பாருக்குள்ளே நல்ல நாடு
091022024 புதன
தொலைக்காட்சி செய்தித்தாள் வலை ஒளியில் கண்ட கேட்ட படித்த செய்திகளால்
உச்ச நீதி மன்ற உணவகத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு உணவு வழங்க வாய்மொழி ஆணை
சைவம் அதிலும் வெங்காயம் பூண்டு சேராத சுத்த சைவ sசாத்வீக உணவு மட்டுமே
மட்டுமே வழங்கப்படும்
இதுவரை இல்லாத நடை முறை இது
இது 03 1024 சன் தொலைக்காட்சி செய்தி
அதே உச்ச நீதி மன்றம் பற்றி இன்னொரு செய்தி
03 1024 தினத்தந்தியில்
உத்திரப் பிரதேசம் ,மேற்குவங்கம் உள்ளிட்ட 11வட மாநிலங்களில் சிறைக் கைதிகள்
சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனியாக வைக்கப்படுகிறார்கள்
உயர் சாதியினருக்க்கு சமையல் போன்ற வேலைகள்
மற்றவர்களுக்கு பெருக்குவது சுத்தம் செய்வது போன்ற
இழிவான (செய்தியில் வந்த சொல் இது ) வேலைகள்
இப்போது உச்ச நீதி மன்றம் இந்த நடைமுறைகளை உடனடியாக மடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது
வட மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் பல வீடுகள் மேல்பூச்சு இல்லாமல் செங்கல் தெரியும்படி இருக்கும்
சரி இது ஒரு சிக்கன நடவடிக்கை என்று நினைப்பேன்
ஆனால் இதற்குப்பின்னால் ஒரு இழிவான சமூக அவலம் இருப்பது இப்போது தெரிய வருகிறது:
வலை ஒளியில் கண்ட சில செய்திகள் :
உயர் சாதியினர் மட்டுமே வீட்டுக்கு மேல்பூச்சு பூசலாமாம்
மற்றவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே பூசலாமாம்
இத விடக் கொடுமை இயற்கை காற்று கூட உயர் சாதியினரைத் தாண்டி பிறகுதான் மறவர்களுக்குப் போகவேண்டும்
இந்த விதிக்கு மாறாக முன்நாள் படை வீரர் – பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்- மலை அடிவாரத்தில் கட்டிய வீடு இடித்துத் தள்ளபட்டதாம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 17
தீண்டாமையை ஒழிக்கிறது
மற்றும் அதன் நடைமுறையை எந்த வடிவத்திலும் தடை செய்கிறது.
இந்திய பாராளுமன்றம் 1955 ஆம் ஆண்டில் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தை நிறைவேற்றியது. “மகாத்மா காந்தி கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் 17வது பிரிவு அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எழுபது ஆண்டுகள் கழிந்தும் சட்டம் செயல் படுத்தப்படாமல் சட்டமாக மட்டுமே இருக்கிறது
தீண்டாமைக்கு குற்றவியல் நடை முறையில் வழக்குத் தொடரப்படும்
இதுபிணையில் வர முடியாத குற்றம் (non bailable offence) என்று சொல்வார்கள்
யாரைக்குற்றம் சொல்வது ? யாரைத் தண்டிப்பது ?
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
091022024 புதன
சர்புதீன் பீ
No comments:
Post a Comment