தேர்வு முடிவுகள் வெளியான அன்று அந்தப்பெண் முகத்தில் ஏமாற்றத்தின்
அறிகுறி . நன்றாகப்படித்து எழுதிய தேர்வு ஒன்றில் அவருக்கு தோல்வி என்கிறது வெளியான முடிவு
தந்தையிடம் போய் மறுகூட்டல், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க அனுமதி
கேட்கிறார். தந்தை மறுத்து
“நீ என்னதான் நன்றாக எழுதியிருந்தாலும் இப்போது என் பதவிக்காகத்தான்
மறுகூட்டலில் உனக்கு மதிப்பெண் கூடுதலாகப் போட்டு உன்னை வெற்றி அடையச் செய்தார்கள்
என்று ஒரு பேச்சு வரும்,. அதை நான் விரும்பவில்லை” என்கிறார்
தோல்வியைத் தாங்க முடியாத
அந்தப்பெண் உயிரை மாய்த்துக்கொள்கிறார்
மொரார்ஜி தேசாய் பற்றி, அவர் நேர்மை பற்றி மாறுபட்ட கருத்துகள் பல இருந்தாலும் அண்மையில்
அவர் பற்றிப் படித்த இந்த செய்தி மனதை நெருடியது
ஆம் தற்கொலை செய்துகொண்ட அந்தப்பெண் மொரார்ஜியின் மகள். அப்போது
மொரார்ஜி அன்றைய பம்பாய் மாநில அமைச்சர்
(கொஞ்சம் வாம்பு மீறிய நேர்மை போல் எனக்குத் தெரிகிறது )
இது போன்ற நேர்மை நிகழ்வுகள் பல தலைவர்கள் வாழ்வில்
கேள்விப்பட்ட்டிருக்கிறோம்
இப்போது அதெல்லாம் பழங்கதையாக , வரலாறாக மாறி விட்டது
பொது வாழ்வு, தனி வாழ்வு, பொதுப்பணம், தன பணம் என்றெல்லாம்
பிரித்துப்பார்ப்பது மறைந்து விட்டது.
தேனில் கையை விட்டவன் --------என்று
பழமொழி வேறு
ஒரு சில அதிகாரிகள் நேர்மையாக இருக்கிறார்கள் .ஆனால் அது தவறு என்பது
போல் அவர்கள் சிரமப்படுத்தப்படுகிரார்கள்
இதையும் மீறி சில நேர்மை தவறாமல் பணியாற்றும் அதிகாரிகள், அரசு
ஊழியர்கள் எல்லா நிலைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும்
ஒரு செய்தி
பொதுவாழ்வில் நேர்மை எப்படி இருக்க வேண்டும் ?
படியுங்கள்
கலிபா உமர் சிறந்த ஆட்சியாளர், நேர்மை தவறாதவர், நீதி நெறியைக்
கடைபிடிப்பவர் ,இவரைப்பற்றி நிறைய எழுதலாம்
ஒரு சில-
நாணயம் வெளியிட்டது, நகரங்களில் நீதிமன்றங்கள் நிறுவியது, அஞ்சலகங்கள்
ஏற்படுத்தியது கூபா , புசரா என இரு புதிய நகரங்களை உருவாக்கியது
இவரது நேர்மைக்கும், நீதிக்கும், ஆட்சித்திறனுக்கும் சான்று சொல்லும் நிகழ்வுகள பல பல
ஒன்றே ஒன்றை இங்கு பார்ப்போம்
நறுமணம் மிக்க கஸ்துரி உமருக்கு அன்பர் ஒருவர் அனுப்பி வைக்கிறார்.
நிறைய இருக்கிறது. தேவைக்குமேல் எதுவும் வைத்துக்கொள்ளும் வழக்கம் களிபாவுக்குக்
கிடையாது . எதுவாயிருந்தாலும் கிடைத்த அன்றே மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்துவிட வேண்டும்
இந்தக் கஸ்தூரியை பகிர்ந்து அளிக்கும்
பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று
கலிபா உமர் கேட்கிறார்
அவர் துணைவி ஆத்திக்கா அவர்கள் அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வருகிறார்கள்.
ஆனால் கலிபா மீண்டும் கேட்கிறார் யார் இந்தப் பொறுப்பை
ஏற்றுக்கொள்வார்கள் என்று
மீண்டும் ஆத்திக்கா அவர்கள் “ நான் ஏற்றுக்கொள்கிறேன் “ என்கிறார்கள்
மூன்றாவது முறையும் கலிபா கேட்கிறார் . துணைவி முன் வருகிறார்
அப்போது உமர் சொல்கிறார்
ஆத்திக்கா உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் . உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்த பொறுப்பையும் நீ செவ்வனே நேர்மையாக அப்பழுக்கு இல்லாமல் நிறைவேற்றுவாய்.
ஆத்திக்கா உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் . உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்த பொறுப்பையும் நீ செவ்வனே நேர்மையாக அப்பழுக்கு இல்லாமல் நிறைவேற்றுவாய்.
ஆனால் எனக்கு ஒரு தயக்கம், அச்சம்
கஸ்துரியை பங்கு வைத்து விநியோகிக்கும்போது உன்னை அறியாமல் அந்த நறுமணத்தை
உன் ஆடையில் துடைத்துக்கொள்வாய்
அதனால் நம் பங்குக்கு சற்று கூடுதலாகக் கஸ்தூரி வந்து விடுமோ என்ற
அச்சம்
அதைத் தவிர்க்கவே நான் இந்த வேலையே வேறு யாரிடமாவது ஒப்படைக்க
விரும்புகிறேன் . நீ என்னைத் தப்பாக நினைக்காதே “
இதுவும் சற்று அதிகமான நேர்மைதான் ஆனால், வரம்பு மீறாத நேர்மை
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
bfw02032020mon
No comments:
Post a Comment