Thursday, 3 October 2024

திருமறை குரான் ஆயத்துல் குரஸி 2:255 04102024 வெள்ளி

                                                 



 திருமறை குரான்

ஆயத்துல் குரஸி 2:255
04102024 வெள்ளி
----------அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.------------
-------.
இது எந்த குரான் வசனத்தின் பகுதி ?
விடை சுராஹ் 2 அல்பக்ரா (மாடு) வசனம் :255 ஆயத்துல் குரஸி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா – முதல் சரியான விடை
சிர்ஜுதீன்
ஹசன் அலி
ஷர்மதா
தல்லத் &
ஷிரீன் fபாருக்
ஆயத்துல் குர்ஸி
இறை வசனங்களின் அரியாசனம் என அழைக்கப்படும் இந்த வசனம் உலக அளவில் மிக அதிகமாக மனனம் செய்யபபட்டு எழுதப்படும் ஓன்று
“. ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன
. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.
அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.
அவனது இருக்கை, வானங்களையும்,5 பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.”
திருக்குர்ஆன் 2:255F
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
30ரபியுல் அவ்வல்(3) 1446
04102024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment