நகராட்சி உயர்நிலைப்பள்ளி
கல்லூரிக்கு அடுத்து உயர்நிலைப்பள்ளி
நான் படித்தது இல்லை
என் தம்பி சகாபுதீன் பதினொன்றாம் வகுப்பு (பள்ளி நிறைவு) படித்தது
ஆங்கிலப்பாடத்தில் சிறப்பான மதிப்பெண் பெற்றார்
இப்போது அவர் முனைவர் சகாபுதீன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக
சிறப்பாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்
தன் பணிக்காலத்தில் பணிரெண்டு முனைவர்களுக்கு வழிகாட்டி உருவாக்கியவர்
இப்போது இரண்டாம் முறையாக தன் துணைவியுடன் ஹஜ் புனிதப் பயணத்தில்
இருக்கிறார்
இந்தப்பள்ளியில் நான் படிக்காவிட்டாலும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
என்பதால் அதன் தலைமை ஆசிரியர் திரு அருணாச்சலம் நகராட்சி ஆணையரான எங்கள் அத்தாவை
அலுவலக முறையில் சந்திக்க வீட்டுக்கு
வருவதுண்டு
அத்தாவின் பணி ஓய்விற்குப்பிறகு நட்பு முறையில் அவ்வப்போது வீட்டுக்கு
வருவார்
. ஒழுக்கத்தை நிலை நாட்டுவதில் மிகக்கண்டிப்பானவர்
அதே பள்ளியில் இன்னொரு ஆசிரியர் சார்வாள் என அன்புடன் அழைக்கப்படும்
ஜான் அருமை தேவதாஸ் – ஒல்லியான உருவம் மிகத்திறமையான ஆசிரியர் என்று சொல்வார்கள்
அவர் துணைவி மணியம்மை நகராட்சிப் பணியில் இருந்தார்கள்
இங்கும் அலுவல் முறை தொடர்பாகத் துவங்கியது குடும்ப நட்பாய் மாறியது
பள்ளியின் கட்டிட அமைப்பை நான் கல்லூரிக்குப் போகும்போது பார்த்து
ரசித்ததுண்டு
கல்லூரிக்கு மிக அருகில்தான் பள்ளி
ஒரு முறை முக நூலில் என் பதிவு தடை செய்யப்பட்டதால் ஒவ்வொரு
சொல்லையும் நிதானித்து சிந்தித்து எழுத வேண்டிய கட்டாயம்
இது எண்ண ஓட்டத்தையும் எழுத்து வேகத்தையும் மட்டுப்படுத்துகிறது
தடை பற்றி நிறையபேர் கருத்துத் தெரிவித்து ஆலோசனைகளையும்
வழங்கினார்கள்
எல்லோருக்கும் மிக்க நன்றி
ஒரு வழியாக கல்லூரிக்கதையை பெயர் மாற்றி கல்லூரியின் பெயரில் இருந்த
மதம் பற்றிய சொல்லையும் இறை வணக்கப்பாடலையும்
என் வலைநூல் முகவரியையும் நீக்கி முகநூலில் நேற்று இரவு வெளியிட்டேன். இன்று வரை
தடை எதுவும் வரவில்லை
செருப்புக்கு ஏற்றார்போல் காலை அங்குமிங்கும் வெட்டி காலை
செருப்புக்குள் நுழைத்து விட்டேன்
எப்போதோ படித்த துணுக்கு ஓன்று நினைவில் வருகிறது
கணினிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய காலம்
இந்த மாதம் மின் கட்டணம் $ ௦ (௦ டாலர் ) செலுத்த வேண்டும் என
அறிவிப்பு ஒரு வீட்டுக்கு வருகிறது
நாம்தான் கட்டணம் செலுத்த வேண்டியதில்லையே என் அவர் அதை மறந்து
விடுகிறார்
ஆனால் தொடர்ந்து அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது . இன்ன நாளில்
கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இறுதி அறிவிப்பும்
வருகிறது
குழம்பிப்போன அவர் சற்று சிந்தித்து விட்டு ஒரு காசோலையில் தொகை ௦
டாலர் என்று எழுதி மின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறார்
௦ டாலர் பெற்றுகொண்டோம் நன்றி
என்று பதில் வருகிறது
இது சற்று அதிகப்படியான கற்பனையாகத் தெரியலாம்
ஆனால் ஒரு கல்லூரிப்பெயரில் வந்த இந்து என்ற சொல்லுக்காக தடை செய்தது
கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது
கணினிகள் மனிதனை ஆளத்துவங்கி விட்டன
நெல்லை நினைவலைகள் 8
சில நாட்களுக்குப்பின்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 20082019
Tue
No comments:
Post a Comment