ஆரஞ்சு மிட்டாய்
1610224 புதன்
எனக்கு மிகவும் பிடித்த இளமைக்கால சுவை ஆரஞ்சு மிட்டாய்
அதோடு இணைந்து நினைவில் மிதந்து வரும் பாக்கு மிட்டாயும் தேன் மிட்டாயும்
கிடைக்காமலே போனது
பச்சைக் காகிதம் சுற்றிய நெய் மிட்டாய்
அகலமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் தேங்காய் மிட்டாய்
இவை இரண்டும் பாரிஸ் நிறுவன மிட்டாய்கள்
நல்லவை எல்லாம் காணாமல் போவதும் காலத்தின் கட்டாயம் போலும்
இளமை நினைவுகள் ---நீந்தினால் நீந்திக்கொண்டே இருக்கலாம்
ஒரு அளவில் கரை ஏறி நிகழ் காலத்துக்கு வருவோம்
அந்த இளைஞருக்கு வயது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை
எழுபது +தான்
உழைப்பு என்றால் அப்படி ஒரு உடல் உழைப்பு
காலை முதல் மாலை வரை வெய்யில்,குளிர் எதற்கும் அசராத உழைப்பால் மெலிந்து உரமேறிய உடல்
பால் பண்ணை உரிமையாளர் அவர்
நல்ல செல்வந்தர்
பணியாட்கள் ,உறவினர்கள் என்று பலபேர் இருந்தாலும் இவர் உழைத்துக்கொண்டே இருப்பார்
இவரைபார்த்தால் நோயே விலகி ஒடி விடும் என்று நினைப்பதுண்டு
இவரை கொஞ்ச நாளாக பார்க்க முடியவில்லை
வீட்டார் சொன்னதை நம்ப முடியவில்லை
உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார் என்றார்கள்
மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
வாய் புற்றுநோய் அவருக்கு
புகைத்தல் ,புகையிலை , பான்பராக் என எந்தப் பழக்கமும் கிடையாது
பின் எப்படி ?
அதுதான் உச்ச கட்ட அதிர்ச்சி
ஆரஞ்சுமிட்டாய் அவருக்குப் பிடிக்குமாம்
பிடிக்கும் என்றால் மிகவும் மிகவம் மிகவும் பிடிக்குமாம்
பிடித்ததனால் நிறையவே சாப்பிடுவாராம்
அதில் உள்ள வேதிப்பொருள்கள்தான் நோய்க்குக் காரணம் என்பது மருத்துவர் கருத்து
அளவுக்கு மிஞ்சினால் ஆரஞ்சு மிட்டாயும் நஞ்சுதான் போல
மருத்துவ மனையில் சேர்த்து இறைவன் அருளால் நோய் குணமாகி சில நாட்களில் வீடு திரும்புவாராம்
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு முழுமையான உடல் நலத்தையும் நீண்ட வாழ்நாளையும் அருள்வானாக
நிறைவாக
மருத்துவ மனைக்குப் போக வண்டியில் ஏறும் நொடி வரை உழைத்தாராம்
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
1610224 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment