Saturday, 12 October 2024

தமிழ் (மொழி )அறிவோம் வியங்கோள் வினைமுற்று 13102024 ஞாயிறு





 தமிழ் (மொழி )அறிவோம்

வியங்கோள் வினைமுற்று
13102024 ஞாயிறு
எங்கிருந்தாலும் வாழ்க,
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
அருமையான படம் நெஞ்சில் ஓர் ஆலயம்
அதில் அருமையான பாடல் எங்கிருந்தாலும் வாழ்க
அதில் துவக்க வரிகளில் ஒரு சொல் திரும்பத் திரும்ப வருகிறது
அந்த
சொல்லுக்கு –சொல்லுக்கு
இலக்கணக் குறிப்பு என்ன ?
மிக எளிதான நேரடி வினா
விடை
வியங்கோள் வினைமுற்று
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
மீ மு இஸ்மாயில் –முதல் சரியான விடை
வேலவன் -விளக்கத்துக்கு நன்றி
ஹசன் அலி
தல்லத்
கரம்
ஷர்மதா
கணேச சுப்பிரமணியம்
நூர்
கத்தீபு மாமூனா லெப்பை
சிராஜுதீன் - விளக்கத்துக்கு நன்றி&
சோமசேகர்
வியங்கோள் வினைமுற்று.
வியங்கோள் என்பது ஒரு செயலைச் செய்யக்கோருவது.
வினைமுற்று அந்தச் செயல் நிறைவடைந்ததை குறிப்பது.
இந்தச் சொல்லின் இறுதியில் வரும் க, இய, இயர் என்பதை நீக்கினால் அது கட்டளைச் சொல்லாக மாறும்.
.
எடுத்துக்காட்டு: வாழ்+க
வாழ்+ இய= வாழிய
வியங்கோள் வினை,. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் என நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது
. இவை இரு பால் ஐந்திணை மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௩௧௦௨௦௨௪
13102024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment