நிறைவுரை
ஒய்வு எடுக்க எண்ணித்தான் ஒரு நாள் நெல்லையில் தங்கினேன் . இரவில்தானே
வண்டி ஒரு நாள் முழுதுமாகவா ஒய்வு தேவை .சில இடங்களையும் மைத்துனர் பீரையும்
பார்த்து வரலாம் என்று கிளம்பினேன்
பத்து இடங்கள் பார்ப்பேன் என்று எண்ணம் சிறிதும் இல்லை இறைவன் அருளால்
மட்டுமே இது நடந்தது
அரை நூற்றாண்டுக்கு முன் நான் கனரா வங்கியில் பணியைத் துவங்கிய வங்கி
நெல்லை சந்திப்புக் கிளைக்கு முதலில் போனதும்
அத்தா பணி நிறைவடைந்து
ஓய்வுபெற்ற குறுக்குத்துறை இல்லத்தில் சிற்றுலா நிறைவு பெற்றதும் just a coincidence
இறைவன் அருளால் துவங்கிய இடம் நிறைவு பெற்ற இடம் இரண்டிலும் மன
மகிழ்வோடு வெளியே வர முடிந்தது
கல்லூரிக்குப் போய் வந்தது மிக மிக உற்சாகமூட்டிய நிகழ்வு
1970 ஆம்
ஆண்டு நான் வங்கிப்பணியை நெல்லையில் துவங்கியது ஆகஸ்ட்
மாதம்
மூன்றாண்டுகளுக்கு முன் நெல்லை வாழ்வு பற்றி விரிவாக மூன்று பகுதிகளாக
எழுதியதும் ஆகஸ்ட் மாதம்தான்
இந்த சிற்றுலா போனதும் ஆகஸ்ட் மாதம்தான்
இதுவும் ஒரு தற்செயலான ஒன்றுதான்
ஏற்கனவே நெல்லை பற்றி விரிவாக எழுதியிருப்பதால் சிறு குறிப்புகளுடன்
படங்களை ஒரே பகுதியாக வெளியட நினைத்தேன் . அது ஒவ்வொரு இடமும் ஒரு பகுதியாக
மாறியது
சிற்றுலாவுக்குப்பின் மைத்துனர் பீரைப் பார்க்க அவர் கடைக்குப்போனேன்.
அத்திப்பழச்சாறு , மீன் சாப்பாடு , சிறப்பு இனிப்பு பீடா என்று தேநீர் என்று
தடபுடலாக உபசரித்தார் அவர் அத்தா சுல்தான் மாமாவின் உபசரிப்பு நினைவில் வந்தது
மைத்துனர் சிராஜுத்தீன் மகன் காதருக்கு அன்று நெல்லையில் பெண் குழந்தை
பிறந்த மருத்துவ மனை பீர் கடைக்கு மிக அருகில் இருக்கிறது .குழந்தையையும் போய்ப்
பார்த்து வந்தேன்
பீர் மகன் ஆஷிக் கடைகளுக்குப் போகவும் கைப்பேசியை சரி செய்து
கொடுக்கவும் பின் தொடரி நிலையத்துக்குப்
போகவும் மிகவும் உதவியாக இருந்தார்
முகம் சுளிக்காமல் புன்னகையுடன்
பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்
தானி ஓட்டுனர் திரு முருகன்
அனைவருக்கும் நன்றி
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கலந்த வணக்கம்
வழக்கம் போல் நினைவலைகள் பகுதிகளை என் துணைவியிடம் படித்துக்
காண்பித்தபோது இதெல்லாம் யாருக்காக எழுதுகிறீர்கள் என்று கேட்டார். உடனே என்
வாயில் வந்த பதில் எனக்காகத்தான்
ஆம் பத்துப்பகுதிகளையும்
வெளியிட்டபின் அலை அடித்து ஓய்ந்து வெள்ளம் வடிந்தது போல் மனம் அமைதியாகி விட்டது அதனால்தான் வண்ணச்சிதறல் போன்றவற்றை தள்ளி
வைத்து விட்டு நெல்லை நினைவலைகளை இந்த மாதம் முழுதும் எழுதினேன்
நிறைவாக
ஓடும் தொழிலாளர் கட்டுப்பாட்டாளர் அலுவலம்
இது நான் நெல்லை தொடரி சந்திப்பில் பார்த்த ஒரு பெயர்ப்பலகை
Office of
the Crew Controller
என்பதன் தமிழ் பெயர்ப்பு இது
இது சரியான பெயர்ப்பா ?
தொடர்ந்து வேறு பதிவான பதிவுகளில் ஒரு இடைவெளிக்குப்பின் சந்திப்போம்
பதிவான வழக்கமான என்பதன்
நெல்லைத்தமிழ்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 27082019 Tue
No comments:
Post a Comment