Saturday, 26 October 2024

தமிழ் (மொழி )அறிவோம் வேதாளம் சொல்லும் கதை 27102024 ஞாயிறு

 




தமிழ் (மொழி )அறிவோம்

வேதாளம் சொல்லும் கதை
27102024 ஞாயிறு
இன்று ஒரு மாறுபட்ட பதிவு
பள்ளிப் பருவத்தை நினைவு கூறும் பதிவு
விக்ரமாதித்தன் கதை அந்தக்கால சிறுவர மாத இதழான
அம்புலிமாமாவில் தொடர்கதையாக வந்து மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது
“தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன்”
என்று ஒரே மாதிரியாக ஒவ்வொரு மாதமும் துவங்கும்
மிகச் சுருக்கமாக கதையின் கருத்தை மட்டும் சொல்கிறேன் :
(விக்ரமாதித்தன் –சுருக்கமாக விக்ரம் )
ஒரு யாகத்திற்கு விக்ரமனுக்கு வேதாளம் தேவைப்படுகிறது
(முருங்கை) மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளத்தைக் கைப்பற்றி விக்ரம் தன தோளில் சுமந்து செல்லும்போது வேதாளம் ஒரு கதை சொல்லி ,கதையின் நிறைவாக ஒரு கேள்வி கேட்டு விட்டு
“இதற்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும் என்று எச்சரிக்கும்
விக்ரம் பதில் சொன்னவுடன் அவன் மௌனம் கலைந்ததால் வேதாளம் பறந்து மரத்துக்குப் போய்விடும்
தொடர்ந்து முயற்சி செய்த விக்ரமுக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கும்
வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் விக்ரம் மௌனம் காப்பான்
ஆனால் அவன் தலை வெடிக்காது
வேதாளத்தைக் கொண்டு போய் யாகத்தை நிறைவு செய்து விடுவான்
அன்று வேதாளம் கேட்ட கேள்வி என்ன ?
அதற்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் விக்ரம் தலை வெடிக்காதது ஏன்
இதுதான் இன்றைய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
விடை
மிகச் சுருக்கமாக
A அப்பா A1 மகன்
B அம்மா B1 மகள்
எப்படியோ அப்பா A மகள் B1 ன்னை திருமணம் செய்கிறார்
அதே போல் அம்மா B மகன் A1ன்னை
இந்த இரு இணைகளுக்கு குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளுக்குள் என்ன உறவு முறை ?
இது விடை இல்லாத ஒரு வினா
எனவே விக்ரம் மௌனம் காப்பான்
ஆனால் அவன் தலை வெடிக்காது
வேதாளத்தைக் கொண்டு போய் யாகத்தை நிறைவு செய்து விடுவான்
இந்தக்கதைதான் அபூர்வ ராகங்கள் படத்துக்கு கருவாக அமைந்தது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முழுமையான சரியான முதல் விடை –நன்றி
வேதாளம் விக்கிரமாதித்தனுக்குக் கூறிய இறுதிக்கதை பின் வருமாறு:
ஒரு அரசனும் அவனுடைய வளர்ந்த மகனும் ஒரு சமயம் ஒரு பாதையில் நடக்கையில் இரண்டு பேரின் நடந்த காலடித் தடம் கண்டார்கள். ஒருவர் கால் பதிவு பெரிதாகவும் மற்றொருவருடையது சிறிதாகவும் இருந்தன.
எதிரில் வந்த வழிப்போக்கனை இத்தடங்கள் பற்றி வினவ, இரு வளர்ந்த பெண்கள் முன்னால் செல்கிறார்கள், அவர்கள் காலடிகள்தான் இவை என்றான்.
அரசன் 'உன் அம்மா இறந்து விட்டார், ஆகவே பெரிய காலடித் தடம் உடைய பெண்ணை நானும், சிறிய காலடி உள்ள பெண்ணை நீயும் மணந்து கொள்வோம்' என, மகனும் உடன்பட, வேகமாகச் சென்று அப்பெண்களைத் தடுத்தனர்.
அப்பெண்கள் ஒரு இளம் பெண்ணும் அவளுடைய கணவனை இழந்த தாயும் ஆவார்கள். அரசனும் மகனும் அவர்களை மணம் புரியக் கேட்க அவர்களும் சம்மதித்தனர்.
ஆனால் ஒரு சிக்கல். தாயின் காலடி சிறிதாகவும் மகளின் காலடி பெரிதாகவும் இருந்தது.
இருந்தாலும் அரசன் முதலில் ஒப்புக்கொண்டபடி தகப்பன் பெரிய கால் பாதமுடைய மகளையும், மகன் பெரிய பாதமுடைய தாயையும் திருமணம் புரிந்தனர்.
காலப் போக்கில் அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.
தாயின் குழந்தைக்கு, மகள் குழந்தையின் உறவு என்ன?
மகள் குழந்தைக்குத் தாயின் குழந்தையின் உறவு என்ன?
அவர்கள் தாய், தந்தைகள் என்ன உறவு?
வேதாளம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முயன்ற விக்கிரமாதித்தனுக்குத் தலை சுற்றியது.
எப்பதிலும் கூற முடியவில்லை.
மொத்தம் 23 கதைகளுக்கு பதில் கூறிய விக்ரமன் இந்த 24 வது கதைக்கு உறவின் முறை தெரியாத காரணத்தால் பதில் தெரியாதால் அனைத்து கதைக்கும் பதில் கூறிய விக்ரமன் மீது இரக்கம் கொண்ட வேதாளம் தான் நயவஞ்சக முனிவன் ஒருவனால் விக்ரமனை வெல்ல சூழ்ச்சி செய்து அனுப்பட்ட கதையைக்கூறி பின்னர் அவனை வெல்வதற்கு விக்ரமனை அழைத்து சென்று வெற்றி பெற உதவியது.
தல்லத்-சுருக்கமான சரியான விடை
ஓரளவு சரியான விடை அனுப்பிய சகோ
கணேச சுப்பிரமணியம், சிவ்சுப்பிரமணின்
குறிப்புகள் அனுப்பிய சகோ ஹசன் அலி மூவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௭௧௦௨௦௨௪
27102024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment