Tuesday, 20 August 2019

நெல்லை நினைவலைகள் 6 பேட்டை இந்துக்கல்லூரி






பேட்டை இந்துக்கல்லூரி


                                                                                                                                                                                              
பேட்டை
  ம தி தா இந்துக்கல்லூரி வாசலில் நிற்கிறேன் சரியாக அரை நூற்றாண்டு கழித்து
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்  நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
கல்லூரியின் இறைவணக்கப்பாடல்  காற்றில் மிதந்து வந்து என் காதில் ஒலிப்பது போல் ஒரு பிரமை
உடலும் உள்ளமும் சிறகடித்துப் பறப்பது போல் ஒரு பரவசம்
கல்லூரியின் பெயர் தாங்கிய பெரிய நுழைவு வழி
பெரிய வாயில் (கேட்)  வாயில் காப்போன்
இதெல்லாம் முன்பு இல்லாதவை
வெற்று இடமெல்லாம் இப்போது பசுமையாக
பழைய கட்டிடங்களுடன் கலந்த புதியவை
கல்லூரிக்குள் நுழைந்து ஒரு ஐந்து நிமிடம் கல்லூரிக்காற்றை உள்வாங்கி விட்டு வந்து விட எண்ணித்தான் உள்ளே நுழைந்தேன்
எதிரே முதல்வர் அறை  . முடிந்தால் அவரைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று  அங்கு போய்   என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்   
முதல்வர் முனைவர் திரு சுப்ரமணியன் அவர்கள் என்னை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிய விதம் ஒரு  வி ஐ பீ போல் என்னை உணர வைத்தது
அன்புடன், பரிவுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு தன் பணியாளை என்னுடன் அனுப்பி நான் படித்த வேதியல் துறைக்கு அழைத்துச்சென்று துறைத்தலைவரிடம் அறிமுகப்படுத்தி வைக்கச் சொன்னார்
அங்கே போய் பார்த்து விட்டு திரும்ப வந்து தன்னை சந்திக்கும்படியும் அன்புக்கட்டளை இட்டார்
மனதில் ஒரு சிலிர்ப்புடன் போன எனக்கு மேலும் ஒரு உற்சாக வரவேற்பு
துறைத்லைவி பேராசிரியர் கவிதா தன் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினரை உபசரிப்பது போல் என்னை வரவேற்றார்
நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்த ஒரு நல்ல நண்பி  போல் மனம் விட்டுப்பேசினார் 
 குடும்ப செய்திகள் , பெண்ணுரிமை ,பெண்ணிடம் பெற்றோருக்கு உள்ள உரிமைகள் என பலவற்றையும் பேசினோம்
தோழி ஒருத்தி இருந்தால் என்ற ஆட்டோகிராப் படப்பாடல் நினைவில் மலர்ந்தது 
உடன் பணியாற்றும் முனைவர் அனிதா பேராசிரியர் ஜெயபால் இருவரையும் அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார்
வேதியல் சோதனைக்கூடத்துக்கும் வகுப்புக்கும் அழைத்துச் சென்றார்
முன்பு முழுக்க முழுக்க – மாணவர், ஆசிரியர் – என ஆண்கள் மட்டுமே இருந்த கல்லூரியில் இப்போது மாணவிகள் ,பெண் பேராசிரியர்கள்
மாணவ மாணவிகளுக்கு சீருடை
சில முதுநிலைப் படிப்புகள் என  மாற்றங்கள் பற்றியும் சொன்னார்
அரசு விதித்த கட்டணத்துக்கு மேல் எந்த வகையிலும் பணம் கேட்காமல் ஒரு சிறந்த கல்விக் சேவையில் கல்லூரி இயங்கி வருவது பற்றிப் பெருமை அடைந்தார்
பின்பு முதல்வர் அறைக்கு என்னுடன்  வந்தார்
நான் படித்தபோது இருந்த முதல்வர் ,திரு சோமசுந்தரம் துணை முதல்வர் ஜெகநாதன் , ஆண்ட்டிமணி என அழைக்கப்பட்ட வேதியல் துறை தலைவர் திரு பாலசுப்ரமணி விரிவுரையாளர்கள் திருவாளர்கள் கல்யாண சுந்தரம் (முதல்வர் மகன்) ,ராமலிங்கம் சிதம்பரம் அருணாச்சலம்  இன்னும் பலரும் என நினைவில் வந்தார்கள்
உடன் படித்தவர்களில் நினைவில் நிற்கும் பெயர்கள் ராமகோபால் சாமிதுரை சுந்தரம் பூவலிங்கம் ,குற்றாலிங்கம் அப்துல் காதர் கனகசபாபதி தெய்வு இப்ராஹீம்
இதில் சுந்தரமும் அப்துல்காதரும் பின்னாளில் கனரா வங்கியில் என்னுடன் பணியாற்றினார்கள்
ராமகோபால் அடிக்கடி திரைப்படம் மதியக்காட்சிக்கு போவர் .சுபதினம் என்ற படத்திற்கு அவர் வழக்கம் போல் போக, அன்று வகுப்பில் உள்ள அனைவரும் அதே படத்திற்குப் போய்விட அன்று மாலை வகுப்பே நடக்கவில்லை
அறிஞர் அண்ணா மறைவும் கலைஞர் முதல்வரானாதும் என் கல்லூரிக்காலத்தில்
கல்லூரி இலக்கிய மன்ற கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர்
பெய்எனப்பெய்யும் மழை
என்ற குறள் வரிக்கு புதிய ஒரு விளக்கம் சொன்னார்
பட்ட வகுப்பு முதல் ஆண்டு நான் பொள்ளாச்சி ந க ம கல்லூரியில் படித்தேன்
அத்தாவின் பணியிட மாறுதலால் இரண்டு மூன்றாம் ஆண்டுகள் இந்துக்கல்லூரியில்
கல்லூரி மட்டுமல்ல . பல்கலைக்கழகமும் மாற்றம்  பொள்ளாச்சி சென்னைப் பல்கலைக்கழகம் நெல்லை மதுரைப் பல்கலைக்கழகம்.
நல்ல வேளை. பாடதிட்டத்திலோ தமிழ் ஆங்கில பாட நூல்களிலோ மாற்றம் இல்லை
பொள்ளாச்சியில் துணைப்பாடம் இயற்பியலும் தாவர இயலும் . இந்துக்கல்லூரியில் துணைப்பாடம் இயற்பியலும் கணிதமும் .
நான் மட்டும் விலங்கியல் மாணவர்களோடு தாவரவியல் துணைப்பாட வகுப்புக்குப் போவேன்   
என்னுடைய பட்டச் சான்றிதழில் துணைப்பாடம் ( நான் படிககாத)கணிதம் என்று குறிப்பிட்டிருக்கிறது
பேராசிரியர் கவிதாவோடு முதல்வர் அறைக்குப் போய் அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்
கொஞ்சம் இருங்கள் . அருகில் ஒரு நல்ல உணவு விடுதி இருக்கிறது . அங்கு சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறேன் சாப்பிட்டுவிட்டுப்போகலாம்என மிகவும் வலியுறித்திச் சொன்னார் பேராசிரியர்
.இல்லை இன்னும் பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று நான் சொல்ல சரி காப்பியாவது குடியுங்கள் என்று கல்லூரி உணவு விடுதிக்கு என்னுடன் வந்து காபி பிஸ்கட் வாங்கிக்கொடுத்து வழியனுப்பி வைத்தார்
 சில நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு சாப்பாட்டு நேரத்தில் போன நினைவுகள் நெஞ்சில் நிழலாடின   
மனம் முழுக்க மகிழ்ச்சி, குதுகலம் கலந்த ஒரு இனம்புரியாத ஏக்கத்தொடு நெல்லை சிற்றுலாவைத் தொடர்ந்தேன்
மீண்டும் 
நெல்லை நினைவலைகள் 7
சில நாட்களுக்குப்பின்

வலைநூல் முகவரி
sherfudinp.blogspot.com

B F W 180821019  sun












No comments:

Post a Comment