான, மிருதுவான இனிப்பின் நினைவுதான் நமக்கு வரும்.
ஜங்கல் ஜிலேபி என்றழைக்கப்படும் கொடுக்காப்புளி (கொடுக்காய்ப்புளி) பழமும் அப்படித்தான்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இந்த பழத்தின் அறிவியல் பெயர் 'Pithecellobium dulce'. இது Madras Thorn என்றும் அழைக்கப்படுகின்றது
வழக்கமான எச்சரிக்கை
வீட்டிலும் வெளியிலும் நாம் பார்க்கும், பார்த்த மரம் செடி கொடிகளை
மூளிகைகளாக அறிமுகம் செய்யவே இந்தப்பதிவு
இது மருத்துவக் குறிப்பு அல்ல
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
23102024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment