Saturday, 19 October 2024

தமிழ்(மொழி )அறிவோம் பரை 20102024ஞாயிறு


                                        




 தமிழ்(மொழி )அறிவோம்

பரை
20102024ஞாயிறு
முந்தைய தலை முறையைக் குறிக்கும் ஒரு இரண்டே எழுத்துச் சொல்லுக்கு
என்ன குறிப்பு கொடுப்பது என்று மட்டுப்படவில்லை
முதல் எழுத்து திரை இயக்குனர் திரு பீம் சிங்கை ஓரளவு நினைவு படுத்தும
சொல்லின் மற்றொரு பொருள்
ஒரு அளவின் அலகு(unit of measurement)
என்ன அந்தச் சொல் ?
விடை
பரை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ கணேச சுப்பிரமணியம் -முதல் சரியான விடை
சோமசேகர்
அஷ்ரப் ஹமீதா
வேலவன்
தல்லத்&
வெங்கடேசன் –நன்றி விளக்கமான விடைக்கு
முயற்சித்த சகோ மெஹராஜ், ஆ ரா விஸ்வநாதன் இருவருக்கும் நன்றி
பரை
ஏழாம் தலைமுறை மூத்தப் பெண். பூட்டியின் பூட்டி
சிவசத்தி
அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41)
ஒரு அலகு (2 கன அடியும் 544M. M. 655.)
.
: நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை, பரன் + பரை
. ஏழு தலைமுறை என்போம். ஒரு தலைமுறை 60 ஆண்டுகள். ஈரேழு தலைமுறை என்போம். 7× 2× 60 = 840 ஆண்டுகள்
உறவுகளுக்குஇவ்வளவு சொற்கள் இருப்பது தமிழின் சிறப்பு
வேறு எந்த மொழியிலும் கிடையாது என்கிறார்கள்
இறைவன் நாடினால் நாளைஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௦௧௦௨௦௨௪
20102024ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment