ரோசி ஹோம்
(110 திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெரு )
அத்தா பணி ஓய்வுபெற்ற பின் அலுவலக குடியிருப்பில் இருந்து நாங்கள் போன
வீட்டுக்குப் பெயர் ரோசி ஹோம்.பெயருக்குப்பொருத்தமாக இளஞ்சிவப்பு நிற வண்ணத்தில்
ஒரு புதிய வீடு
அதன் முகவரி 110--------தெரு
கூலக்கடை தெரு போல் மூச்சு முட்டும் நெருக்கம் கிடையாது
குறுக்குதுறை வீடு போல் தனிமையும் கிடையாது
மிக அருகில் பேருந்து நிறுத்தம் காய் கறி மீன் கடைகள் பள்ளிவாசல்
சிறிய உணவு விடுதிகள் மளிகைக் கடை எல்லாம்
அது போக தெருவிலேயே காய்கறி, மீன் அரிசி பருப்பு, எண்ணெய்தட்டை போளி
போன்ற தின்பண்டங்கள் எல்லாம் வரும்
பணி ஓய்வுக்குப்பின் அத்தாவுக்கு உற்ற நண்பராய் இருந்தவர் ஜனாப் த மு
அஜீஸ் அவர்கள்
மிகப்பெரும் செல்வந்தர் ஆனால் மிக எளிமையான தோற்றம் . மத நெறிகளை விடாமல்
கடைப்பிடிப்பவர்
பணி ஓய்வின் தாக்கத்தை குறைக்க அவரது நட்பு அத்தாவுக்கு உறுதுணையாக
இருந்தது உலக ஞானமும் மிக்கவர்
அவர்தான் அத்தாவுக்கு
வேம்படிக்கண்டர் என்ற கோரை மொத்த வணிகரிடம் வணிகத் தொடர்பு ஏற்படுத்திக்
கொடுத்தார்
அத்தாவின் நடை உடை பாவனயில்தான் எத்தனை மாற்றம் !!
கால் சராயிளிருந்து சாரம் (கைலி- நெல்லைத்தமிழில்) ஜிப்பா துண்டு
தொப்பி,தாடி ,
அதை விட நான் வியந்த மாற்றம் பையை எடுத்துக்கொண்டு அத்தா காய் கறி மீன் வாங்கக்கிளம்பியதுதான்
பதவியில் இருக்கும் போது வீட்டில் பணியாள் ஒருவர் கடைக்குப் போவது
போன்ற வெளி வேலைகளுக்காக இருப்பார் , அவரை அழைக்க மணி ஓன்று இருக்கும்.
சார்வாள் என அன்புடன் அழைக்கப்படும் ஜான் அருமை தேவதாஸ் நகராட்சிப்
பள்ளியில் ஆங்கில ஆசிரியர். அவர் துணைவி மணியம்மையும்நகராட்சி ஊழியர் . அவர்கள்
வீடும் பேட்டையில்தான் சார்வாள் , அவர்
துணைவி மக்கள் எல்லோரும் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டர்கள் மிக அன்பாகப்
பழகுவார்கள் அவர்கள் மகன் இன்பா தம்பி சகாவின் நண்பன்
அத்தாவின் பதவிக்காலத்தில் பெண்கள் அனைவருக்கும் திருமணம்
நிறைவேறியது.
இந்த வீட்டில் சில குழந்தைகள் பிறந்தன
சாகுலும் வஹாபும் கொஞ்ச நாள் ஒன்றாகத் தங்கியிருந்தார்கள் .சாப்பாட்டை
கண்டுகொள்ளாதது போல் இருக்கும் வகாப் சாகுலோடு போட்டிபோட்டுக்கொண்டு விரைவாக
சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும்
இந்த வீட்டில்தான் இருவருக்கும் சுன்னத் செய்ததாய் நினைவு
சில ஆண்டுகள் முன்பு நெல்லை பற்றி விரிவாக பல பகுதிகளாக எழுதி
விட்டேன்
அவற்றை திரும்ப எழுத வேண்டாம் என நினைக்கிறேன்
இப்போது வீட்டின் பெயர் ரோசி ஹோம் இல்லை .அந்தபெயர் இருந்த இடத்தில்
இப்போது வேறு சொற்கள் சிவ சிவா
மற்றபடி கதவு எண் உட்பட பெரிய மாற்றம் எதுவும் இல்லை
எழுதியதைத்தான் முகநூலுக்கு சற்று மாற்றி அனுப்ப வேண்டும்
விரைவில்
நெல்லை நினவலைகள் 9
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 22082019 Thu
No comments:
Post a Comment