Thursday, 31 October 2024

திருமறை குரான் சுராஹ் 80 கடுகடுத்தார் 01112024 வெள்ளி






 திருமறை குரான்

சுராஹ் 80 கடுகடுத்தார்

01112024 வெள்ளி

கடுகடுப்பாகத் துவங்கும் சூராஹ் எது ?
காரணம் என்ன ?
விடை சுராஹ் 80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத்---முதல் சரியான விடை
சிராஜுதீன்
பீர் ராஜா
ஷிரீன் fபாருக் &
ஷர்மதா
விளக்கம்
80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-ؕ‏
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
இறை வசனங்கள் தெளிவாக பொருள் விளங்கும்படி இருக்கின்றன
இன்னும் விளக்கம்
(சகோ சிராஜுதீன்)
ஒரு நாள் நபி (ஸல்) குறைஷி தலைவர்களிடம் தாவா செய்துக்கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி அங்கு வந்தார்கள். அவர்கள் குறைஷிகள் மத்தியில் இழிவாக பார்க்கப்பட்டவர். ஆகவே நூஹ் (அலை) அவர்களது சமுதாயம் கூறியது போல இந்த குறைஷிகளும் அங்கிருந்து சென்றுவிடுவார்களோ என்று அஞ்சி முகத்தை கடுகடுப்பாக்கி முகத்தை திருப்பிக்கொண்டார்கள். இதைக்கண்டித்து அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கி வைத்தான் என தஃப்ஸிர் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
சகோ தல்லத்
அத்தியாயம் 80
2ம் வசனத்தில் காரணம் உள்ளது.
ஒருவரின் ஊனத்தை வைத்து(தோற்றத்தை வைத்து)எடைபோடவோ முகம் சுளிக்கவோ) கூடாது என்பதை உணர்த்த இறக்கிஅருளப்பட்ட அத்தியாயம்
சுருக்கமாக
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை இறைவன்
நபி ஸல் அவர்களிடம் சொல்வது போல் உலக மக்கள் அனைவருக்கும் சொல்கிறான்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்

01112024 வெள்ளி
28 ரபி உல் ஆகிர் (4) 1446
சர்புதீன் பீ

No comments:

Post a Comment