நிறைவுப்பகுதி
குறுக்குத்துறை
நெல்லை சிற்றுலாவின் நிறைவுப்பகுதியாக நான் போனது குறுக்குதுறை
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் ( ஆகஸ்ட் 2016) திருநெல்வேலி
வாழ்க்கை பற்றி மூன்று நீளமான பகுதிகளில் விரிவாக எழுதினேன்
அதில் குறுக்குத்துறை வீடு பற்றி என் கனவு இல்லம் என்று
குறிப்பிட்டிருந்தேன்
அந்த அளவுக்கு இந்த வீடு எனக்குப்பிடிக்கும் அதையெல்லாம் இப்போது
திரும்ப சொல்லும் எண்ணம் இல்லை
இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழ்நிலை
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை
எப்போதாவது எட்டிப்பார்க்கும் எட்டாம் எண் பேருந்து
மிதி வண்டி இருந்ததால் எனக்கு போக்குவரத்து பிரச்சினை கிடையாது
வீட்டை ஒட்டி நகராட்சி குடி நீர் சேவையின் நீர் தொட்டிகள் பரந்து
விரிந்து ஏரி போல் தோற்றமளிக்கும்
இப்படி ஒரு அழகான கனவு இல்லம் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்திருப்பதாய் என் தம்பி சிலகாலம் முன்பு
குறிப்பிட்டிருந்தார்
அதே நினைவில் ஒரு கனத்த இதயத்துடன் போய் இறங்கினேன்
ஒரு பெட்டிக்கடைகாரரிடம் நாங்கள் குடியிருந்த வீடு பற்றிக் கேட்டேன்
மிகவும் தெரிந்தவர் போல் கமிஷனர்வாள் மகனா வாங்க வாங்க என்று
வரவேற்றார்
இதுதான் அந்த வீடு உள்ளே போய்ப் பாருங்கள் என்று சொன்னார்
பெயர்ப்பலகையில் வேறு எதோ எழுதியிருக்கிறதே என்று கேட்டேன்
ஆமாமா இடிந்து கிடந்த வீட்டை அழகாகக் கட்டி இப்போது மாநகராட்சி
நடத்தும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியாக மாற்றி விட்டார்கள் ரஎன்றார் அவர்
உள்ளே போய்ப் பார்த்து விடுதிக் காப்பாளரிடம் சிறிது நேரம் பேசி
விட்டு கையில் இருந்த ஒரு சிறிய தொகையை நன்கொடையாகக் கொடுத்தேன்
மனதில் ஒரு திருப்தி சிதிலமடைந்த கட்டிடத்தை எதிர்நோக்கி கனத்த
இதயத்துடன் வந்த எனக்கு பலருக்கும் அதிலும் ஆதரவற்றோருக்கு புகலிடமாக அது
மாறியிருப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது
அத்தா பணி ஒய்வு பெற்ற குறுக்குத்துறையோடு நெல்லை நினைவலைகளும்
இப்போதைக்கு ஒய்வு பெறுகின்றன
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 27082019 Tue
No comments:
Post a Comment